யார்
பேச வேண்டுமோ, அவர்கள் பேசுவதில்லை.
யார்
பேசக் கூடாதோ, அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
மோடியின்
நான்காண்டு ஆட்சியின் சீரழிவுகளில் இதுவும்
ஒன்று.
மூன்று
மூத்த அதிகாரிகளை புறம்தள்ளி முறைகேடாக இந்திய ராணுவத்தின் தளபதியானவர் பிபின் ராவத்.
மோடியின்
கண்ணசைவிற்கு ஏற்ப செயல்படுகிற,
சீருடை
அணிந்த காவியாக
மாறிவிட்ட
அவர் அவ்வப்போது ஏதாவது அபத்தமாக உளறி வாங்கிக் கொள்வார். வாய்ச்சொல் வீரரான ராவத்தின்
சமீபத்திய அறிக்கை ஒன்று எரிச்சலை ஊட்டியது.
“அகில
இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அஸ்ஸாமில் பாரதீய ஜனதா கட்சியை விட மிக வேகமாக வளர்கிறது.
இது கவலையளிக்கிறது”
எந்த
மாநிலத்தில் எந்த கட்சி, எந்த கட்சியை விட வேகமாக வளர்ந்தால் இவருக்கு என்ன பிரச்சினை?
பாஜகவை
விட வேகமாக வளர்வது பற்றி கருத்து சொல்ல இவரென்ன பாஜக உறுப்பினரா என்ன?
அக்கட்சி
மீது ராவத்திற்கு ஏன் கோபம்>
வேறொன்றுமில்லை
அந்த
கட்சி சில இஸ்லாமிய அமைப்புக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. அதனால்தான் சராசரி காவிகளைப்
போல ராவத்தும் பேசியுள்ளார்.
அவரிடம்
அழுத்தமாக நாம் சொல்ல வேண்டியது ஒரு கருத்தைத்தான்.
இதெல்லாம்
உங்கள் வேலை இல்லை.
உங்களுக்கு
முன்பாக தளபதியாக இருந்து இப்போது மத்திய இணை அமைச்சராக உள்ள வி.கே.சிங் போல நீங்களும்
எதிர்காலத்தில் அமைச்சரானால் அப்போது இந்த வசனங்களையெல்லாம் அடித்து விடவும்.
ஓ!
அப்படி அமைச்சராகத்தான் இந்த அடித்தளமோ?
The real danger is preparing the mindset of army against Muslim Pakistan,Afghanistan and Bangladesh for aganda bharatham. Fascism deeply implanted in all the 3forces.
ReplyDeleteஇந்த 'சில்லுண்டிகள' ராணுவ தலைமையா இருக்குறதே நம்ம கிரகம். இதுக என்னைக்கும் சண்டைக்கு போகமாட்டானுக! சீனாகாரன் வம்பிழுத்தால் 'நெஞ்சுவலினு' டில்லி ஆஸ்பத்திரில படுத்துக்குவானுக. நாம ராணுவத்துக்கு செலவழிக்குறது வேஸ்ட். கவலபடாதீங்க நம்ம சங்கி-மங்கிக கூடிய சீக்கிரம் நம்ம ராணுவத்த privatize பண்ணிடுவானுக.
ReplyDelete