கவிஞர் கலாப்பிரியா, சாரு நிவேதிதா, வண்ணதாசன் என்று ஒரு முக நூலில் ஒரு கலவரம் நடப்பதாக அறிந்து அந்த பக்கங்களுக்கெல்லாம் சென்று வந்தேன்.
திரு வண்ணதாசனை ட்ராகுலா என்று சாரு நிவேதிதா வர்ணித்துள்ளது கீழே உள்ளது. சாரு அடிப்பொடிகள் இப்பிரச்சினையை சாதிக் கலவரமாக மாற்ற முடியுமா என்று முயல்கிறார்கள் என்பது இன்னொரு விஷயம்.
வண்ணதாசனை அன்பின் மொத்த உருவம் என்பார்கள். இங்கே முகநூலில் பின்னூட்டம் என்ற பெயரில் ட்ராகுலாவாக மாறியிருக்கிறார் பாருங்கள். அது ஏன் ஐயா, அன்பின் மொத்த வடிவம் கூட சாரு நிவேதிதா என்றால் ட்ராகுலாவாக மாறி விடுகிறீர்கள்? விரைவில் வண்ணதாசனின் பின்னூட்டங்களை இங்கே பதிவு செய்கிறேன்.
இப்படி எழுதிய சாரு நிவேதிதா அந்த பின்னூட்டங்களை இதுவரை பிரசுரிக்காததால் நான் தேடிப் பார்த்து படித்தேன்.
' எல்லோருடனும் நல்ல உறவைப் பேண நினைக்கிற' என்கிற, ' என்னத்துக்கு வம்பு' என்று ஒதுங்கிப் போகிற நம்முடைய இயல்பைத் தான், அவர்கள் முதலில் தாக்குவதற்கான பலவீனமான இலக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.- கலாப்ரியாவை நாற்பது வருடத்திற்கு முந்திய ஹீரோவாகக் காட்டிவிட்டு, அவர் ஒரு நாவல் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். மிகுந்த சிரமப்பட்டு அதன் பெயர் வேனல் என்று அறிந்து, மிகுந்த சிரமப்பட்டு அதை வெளியிட்டது சந்தியா பதிப்பகம் என்றும் தெரிந்து கொண்டேன்." என்று எழுதுகிறார். -
அடுத்த அவருடைய நான் லீனியர் அக்கறை இப்படி இருக்கிறது - "அந்த நாவல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. யாரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்படி ஒரு நாவல் வெளிவந்ததே யாருக்கும் தெரியாது. புத்தக பைண்டிங்கும் ஏதோ பன்னண்டாம் வகுப்பு கணித நூல் மாதிரி இருக்கிறது''. இவ்வளவு தேடிக் கண்டுபிடித்த , வேறு யாரும் ஒருவார்த்தை சொல்லாத ' வேனல்' பற்றி அவர் நான்கு வார்த்தைகள், குறைந்த பட்சம் எஸ்.செந்தில் குமாரின் க' கழுதைப்பாதை'க்குச் சொன்னது போலவேனும் எழுதியிருக்கலாம் தானே.
பன்னிரண்டாம் வகுப்புக் கணக்கும், அதைச் சரியாகக் கற்றுக்கொடுக்கிற கணித ஆசிரியரும் தான் முக்கியமே தவிர, புத்தகம் அல்ல. பத்தொன்பது வருடங்களுக்கு மேலாக, அவர் கேலிசெய்கிற, பன்னிரண்டாம் வகுப்புக் கணக்குப் புத்தகம் போல இருக்கும் என்னுடைய தொகுப்புகளை, நடந்துகொண்டு இருக்கும் நெல்லை புத்தகக் கண்காட்சி வரை வாங்கி வாசிக்க, கையில் இருநூறும் முன்னூறும் மட்டுமே வைத்திருக்கிற, யாராவது ஒரு பையன் வந்துகொண்டுதான் இருக்கிறான். - சரி.2000 ரூபாய் விலைதான் அவருடைய தர நிர்ணய அளவை எனில், சந்தியா பதிப்பகம் 2000 ரூபாய் விலையில் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்களின் - உதாரணமாக ஏ.கே.செட்டியார்- தரம் குறித்தோ அல்லது உள்ளடக்கம் பற்றியோ , இந்த ஃபிலிஸ்டைன் சமூகம் பற்றி வருத்தப்படும் அவர் ஏதாவது பதிவு செய்ததுண்டா? -
இந்த கருத்துக்களே ஒருவரை ட்ராகுலா என்று கொடூரமாக வர்ணிக்க வைத்துள்ளது என்றால் புளிச்ச மாவு ஜெயமோகன் போன்றவர்களை நாம் என்னவென்று வர்ணிப்பது?
அதற்கான வார்த்தைகளையும் சாரு நிவேதிதாதான் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment