Sunday, February 16, 2020

தரையில் நீர்மூழ்கிக் கப்பல்



இந்திய கப்பற்படையில் செயல்பட்ட குர்சுரா என்ற நீர்மூழ்கிக் கப்பலை விசாகப்பட்டிணம் கடற்கரைக்குக் கொண்டு வந்து அதை ஒரு அருங்காட்சியமாக மாற்றி வைத்துள்ளார்கள்.

மிகவும் நீளமான குறுகிய அகலமும் கொண்ட அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்றது நல்ல அனுபவமாக இருந்தது.

எங்களின் மேற்கு மண்டலத் தலைவராக இருந்த தோழர் வி.எஸ்.நால்வாடே,  எல்.ஐ.சி க்கு வரும் முன்பு கப்பற்படையில் பணியாற்றியவர். ஒரு நீர்மூழ்கிக் கப்பலிலும் பணியாற்றியவர். 

நாங்கள் சென்ற நேரம் அவரும் வந்ததால் அந்த நீர்மூழ்கிக் கப்பலின் பல அம்சங்களை விளக்கினார்.

கப்பலின் கேப்டன் அறையே மிகவும் சிறியது. மாலுமிகள், வீரர்கள் எல்லாம் ட்ரெயின் பெர்த் போன்ற இடத்தில்தான் படுத்துக் கொள்ள வேண்டும். கதவுகள் எல்லாம் அவ்வளவு வலிமை. கடல் நீர் உள்ளே புகக் கூடாதல்லவா!

எண்ணற்ற சிரமங்களுடன்தான் பாதுகாப்புப் படையினர் பணி செய்கின்றனர் என்பதை நீர்மூழ்கிக் கப்பல் உள்ளே சென்று வந்தது உணர்த்தியது.

அவர்களின் தியாகத்தை இன்றைய ஆட்சியாளர்கள் மதிக்கிறார்களா? 

நாளை பார்ப்போம்

பிகு :

முதல் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம்.

மற்றவை நீர்மூழ்கிக் கப்பலுக்கு வெளியே எடுக்கப்பட்ட படங்கள்







No comments:

Post a Comment