Monday, February 12, 2018

ஒரு ட்ராலி இருந்தா நல்லாத்தான் இருக்கும்!


நல்ல வேட்டைதான் இந்த வருடமும்



ரொம்ப ரொம்ப லேட்டா எழுதுகிற பதிவு இது.

இந்த வருடம் சென்னை புத்தக விழாவிற்கு பொங்கலுக்கு முன்பே சென்று விட்டேன். அரை நாள் விடுப்பு எடுத்து போனதால் கூட்டம் அதிகமாவதற்கு முன்பே போய்  பல பதிப்பகங்களில் நிதானமாக பார்த்து புத்தகங்களை வாங்க முடிந்தது. 

வாங்கிய நூல்களின் விபரங்களை பதிவு செய்யவும் அதற்கு இடம் கண்டு பிடிக்கவும் தாமதமானதால் பதிவும் தாமதமாகி விட்டது.  ஐந்தாறு புத்தகங்களை படித்து முடித்து விட்டேன் என்பது வேறு விஷயம். மனதுக்குள் போட்டு வைத்த பட்டியலில் இருந்த நூல்களில் பெரும்பான்மையான நூல்களை வாங்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது.  பட்டியல் கீழே உள்ளது.

ஜெயமோகன் குறை சொல்லி இருந்தது நினைவுக்கு வந்ததால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்பி தோழர் சோலை சுந்தரப் பெருமாளின் “தாண்டவபுரம்” வாங்கினேன்.  நந்தனார் குறித்த அவரது மறு வாசிப்பு நூலான “மரக்கால்” நூலை மறைந்த எங்கள் தோழர் சி.வெங்கடேசன் எனக்கு அன்பளிப்பாக அளித்தது நினைவுக்கு வந்து மனதை கனமாக்கி விட்டது.

வாங்க நினைத்த நூல்களில்  தோழர் இரா.முருகவேள் அவர்களின் “மிளிர்கல்” வாங்க மறந்து விட்டேன்.  நினைவுக்கு வந்த போது கிட்டத்தட்ட  கடைசி அரங்கிற்குப் பக்கத்தில் இருந்தேன். அங்கேதான் அவருடைய “செம்புலம்” வாங்கினேன். மிளிர் கல் கிடைக்கக்கூடிய பதிப்பகத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு கைகளும் கால்களும் கெஞ்சியது.

தோழர்கள் செ.சண்முகசுந்தரம், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் தொகுத்த “தை எழுச்சி” அப்போது விற்பனைக்கு வரவில்லை. சரி பிறகு பார்த்துக் கொள்வோம் என்று புறப்பட்டு விட்டேன்.

புத்தக விழாவுக்கு வந்ததன் நினைவாக திருவள்ளுவர் சிலை முன்பு ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டு  புறப்பட்டு விட்டேன்.



நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஓய்வு பெற்ற எங்கள் தோழர் வி.ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு தகவல் சொல்ல தொலை பேசிய போது “இப்போதான் உன்னை நெனச்சேன். புக் ஃபேருக்கு வந்திருக்கேன்” என்றார். ஆஹா, தானா வந்து மாட்டிக்கிட்டாரே என்று எண்ணியபடி அந்த இரு நூல்கள் பற்றிய விபரங்களைச் சொல்லி வாங்கி வருமாறு சொன்னேன். அவரும் வாங்கி வந்து விட்டார்.

அதனால் அந்த குறையும் நீங்கியது.

வாடகைக்காவது ட்ராலிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு ஆலோசனை அளித்திருந்தார். ஆம். அது அவசியம் என்பதை இரண்டு கட்டைப் பைகளை சுமந்து சுமந்து வலி கண்டு விட்ட என் கைகளும் வலியுறுத்துகிறது. அப்படி ஒரு ஏற்பாடு இருந்தால் புத்தக விற்பனை இன்னும் கூட அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

