செந்தொண்டர்களுக்கு
பயந்து ஷூவை கழட்டி வீசி விட்டு புறமுதுகிட்டு ஓடிப் போன ஏ.டி.எஸ்.பி நாக.செல்வரத்தினத்தை
இரும்புக்கரம் கொண்டு கம்யூனிஸ்டுகளை அடக்கியதாக பாராட்டி வாழ்த்து சொல்லிய எச்.ராசாவுக்கு
இந்த வடிவேலு படத்தை அர்ப்பணிக்கிறேன்.
அந்த
பதிவிலே அந்த மிருகம் வேறு சிலவற்றையும் பிதற்றியுள்ளது.
கம்யூனிஸ்டுகள்
ஊர்வலம் போக இது ஒன்றும் கியூபாவோ சைனாவோ இல்லை. மோடியின் இந்தியா.
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் அரசியல் சாசனப்படி அங்கீகரிக்கப்பட்ட
ஒரு தேசியக் கட்சி. கேரளம், திரிபுரா ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சி.
பல லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி.
அக்கட்சி பேரணி நடத்தக் கூடாது என்று சொல்வது திமிர். ஆணவம். சாரணர் தேர்தலில் வெறும்
52 வாக்குகள் வாங்கிய இந்த ஜென்மத்திற்கு கம்யூனிஸ்டுகள் பற்றி வாய் திறக்க என்ன அருகதை
உள்ளது? தூத்துக்குடி சாலைகள் என்ன இவரது அப்பாவும் சீனியர் புரோகிதரின் பிழைப்பைப்
பறித்த அம்மாவாசை ஹரிஹரன் போட்டதா என்ன?
இது
மோடியின் இந்தியாவாம்?
இந்திய
வாக்காளர்களின் 33 % இளிச்சவாய்த்தனமாக ஆதரித்ததால் பிரதமராக உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறாரே
அந்த நரேந்திர மோடியின் இந்தியாவா?
ராஜஸ்தான்
முதல்வர் வசுந்தரா ராஜி உதவி செய்ததால் இந்தியாவை விட்டு ஓடிப் போன கிரிக்கெட் மோசடி
லலித் மோடியின் இந்தியாவா?
பதினோராயிரம்
கோடியை விழுங்கி விட்டு ஸ்விட்சர்லாந்து நாட்டி டாவோஸ் நகரில் முதல் மோடியோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்த நீரவ்
மோடியின் இந்தியாவா?
மூன்று
மோடிகளும் கேடிகள்.
No comments:
Post a Comment