Saturday, February 29, 2020

2000 ரூபாய் - மரண பயத்தை மறக்கலாமோ?


2000 ரூபாய் – என்ன வேணா செய்வானுங்க



நேற்று ஒரு கடையில் மூவாயிரத்து எழுநூறு ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது.

இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்தேன். அந்த கடைக்காரர் அதை வாங்க தயங்கி

“சார் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கறதை நிறுத்திட்டாங்களாம். இனிமே ஏ.டி.எம் மில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வராதுன்னு சொல்றாங்களே சார், இதுவும் செல்லாதுன்னு சொல்லிடுவாங்களா”

என்று கேட்டார்.

“அப்படியெல்லாம் இல்லைங்க, நேற்றைக்கு இந்த நோட்டு ஐ.ஓ.பி ஏடிஎம் மில் எடுத்ததுதான்”

என்று சொன்ன பின்பு அவற்றை வாங்கிக் கொண்டபடியே

“ஆனாலும் இவனுங்களை நம்ப முடியாது சார். எப்ப வேணா எது வேணா செய்வானுங்க. மறுபடியும் ரோட்டில அலைய வச்சுடுவானாங்களோன்னு பயமாத்தான் இருக்கு”

என்று சொல்ல

ஆம். அப்படிப்பட்ட மோசமான அரசுதான் இது என்று ஆமோதிப்பதை விட வேறென்ன பதிலை சொல்லிட முடியும் !!!!

No comments:

Post a Comment