Thursday, February 1, 2018

மிடில் க்ளாஸ் மேதாவிகளின் போதை தெளியுமா?



கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காவிகளைத் தாண்டி மோடிக்காக ஓவராக கூவியர்கள் நடுத்தர வர்க்கத்தினர்கள்தான். ஐந்து லட்ச ரூபாய் வரை வருமான வரி விலக்கு என்ற வாக்குறுதி அவர்களுக்கு போதை கொடுத்தது.

அந்த போதை அவர்களது மதியை மயக்கியது. சிந்தனையை தடுமாறச் செய்தது.  மோடியின் மோசமான குணாம்சங்கள் எல்லாம் மறந்து போனது.  மோடியால் குஜராத்தில் ஓடியது ரத்த ஆறு என்ற உண்மையை விட போட்டோஷாப் மோசடிகளே பெரிதாகத் தெரிந்தது. எங்கெங்கோ நிகழ்ந்ததையெல்லாம் குஜராத்தின் சாதனைகளாக கூறப்பட்ட பொய்களை எல்லாம் தாங்களும் நம்பி பிறருக்கும் பரப்பினார்கள்.

ஆம்

மோடிக்கு விழுந்து விழுந்து ஆதரவு தெரிவித்தவர்கள் எல்லாம் படித்தவர்கள். நல்ல வேலைகளில் உள்ளவர்கள். பலரும் அணி திரட்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என்று ஏராளமானவர்கள் “வருமான வரி விலக்கு” என்ற  ஒற்றை அம்சத்தில் சறுக்கி விழுந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்பில் உள்ளவர்கள். அவர்களின் அமைப்புக்கள் எச்சரிக்காமல் இல்லை.  மோடியா, ராகுலா – எந்த தலைவர் என்பது முக்கியமில்லை. நம்மை ஆள வேண்டிய கொள்கை எது என்பதுதான் முக்கியம் என்று வழி நடத்தாமல் இல்லை.

அந்த எச்சரிக்கை ஒலியை கேளாமல் கண்களைத் திறந்து கொண்டே புதைகுழியில் விழுந்தார்கள். தேசத்தையும்  வீழ்த்தினார்கள்.

மோடி அரசின் இறுதி பட்ஜெட்டும் இன்று வந்து விட்டது.

“ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு” என்ற அவர்களின் கனவு கானல் நீராகி விட்டது.

இப்போதாவது அவர்கள் போதை தெளிய வேண்டும். தவறுக்கு வருந்த வேண்டும். தவறைத் திருத்திக் கொள்ள எப்படி மோடிக்கு ஆதரவாக கூவினார்களோ, அதை விட வேகமாக “மோடியை நம்பி ஏமாந்த கதை”யை பரப்ப வேண்டும்.


முகம் முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 

5 comments:

  1. Boss,

    முகம் முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

    karuthu sonna Mughathooda vaanu" solradhu sariya??

    -jawahar

    ReplyDelete
    Replies
    1. பாஸ், இங்கே முகம் என்று சொல்வதன் அர்த்தம் வேறு என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

      நாகரீகமாக எழுதுகிற யாரையும் முகம் காண்பிக்கச் சொல்லி நான் என்றும் சொன்னதில்லை.

      என் கோபம் முழுதும் அநாகரீகமாக, ஆபாசமாக, வக்கிரமாக எழுதுபவர்கள் மீதுதான். அப்படி அநாகரீகமாக எழுதுகிற ஒரு முகம் எனக்கு தெரிந்த முகம் என்பதாலும் அந்த குறிப்பிட்ட அனாமதேயத்திடம் அப்படி சொல்ல வேண்டியுள்ளது

      Delete
  2. கொள்கை தான் முக்கியம் என்றால் ராகுல் கூட பொருத்தம் அற்றவர்
    அவர் கூட முதலாளிகளின் அடிவருடிதான்
    காங்கிரஸ் , பாஜக இரண்டுமே முதலாளிகளின் நலனுக்காக மட்டுமே போராடுகின்றன
    வறுமை கோட்டு எல்லையை மனிதாபிமானம் இல்லாமல் நிர்ணயித்த மோசமான கும்பல் காங்கிரஸ் என்பதை மறுக்க முடியாதது

    ReplyDelete
    Replies
    1. ஆம். ராகுல் கூட தகுதியற்றவர்தான். சந்தேகமே இல்லை

      Delete
  3. Modi oru kenappaya..

    ReplyDelete