பபாசி யின் புதிய நிர்வாகிகள் அடுத்த வருடம் இந்த வேண்டுகோளை பரிசீலித்து அமலாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எண் பெயர் ஆசிரியர் தன்மை பக்கம்
1 வெண்ணிற இரவுகள் தஸ்தயேவ்ஸ்கி நாவல் புனைவு 120
    தமிழில் பத்மஜா நாராயணன்    
2 தப்பாட்டம் சோலை சுந்தரப் பெருமாள் நாவல் புனைவு 315
3 ஆட்டனத்தி ஆதிமந்தி கண்ணதாசன் புனைவு  78
4 போய் வருகிறேன் கண்ணதாசன் கட்டுரைகள் 240
5 சேரமான் காதலி கண்ணதாசன் நாவல் புனைவு 680
6 நிறங்களின் உலகம் தேனி சீருடையான் நாவல் புனைவு 303
7 வைகை நதி நாகரீகம் சு.வெங்கடேசன் கீழடி 151
8 அப்போதும் கடல் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் 174
9 வரலாற்றுப் போக்கில் தென்னகச் நொபொரு கராஷிமா வரலாறு 288
  சமூகம்      
10 பக்கத்தில் வந்த அப்பா ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் 160
11 வழக்கு எண் 1215/2015 வீ.பா.கணேசன் கருத்துரிமை வழக்கு 160
12 இன்குலாப் ஜிந்தாபாத் அறந்தை நாராயணன் வரலாறு 170
13 இடது பக்கம் செல்லவும் மதுக்கூர் ராமலிங்கம் அரசியல் 16
14 கார்ப்பரேட்டும் வேலை பறிப்பும் எஸ்.கண்ணன் வேலை பறிப்பு பற்றி 32
15 கலை ஆயுதமேந்திய  எஸ்.ஏ.பெருமாள் கட்டுரைகள் 88
  கம்யூனிஸ்டுகள்      
16 ஈ.கே.நாயனார் பி.ஸ்ரீரேகா வாழ்க்கை வரலாறு 64
17 தாண்டவபுரம் சோலை சுந்தரப் பெருமாள் நாவல் புனைவு 726
18 முள்கம்பிகளால் கூடு மாலதி மைத்ரி கவிதைகள் 92
  பின்னும் பறவை      
19 கீழைத்தீ பாட்டாளி நாவல் புனைவு 352
20 கல்லறை ரகசியம் சத்யஜித்ரே நாவல் புனைவு 135
    தமிழில் வீ.பா.கணேசன்    
21 மனசே டென்ஷன் ப்ளீஸ் நளினி உளவியல் 32
22 மனிதக்குரங்கு மனிதனாக ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் தத்துவம் 48
23 மோடி ஆட்சி சீத்தாராம் யெச்சூரி அரசியல் 80
    தமிழில் ச.வீரமணி    
24 தனிமையின் வீட்டிற்கு எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் 158
  நூறு ஜன்னல்கள்      
25 இந்திய வரலாற்றில்  ச.தமிழ்ச்செல்வன் வரலாறு 32
  இளைஞர்கள்      
26 காட்சிகளுக்கு அப்பால் எஸ்.ராமகிருஷ்ணன் திரைப்படங்கள் 80
27 பலூன் ஞானி நாடகம் 96
28 கபாடபுரம் நா.பார்த்தசாரதி நாவல் புனைவு 210
29 லால்சலாம் இ.எம்.எஸ் உதயசங்கர், உத்ரகுமாரன் வாழ்க்கை வரலாறு 70
30 மாயக்குதிரை தமிழ்நதி சிறுகதைகள் 168
31 மக்களிடமிருந்து மக்களுக்கு மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு அரசியல் 80
32 எழுதலை நகரம் எஸ்.ராமகிருஷ்ணன் சிறார் நாவல் 174
33 சாம்பல் நிற தேவதை ஜி.முருகன் சிறுகதைகள் 118
34 மிளிர் கல் இரா.முருகவேள் நாவல் புனைவு 270
35 சொற்களைத் தேடும்  ச.சுப்பாராவ் கட்டுரைகள் 96
  இடையறாத பயணம்      
36 செம்புலம் இரா.முருகவேள் நாவல் புனைவு 320
37 சாமிகளின் பிறப்பும் இறப்பும் ச.தமிழ்ச்செல்வன் கட்டுரைகள் 64
38 ஏழரைப்பங்காளி வகையறா எஸ் . அர்ஷியா நாவல் புனைவு 372
39 குறத்தியம்மன் மீனா கந்தசாமி நாவல் புனைவு 234
    தமிழில் பிரேம்    
40 ரத்தினக்கல் சத்யஜித்ரே நாவல் புனைவு 48
