காஷ்மீர்
மாநிலத்தில் பாஜக தேசியக் கொடியை கையில் உயர்த்தியபடி ஒரு பேரணியை நடத்தியுள்ளது.
காஷ்மீர்
மாநிலத்தில் நடைபெறும் ராணுவ அத்து மீறல்களுக்கு எதிராகவா?
எல்லை
தாண்டி பயங்கரவாதிகள் வருவதை தடுக்க முடியாத கையாலாகத தனத்தை கண்டித்தா?
காஷ்மீர்
மாநிலத்துக்கென எந்த சலுகைகளும் மத்திய பட்ஜெட்டில் இல்லையே, அதை விமர்சித்தா?
இல்லை
காஷ்மீர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்திய அமைதி ஊர்வலமா?
நோ,
நோ, நோ
இதையெல்லாம்
பாஜகவிடமிருந்து நீங்களும் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்பது எனக்கும் தெரியும்.
ஆனால்
இந்த தேசியக்கொடி ஊர்வலம் எதற்கு என்பதை அறிந்தால் நீங்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைய வாய்ப்பு
இருக்கிறது.
காதுவா
மாவட்டத்தில் காஸனா என்ற கிராமத்தில் ஆசியா என்ற நாடோடி இனப்பெண் ஜனவரி மாதம் காணாமல்
போகிறாள். அவளைக் கண்டுபிடிக்க காவல் துறையிடம் முறையிடுகிறார்கள். மக்களிடம் கொந்தளிப்பு
ஏற்பட்ட பின்பு அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப் படுகிறது. அப்பெண் பாலியல் வன் கொடுமைக்கு
உள்ளாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளாள் என்பதும் தெரிய வருகிறது.
நீண்ட
விசாரணைக்குப் பிறகே குற்றவாளியைக் கண்டு பிடித்து கைது செய்துள்ளனர்.
குற்றவாளியை
கைது செய்த பின் போராட்டம் எதற்கு என்பதுதானே உங்கள் கேள்வி.
இங்கேதான்
ஒரு ட்விஸ்ட் வருகிறது.
கைது
செய்யப்பட்ட குற்றவாளி வேறு யாருமில்லை.
காஸனா
கிராமத்தை உள்ளடக்கிய ஹிராநகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் கஜூரியா என்ற உத்தம புத்திரன்.
அந்த
உத்தம புத்திரனை விடுதலை செய்ய வேண்டுமென்றுதான் பாஜக அதன் மாநிலச் செயலாளர் விஜய்
சர்மா என்ற இன்னொரு உத்தமனின் தலைமையில் பேரணி நடத்தியுள்ளது.
பாலியல்
வன் கொடுமை செய்தவனை காத்திட எல்லாம் உயர்த்தும்
அளவிற்கு பாஜக தேசியக் கொடியை மதிக்கிறது.
No comments:
Post a Comment