Saturday, February 1, 2020

கோட்சேக்கள் கூட்டமா நீங்கள்?


"அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்" என்ற பதாகையோடு அண்ணல் காந்தியின் நினைவு நாளன்று முன்னாள் நீதிபதிகள் சிலரும் சில வழக்கறிஞர்களும் சென்னை உயர்நீதி மன்றத்திற்குள் அமைதிப் பேரணியாக சில மீட்டர் தூரம் நடந்து போயுள்ளனர்.

அது சட்ட விரோதம், அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, நீதிமன்றத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றெல்லாம் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதிப்பு மிக்க நீதியரசர்கள் பதட்டத்தில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மகாத்மா காந்தியின் பெயரைச் சொன்னால், அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்று சொன்னால் கோட்சேக்களின் கூட்டத்திற்கு கோபம் வரலாம்.

"உங்கள் இருக்கையில் உங்கள் தலைக்கு மேலே படமாக தொங்கிக் கொண்டிருப்பவரின் பெயரை நினைவு படுத்தினால், எந்த அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக நீங்கள் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளீர்களோ, அதை பாதுகாப்போம் என்று சொன்னாலும் நீங்களும் ஏன் இவ்வளவு கோபப்படுகின்றீர்கள்? நீங்களும் என்ன கோட்சேவின் கூட்டமா? "

என்று நீதித்துறையைப் பார்த்து சாமானிய மனிதன் கேட்கும் சூழலை உருவாக்கலாமா மரியாதைக்குரிய நீதியரசர்களே?

No comments:

Post a Comment