    தமிழில் வீ.பா.கணேசன்    
41 பத்துக் கிலோ ஞானம் இரா.எட்வின் கட்டுரைகள் 92
42 வியட்னாம் காந்தி வெ.ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு 110
43 இயக்கவியல், வரலாற்று ஸ்டாலின் மார்க்சியம் 48
  பொருள்முதவாதம் தமிழில் -இஸ்மத் பாஷா    
44 விடுதலைக்கான கருத்தியல் என் .குணசேகரன் மார்க்சியம் 48
45 ஜாதி, வர்க்கம், சொத்துறவு பி.டி.ரணதிவே சமூகம் 56
46 கர்ப்ப நிலம் குணா. கவியழகன் நாவல் புனைவு 336
47 அரசு ஊழியர் இயக்க  நெ.இல.சீதரன் தொழிற்சங்கம் 560
48 ஆயுத எழுத்து சாத்திரி நாவல் புனைவு 375
49 வெட்டாட்டம் ஷான் நாவல் புனைவு 266
50 சிவந்த கைகள் சுஜாதா நாவல் புனைவு 136
51 மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா நாவல் புனைவு 104
52 6961 சுஜாதா நாவல் புனைவு 72
53 ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா நாவல் புனைவு 46
54 எட்டு கதைகள் ராஜேந்திரசோழன் சிறுகதைகள் 96
55 சங்கராச்சாரியார்கள் மீது கி.வீரமணி கொலை வழக்கு 254
  கொலை வழக்கு      
56 தோழர்கள் மு.இராமசுவாமி நாடகம் 80
57 திருவள்ளுவர் திடுக்கிடுவார் நாமக்கல் ராமலிங்கம் திருக்குறள் பற்றி 80
58 பெரியார் ஒரு சகாப்தம் அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு 32
59 சோவியத்துக்கு பிந்தைய அ.மார்க்ஸ் கட்டுரைகள் 166
  உலகம்      
60 முதல் மதிப்பெண் எடுக்க நா.முத்துநிலவன் கல்வி 166
  வேண்டாம் மகளே      
61 காவிரி - நேற்று, இன்று, நாளை பெ.மணியரசன் காவிரி பிரச்சினை 208
62 காந்தள் நாட்கள் இன்குலாப் கவிதைகள் 142
63 வேதபுரத்தார்க்கு கி.ராஜநாராயணன் வாழ்க்கை வரலாறு 184
64 வைக்கம் போராட்டம் கு.வெ.கி.ஆசான் வரலாறு 26
64 திராவிட இயக்கத்தின் பேரா. க.அன்பழகன் அரசியல் 24
65 புட்டபர்த்தி சாய்பாபா? கி.வீரமணி சர்ச்சை 32
66 அரசியல் எனக்கு பிடிக்கும் ச.தமிழ்ச்செல்வன் அரசியல் 48
67 வாங்க சினிமாவைப் பற்றி கே.பாக்யராஜ் சினிமா பற்றி 142
68 தாத்தா பாட்டி சொன்ன  கழனியூரான் சிறுகதைகள் 96
  கதைகள்      
69 தேசிய இனப் பிரச்சினை பற்றி ஸ்டாலின் மார்க்சியம் 124
70 ஜிகாதி ஹெ.ஜி.ரசூல் கட்டுரைகள் 120
71 மூக்குத்தி காசி புலியூர் முருகேசன் நாவல் புனைவு 176
72 ஊர் சுற்றிப் புராணம் ராகுல சாங்கிருத்தியான் பயணம் 150
73 வர்க்கப்போரின் வரலாற்று கோவை கனகராஜ் தொழிற்சங்கம் 125
  நாயகர்கள்      
74 ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் ராகுல சாங்கிருத்தியான் வரலாறு 210
75 பகவத் கீதை - ஒரு ஆய்வு ஜோசப் இடமருகு கீதை பற்றி 150
76 1947 ச.தமிழ்ச்செல்வன் வரலாறு 32
77 இந்திய சுதந்திரப் போரும் பி.ஆர்.பரமேஸ்வரன்   63
  கப்பற்படை எழுச்சியும்      
78 தை எழுச்சி தொகுப்பு ;செ.சண்முகசுந்தரம் ஜல்லிக்கட்டு  442
    யமுனா ராஜேந்திரன் போராட்டம்  
    இர. இரா.தமிழ்க்கனல்    
         
         
         
         
        12711



1 comment:

  1. நல்ல தேர்வு. புத்தகங்களின் விலை எவ்வளவு என்பதையும் தெரிவித்திருக்கலாமே

    ReplyDelete