தூத்துக்குடி
துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜகதீசன் கமிஷன் ரஜினிகாந்திற்கு
சம்மன் அனுப்பியுள்ளதாக காலையில் இந்து நாளிதழில் செய்தி படித்தேன்.
“ஸ்டெரிலைட்
எதிர்ப்புப் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவி கலெக்டர் அலுவலகத்தில் வன்முறை செய்தார்கள்”
என்று
அவர் கூறியதால் அவருக்கு இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தி சொல்கிறது.
ரஜினிகாந்த் சாட்சி சொல்லச் செல்வாரா?
சமூக விரோதிகள் ஊடுறுவியதற்கு அவரால் என்ன சாட்சியத்தை, ஆதாரத்தை அளிக்க முடியும்?
தந்தை பெரியார் விஷயத்தில் அவதூறாக பேசி அசிங்கப்பட்டது போல இப்போதும் அசிங்கப்பட வேண்டிய நேரம் இது.
பாவம், குருமூர்த்தி வகையறா சொல்லிக் கொடுத்த வசனத்தைப் பேசினால் என்னவெல்லாம் பிரச்சினை வரும் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்வாரா?
யார் சொல்வதையும் கேட்காதீர்கள் என்று ரஜினிகாந்த் மாணவர்களிடம் சொன்னதைத்தான் அவரிடம் சொல்ல வேண்டும்.
குருமூர்த்தி சொல்வதையெல்லாம் அப்படியே ஒப்பிக்காதீர்கள். . .
சொல்லிக் கொடுத்ததை பேசித்தான் அவருக்கு பழக்கம். தரையிலும், திரையிலும்.... இன்றும் கூட இலங்கை அகதிகள் பற்றி எதையோ உளறியிருந்தார்...
ReplyDeleteதெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கி - 01
https://newsigaram.blogspot.com/2020/02/any-do-reminder-in-whatsapp.html