புல்வாமா தாக்குதல் முடிந்து ஒரு வருடமாகி விட்டது. ஆனால் இன்று வரை தேசிய புலனாய்வு முகமை (NIA) யால் அறிக்கை சமர்ப்பிக்க முடியவில்லை.
இது தொடர்பாக இந்து நாளிதழிற்கு பெயர் சொல்ல விரும்பாத என்.ஐ.ஏ அதிகாரி சொன்ன தகவல்கள் சில நாட்கள் முன்பாக வந்திருந்தது. விசாரணையை முடிக்க முடியாததன் காரணங்களாக அவர் சொன்னவை.
குண்டு வெடிப்புக்கு பயன்படுத்திய வெடி மருந்து கடைகளில் கிடைப்பது அல்ல. ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. அவை அந்த தீவிரவாதிக்கு எப்படி கிடைத்தது?
பாதுகாப்பு வளையங்களை மீறி தீவிரவாதியின் வேன் எப்படி நெடுஞ்சாலைக்குச் சென்றது?
எச்சரிக்கைகளை மீறி வீரர்களின் பயணத்திற்கு அனுமதித்தது யார்?
இச்சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எண்கவுண்டரில் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே முக்கியமான கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் அறிக்கையோ குற்றப் பத்திரிக்கையோ தாக்குதல் செய்ய முடியவில்லை.
இதுதான் அந்த அதிகாரி சொன்னது.
இதே கேள்விகளை நாம் கேட்டால் நம்மை தேசத்துரோகி என்பார்கள்.
புல்வாமா தாக்குதலின் உண்மை மோடி ஆட்சியில் இருக்கும் வரை நிச்சயம் வெளி வரப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அது இந்த ஆட்சி அகன்றால்தான் கிடைக்கும்.
No comments:
Post a Comment