Saturday, February 15, 2020

ஆபிசரை மட்டும் திட்டாதீங்க, யுவர் ஆனர்



உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் வெடித்துள்ளார்கள்.

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகையான 1,45,000 கோடியை கண்டிப்பாக கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டும் ஒரு பைசா கூட கட்டாமல் ஏமாற்றுகிறார்கள் என்ற கோபம் வெளிப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு பணத்தைக் கட்டச் சொல்லி அழுத்தம் தரக் கூடாது என்று கடிதம் எழுதிய தொலை தொடர்பு அதிகாரியை காய்ச்சி எடுத்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தை விட அவர் பெரியாளா?
இப்படியெல்லாம் இருந்தால் நீதிமன்றத்தையே இழுத்து மூட வேண்டி இருக்கும்.
இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்.
அரை மணி நேரத்திற்குள் அந்த அதிகாரி அந்த கடிதத்தை வாபஸ் வாங்காவிட்டால் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்.

என்ற நீதிபதியின் கோபம் மிகவும் நியாயமானது.

ஆனால் உங்கள் கோபத்தை அதிகாரியோடு மட்டும் ஏன் நிறுத்திக் கொண்டு விட்டீர்கள் யுவர் ஆனர்?

உங்கள் உத்தரவை அமலாக்க வேண்டாம் என்று கடிதம் எழுதும் துணிவு ஒரு அதிகாரிக்கு எப்படி வரும் என்று சிந்தித்திருக்க வேண்டாமா?

ஆள்பவர்கள் கட்டளையிடாமலோ அல்லது பெரு முதலாளிகள் நிர்ப்பந்தம் அளிக்காமலோ கடிதம் எழுத தைரியம் வந்திருக்குமா என்று ஏன் நீங்கள் யோசிக்கவில்லை?

அம்பின் மீது காண்பித்த ஆத்திரத்தை எய்தவர் மீது வெளிப்படுத்தி இருந்தால்தானே சட்டமும் தர்மமும் நிலைத்திருக்கும்!

No comments:

Post a Comment