Saturday, February 3, 2018

நீங்களும் களங்கப்படுத்தாதீர் யுவர் ஆனர் . .



மருத்துவத்துறை இயக்குனர் பதவி உயர்வு தொடர்பான ஒரு வழக்கில் தமிழக அரசு பதவி உயர்வுக்கு தகுதியான ஒருவருக்கு சரியாக அந்த நேரத்தில் ஏதோ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு பதவி உயர்வு தராமல் தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு தருவதற்காகவே அந்த நடவடிக்கை என்று கருதியுள்ள நீதியரசர்கள்

"நீங்கள் அவருக்கு பதவி உயர்வு அளிக்காவிட்டாலும் பரவாயில்லை. இப்படி களங்கப்படுத்தாதீர்கள்"

என்று வெடித்துள்ளனர்.

இந்த தார்மீகக் கோபத்தை பாராட்டுகிறேன். தலை வணங்கிப் போற்றுகிறேன்.

அதே நேரம் ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்.

நியாயமான கோரிக்கைகளுக்காக இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் அளித்திருக்கிற உரிமைகளின் அடிப்படையில் யாராவது வேலை நிறுத்தம் செய்கிற போது, அப்போராட்டத்திற்கு தொடர்பே இல்லாத யாராவது மக்கள் நல பெட்டிஷன் என்று வந்தால்

"போராடுகிறவர்களுக்கு நீங்கள் நீதி அளிக்காவிட்டாலும் பரவாயில்லை,

வேறு வேலைக்கு போக வேண்டியதுதானே?
ஒரு மணி நேரத்துக்குள் பணியில் சேரவில்லையென்றால் டிஸ்மிஸ்,
நடவடிக்கை எடுங்கள்"

என்றெல்லாம் களங்கப்படுத்தாமல் இருந்திடுங்களேன்.


No comments:

Post a Comment