1994 ம் வருடம் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பதினைந்தாவது பொது மாநாடு அகமதாபாத் நகரில் நடைபெற்றது.
மாநாடு முடிந்த இரண்டாவது நாள்தான் எங்களுக்கு ட்ரெய்ன் என்பதால் மறைந்த மூத்த தோழர் ஆர்.பி.எஸ், அதிகாரியாக சமீபத்தில் ஓய்வு பெற்ற தோழர் கே,அண்ணாதுரை ஆகியோரோடு சபர்மதி ஆஸ்ரமம் சென்றிருந்தேன்.
முழுக்க முழுக்க அமைதியாக இருந்த ஆஸ்ரமத்தை சுற்றி வருகையில் "காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அணிந்த ஆடை" என்று ரத்தக் கறை தோய்ந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
"மதுரையில் உள்ள காந்தி நினைவகத்திலும் இதே போல் ரத்தக்கறை தோய்ந்த ஆடை உள்ளதே, இங்கேயும் எப்படி உள்ளது?"
என்று உடன் வந்த தோழர்களிடம் சற்று உரக்க கேட்டவுடன், ஒரு வாலிபர் வேகமாக வந்து
"பாபுஜி இங்கே இன்னும் வாழ்வதாக நாங்கள் உணர்கிறோம். இங்கே சத்தம் போடாதீர்கள்"
என்று ஆங்கிலத்தில் மெல்லிய குரலில் அதட்ட
அதன் பின்பு வாயே திறக்கவில்லை.
அந்த இடத்திற்குத்தான் இரண்டு கொடியவர்கள் சென்றுள்ளார்கள். மகாத்மா காந்தியைப் பற்றி ஏதும் அறியாத ஒரு கொடியவர்கள், அங்கே இருந்த புத்தகத்தில் இன்னொரு கொடியவருக்கு நன்றி சொல்லியுள்ளார்.
பிகு:
அன்றைய தினம் காலையிலே இன்னொரு பல்பு வாங்கினோம். அது பற்றி நாளை
No comments:
Post a Comment