Friday, February 21, 2020

எடப்பாடி வகையறா பூஜ்ஜியமாம் . . .


எழுவர் விடுதலை தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும் என்று நேற்று முன் தினம் சட்டப் பேரவையில் எடுபிடி அறிவிக்கிறார்.

அப்படியெல்லாம் அறிவிக்க உனக்கு அருகதை கிடையாது என்று உடனடியாக சவுக்கடி கொடுத்தது போல அமித்ஷா அமைச்சகம் பதில் வெளியிட்டுள்ளது. 

எழுவரை விடுதலை செய்வது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று சொன்னதோடு மட்டுமல்ல, தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு மதிப்பு வெறும் பூஜ்ஜியம்தான் என்று நக்கல் அடித்துள்ளது அந்த அறிக்கை.

ஒரு மாநில அரசின் தீர்மானத்தின் மதிப்பு பூஜ்ஜியம் என்றெல்லாம் சொல்லும் ஆணவம் மோடி வகையறாக்களுக்கு மட்டுமே உரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்ற காட்டுமிராண்டி பாசிஸ்ட் கூட்டம் இப்படித்தான் ஆணவமாக பேசும், நடந்து கொள்ளும்.

எழுவர் விடுதலைக்கான குரலை வலிமையாக எழுப்பிட வேண்டும் என்று உள்துறை அமைச்சக அறிக்கை உணர்த்துகிறது, அவர்கள் ஆட்சி செய்ய அருகதையற்றவர்கள் என்பதையும் கூட.

எடுபிடி அரசுக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் இருந்தால் அவர்கள் இத்தனை நேரம் கடுமையான கண்டனம் எழுப்பியிருக்க வேண்டும்.

ஆனா அவங்கதான் "ரொம்பவே நல்லவனுங்க" ஆயிற்றே

No comments:

Post a Comment