Monday, February 5, 2018

திட்டமிடப்பட்டதா மீனாட்சி கோவில் தீ ?



 ‘கோயில்களை இந்து அறநிலையத் துறையிடமிருந்து மீட்பதற்காக” ஒரு மாநாடு பிப்ரவரி மாதம் நான்காம் தேதி அன்று சென்னையில் நடத்த திட்டமிடப்படுகிறது. அக்கூட்டத்தை ஏற்பாடு செய்பவரும் சிறப்புரையும் ஒருவரும்தான். “வேட்டியை மடிச்சுக்கட்டினா நானும் ரௌடிதான்” புகழ் ஹெ.ராசா.

இரண்டாம் தேதி இரவு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்படுகிறது. தீயணைப்புப் படை நெருப்பை அணைக்கிற போராடுகிற போதே “ கோயில்களை இந்து அறநிலையத்துறையிடமிருந்து மீட்போம்” என காவிகள் கோஷம் போடுகின்றனர்.

மூன்றாம் தேதியன்று காலை முதலே பல காவிகள் தங்கள் முகநூல் ஃப்ரொபைல் படத்தோடு கீழே உள்ள டிசைனை இணைத்துக் கொள்கின்றனர்.


நான்காம் தேதி சென்னையில் வெறியேற்றுகிறார் ராசா.

ராசாவுக்கு தான் எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க அயறாது பாடு படும் தமிழிசை அம்மையார் அவர்கள் “இந்து ஆலயங்களில்  உள்ள  மாற்று மதத்தவர்களின் கடைகள் அகற்றப்பட வேண்டும்” என்று சொல்லி தீ விபத்திற்கு மதச்சாயம் பூசுகிறார்.

இவற்றையெல்லாம் பார்க்கிறபோது அங்கே நடந்தது வெறும் விபத்தாக தோன்றவில்லை. கோயில்களை ஆக்கிரமிக்க காவிக்கூட்டம் செய்துள்ள மிகப் பெரிய சதிச்செயலாகவே தோன்றுகிறது.

ஜெர்மனி நாடாளுமன்றத்தை தீயிட்டு கொளுத்தி விட்டு அந்த பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்ட ஹிட்லரின் வாரிசுகள் அல்லவா இவர்கள்!

என்ன இந்த கோணத்தில் காவல்துறையோ அல்லது எடுபிடி அரசோ ஆராயாது.


கோயில்களை கொடியவர்களின் கூடாரமாக மாற்ற வழிகள் உண்டா என்று வேண்டுமானால் ஆராய்வதற்கு வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment