Saturday, February 1, 2020

எல்.ஐ.சி தனியார்மயம் – படுபாதகத்தின் உச்சம்







தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியினை கீழே பகிர்ந்து கொண்டுள்ளோம்.



*பட்ஜெட்டில் எல்..சி தனியார் மயம்:* *படு பாதகத்தின் உச்சம்*

*அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
பிப்ரவரி 4 அன்று வெளி நடப்பு வேலை நிறுத்தம்*

சென்னை பிப் 1: எல்..சி பங்குகளை விற்பது என்ற பட்ஜெட் முன் மொழிவு படு பாதக பொருளாதார பாதையின் உச்சம் என தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு கண்டித்துள்ளது

*என்ன நியாயம் இது?*

முதலில் தனியார் மயத்திற்கு காரணம் நட்டத்தில் பொதுத் துறை இயங்குவதே என்றார்கள். திறமையற்ற நிர்வாகம், சேவை என்றார்கள். மக்கள் வரிப் பணம் வீணாகிறது என்கிறார்கள். இப்படி எந்தவொரு குற்றச்சாட்டையாவது எல்..சி மீது இந்த அரசாங்கத்தால் சொல்ல முடியுமா

எல்..சி கடந்த நிதியாண்டில் டிவிடெண்ட் ஆக மட்டும் அரசுக்கு தந்த தொகை ரூ 2611 கோடிகள். 1956 ல் வெறும் 5 கோடி அரசு முதலீட்டில் துவக்கப்பட்ட எல்..சிக்கு அதற்கு பின்னர் கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை. பங்கு சந்தைக்கு இழுத்து வருவதற்காகவே சட்ட நுணுக்கங்களை காரணம் காட்டி ரூ 100 கோடியாக மூலதனத்தை உயர்த்தினார்கள். இந்த தொகையும் அரசு ஆண்டு தோறும் எல்..சி இடமிருந்து பெறுகிற டிவிடென்டில் மிகச் சிறிய பகுதியேயாகும். வெல்லப் பிள்ளையாரை கிள்ளி அவருக்கே நைவேத்தியம் செய்வது போலத்தான். இப்படி தற்சார்பு கொண்ட நிறுவனத்தை தனியார் மயமாக்க முனைவதற்கு என்ன நியாயம் இருக்கிறது

*இது அமுத சுரபி*

இந்திய பொருளாதாரத்திற்கு எல்..சி ஓர் அமுத சுரபியாக திகழ்கிறது

11 வது ஐந்தாண்டு (2012 -17) திட்டத்திற்கு  எல்..சியின் பங்களிப்பு ரூ  14,23,055                கோடிகள். சராசரியாக ஆண்டிற்கு ரூ 284000 கோடிகள். 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே (2017-19) அரசுக்கு தந்திருப்பது 701483 கோடிகள். ஆண்டு சராசரி 350000 கோடியாக உயர்ந்துள்ளது. எல்..சி யின் சொத்து மதிப்பு 32 லட்சம் கோடிகள். ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடுமின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும், அரசின் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ள தொகை ரூ 28,84,331 கோடிகள். அரசின் பட்ஜெட் மதிப்பீடுகள் எல்லாம் பொய்த்து போகிற சூழலில் கூட எல்..சி மீதான நம்பிக்கை, எதிர்பார்ப்பு மட்டும் பொய்த்ததே இல்லை என்பதை மறுக்க முடியுமா? நிர்வாகத் திறமைக்கு இதைவிட சான்று என்னவாக இருக்க முடியும்!

*கடைசி மனிதனுக்கும் இன்சூரன்ஸ்*

1956 ல் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்ட போது " மூலை முடுக்குக்கு எல்லாம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை கொண்டு போய் சேர்ப்பதே லட்சியம்" என அறிவிக்கப்பட்டது. என்ன பொருள்! தனியார்களால் 245 நிறுவனங்கள் இருந்தும் செய்ய முடியவில்லை என்பதுதானே. 1999 க்கு பின்னர் மீண்டும் இன்சூரன்ஸ் துறையில் வந்த பன்னாட்டு நிறுவனங்களும் தனியார்களுமாவது சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் சேவையை விரிவு செய்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? ஆனால் அதை ஒரே நிறுவனமாக எல்..சி செய்துள்ளது. 40 கோடி பாலிசிகளை இன்று எல்..சி வைத்திருக்கிறது. இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்றாலே திவால் என்ற நிலைமையை மாற்றி பாலிசித்தார்ர்க்கான உரிம பட்டுவாடாவை 98.4 சதவீதம் என்கிற அளவில் வைத்துள்ளது. இதுவும் உலகின் நம்பர் 1 சதவீதம்

*நம்பிக்கையின் மறு பெயர்

இந்திய இன்சூரன்ஸ் துறையில் உள்ளே வந்த பன்னாட்டு நிறுவனங்கள் சில பத்தாண்டுகளில் இங்கேயிருந்து முதலீடுகளை எடுத்துக் கொண்டு திரும்பி விட்டார்கள். அமெரிக்காவின் ..ஜி, ஆஸ்திரேலியாவின் . எம்.பி ஆகியன உதாரணங்கள். நீண்ட கால சேமிப்புகளை பாதுகாக்க வேண்டிய தனியார் நிறுவனங்கள் 10 ஆண்டுகளில் வெளியேறுகிறார்கள் எனில் இவர்களை நம்பி எப்படி மக்கள் சேமிக்க முடியும்

கடந்த 4 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மட்டுமே அந்நிய முதலீடு இன்சூரன்ஸ் துறையில் வந்துள்ளது. எல்..சி ஓராண்டிற்கு தரும் 3.50 லட்சம் கோடி எங்கே! இவர்கள் கொண்டு வந்துள்ள முதலீடுகள் எங்கே? இப்படி எந்த ஒரு தரவும் இன்றி எல்..சியின் தனியார் மயம் அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் விரோத செயல். தேச நலனுக்கு எதிரானது என தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது

*வெளி நடப்பு வேலைநிறுத்தம்*

தமிழகத்தின் மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மையங்களில் எல்..சி ஊழியர்கள் பட்ஜெட் முன் மொழிவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன,

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் பிப்ரவரி 4 அன்று நாடு தழுவிய 1 மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இதர தொழிற்சங்கங்களையும் கலந்தாலோசித்து, இணைத்து இந்த வேலை நிறுத்தம்  நடை பெறும்
டி.செந்தில்குமார்
பொதுச்செயலாளர்
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

7 comments:

  1. All the uthavakarai employees of lic should be sacked . Useless people sucking the blood of common . Not doing any work for their salary and spending time for union.

    ReplyDelete
    Replies
    1. தைரியம் இருந்தா உன் சொந்த அடையாளத்தோட வந்து சொல்லுடா பொறுக்கி

      Delete
  2. Summary of budget:

    Ensured that big corporates are continued to be taken care.

    Created a mirage that middle class got tax relief. But even after 10 hours of announcement, financial planners are scratching how to explain this mirage.

    For low income and poor, only headlines. In fact their Subsidies and benefits are further cutdown.

    A marked change this time is- except pro sanghi channels and business leaders, many business leaders provided a balanced view of the budget than the usual superlative praise. Many are clearly not impressed.

    ReplyDelete
  3. ஒரு குடிகாரன் குடிக்க பணம் இல்லாமல் போனால் அவனுக்கு பித்து பிடித்து விடும். பணம் கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்வான். எல்லாப்பக்கமும் கைவைப்பான். இதற்கும் நேற்றைய பட்ஜெட்டிற்க்கும் சம்பந்தம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.

    இந்தியாவுடைய வருமானம் 17 லட்சம் கோடி ஆனால் வழக்கமான செலவுக்கு தேவை 26 லட்சம் கோடி.

    ReplyDelete
  4. ஒரு குடிகாரன் குடிக்க பணம் இல்லாமல் போனால் அவனுக்கு பித்து பிடித்து விடும். பணம் கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்வான். எல்லாப்பக்கமும் கைவைப்பான். இதற்கும் நேற்றைய பட்ஜெட்டிற்க்கும் சம்பந்தம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.

    இந்தியாவுடைய வருமானம் 17 லட்சம் கோடி ஆனால் வழக்கமான செலவுக்கு தேவை 26 லட்சம் கோடி.

    ReplyDelete
  5. Government is responsible only for governance. Ruñning insurance company and airlines is not part of it is job.it should sell and come out of the socialist mentality. Lic is has huge debit only because of the non payroll agents. As usual many payroll employees of lic does not lack work ethics . They treat their customers very bad manner. It is from my personal experience. Lic should trim it's work force. They should announce vrs similar to bsnl and mtnl. Public sector services should benifit public not only for the employees.

    ReplyDelete
    Replies
    1. உலகமயமாக்கல் கொள்கையின் தாக்கத்தால் பீடிக்கப்பட்ட, மக்களைப் பற்றி கவலைப்படாத மேட்டிமை சிந்தனையின் வெளிப்பாடு இது. நாடு நாசமானாலும் பரவாயில்லை, நான் நன்றாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் கூட்டத்திற்கு பதில் சொல்வது வீண். எல்.ஐ.சி ஊழியர்களின் சேவை பற்றி சாதாரண மக்கள் பாராட்டுவார்கள். தனிப்பட்ட குரோதங்களை பொதுமைப்படுத்துவது சரியல்ல

      Delete