Monday, May 9, 2016

விஜயகாந்த் எனும் ஒரு . . . .

வாட்ஸப்பில் வந்தது. சரியாகவே உள்ளதாக நானும் உணர்வதால் இங்கே பகிர்ந்து  கொண்டுள்ளேன். பல்வேறு கிண்டல், கேலிகளுக்கு விளக்கமாக இது அமையும்.



விஜயகாந்த் பொது இடங்களில் 
நாகரிகமாக நடக்க தெரியாத
ஒரு முட்டாள் !!!

இது தான் உண்மை 
என்று நினைக்கும் மக்களே......

நீங்கள் ஒரு அறிவாளி என்றால் 
இந்த பதிவை முழுவதும் படியுங்கள்.....

தமிழ்நாட்டில் உள்ள 
விஜயகாந்த் எனும்
முட்டாளை பற்றிய செய்தி :

இலங்கைப் போர்,
அகதிகள் மறுவாழ்வு,
கார்கில் போர், 
கும்பகோணம் தீ விபத்து, 
ஆந்திரா புயல், 
ஒரிசா வெள்ளம், 
குஜராத் நிலநடுக்கம், 
தமிழகத்தின் சுனாமி 
இது போன்ற பேரிடர்கள் 
இந்தியாவில் எங்கு
நடந்தாலும் முதல் 
முட்டாளாக இவர் தான் 
தன் சொந்தப் பணத்தை
கொடுத்து துணை நிற்பார்...

தான் சுயமாக சம்பாதித்த 
பணத்தில் பாதிக்கப்பட்ட 
மக்களுக்காக கொடுத்த 
நிவாரணத் தொகை மட்டும்
ருபாய் 10 கோடிக்கு மேல்....

ஊழல் செய்த பணம் இல்லை...
ஏமாற்றி சேர்த்த பணம்  இல்லை...
உழைத்து சம்பாதித்த பணம் !!!

அன்றைய காலத்தில் 10 கோடி
இன்றைய 100 கோடிக்கு சமமானதே....

(மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் தெய்வங்களாகிய கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்த இழப்புக்கு தங்கள்  சொந்த பணத்திலுருந்து ஒரு ரூபாய் கூட வழங்கியதில்லை)

2002 ல் நெசவுத் தொழில் 
நழிவுற்ற போது நெசவாளர்கள் 
சாப்பாட்டிற்கே கஷ்டபட்ட போது 
நம் தெய்வங்கள் ஜெயா & கருணா 
கஞ்சி தொட்டி திறந்து கஞ்சி 
வழங்கிய போது...

இந்த முட்டாள் மட்டும் 
நேரில் சென்று 
பத்து லட்சத்திற்கு 
நெசவு துணி வாங்கிவிட்டு...

இன்று நான் வாங்கியிருக்கிறேன், 
என்னை பார்த்து 
நிறைய பேர் வாங்க வருவாங்க, 
உங்கள் தொழில் முடங்கி விடாது
கவலை பட வேண்டாம் 
என்று கூறினார்....

மேலும் இந்த முட்டாள் 
சென்னையில் இலவச 
மருத்துவமனை கட்டி 
கடந்த 20 வருடங்களாக 
இலவச மருத்துவம் 
வழங்கி கொண்டிருக்கிறார்....

இவர் சுயமாக சம்பாதித்த பணத்தில் 
மிகப் பெரிய மண்டபம் கட்டி 
அதற்கு தாய் தந்தை பெயர் சூட்டி 
தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய ஒரு அடி முட்டாள் 
இவர்தான்....

(தமிழகத்தைக் காக்கப் பிறந்த 
"கருணாநிதி" அந்தப் புண்ணிய 
இடத்தை மண்ணாக்கி 
விட்டது வேறு கதை)

காது கேளாதோர், 
வாய் பேச முடியாதோர் 
இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....

கை, கால் ஊனமுற்றவர்கள் இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....

தன்னோடு பணியாற்றிய 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு பென்சன் வழங்க ஏற்பாடு......

இது போன்ற எண்ணற்ற 
செயல்களுக்காக இந்த பிழைக்க 
தெரியாத முட்டாளுக்கு 
அப்துல்கலாம் அவர்கள் கையால் 
சிறந்த குடிமகன் 
என்ற விருதும் வழங்கபட்டது.....

சென்னை வெள்ளத்தில் 
மக்களின் முதல்வர் முகத்தை பார்த்தாங்களோ இல்லையோ, 
இந்த ஆளு முகத்தை அனைவருமே பார்த்தனர்....

சினிமா உலகில் எண்ணற்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் யாருன்னு தெரியுமா??

இந்த முட்டாள் தான்....

பல அறிவு ஜீவிகள் 
நடிகர் சங்க தலைவர்களாக 
இருந்தும் அவர்களால் 
நிர்வகிக்க முடியாமல்,
கடனை அடைக்க முடியாமல் 
வெளியேறிய ஜாம்பவான்களில்
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி தாங்க...

ஆனால் நம்ம சொல்ற
இந்த முட்டாள் தாங்க
தூக்கி விட்டாரு அந்த சங்கத்தை....

இன்னைக்கு பேஸ்புக், 
வாட்ஸ் அப் ல இந்த 
முட்டாளை தாங்க நம்ம கிண்டல் 
பண்ணிட்டு இருக்கோம்.....

நான் எனக்கு தெரிந்த 
விஷயங்களை மட்டும் தான் சொல்லியிருக்கேன்.

இதுபோன்று அவர் செய்த
முட்டாள்த்தனமான உதவி்கள் 
இன்னும் பல.....

அன்று அப்துல்கலாம் மறைவுக்கு 
இந்த நாடே வருந்தியது.

அன்றும் இத்தனை மக்கள் இருக்காங்களேனு பார்க்காம,
பெரிய பெரிய தலைவர்கள் 
இருக்காங்களேனு பார்க்காம

இந்த ஆளு அழுததுல 
எவ்வளவு உண்மை இருந்ததுனு 
பார்த்த எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும்.

(அவரோட மறைவுக்கு கூட வராம உடல்நிலை சரியில்லைனு சொன்ன கருணாநிதியும் ஜெயலலிதாவுக்கும் இப்போ எப்படி ஓட்டு கேட்க வரப்ப உடம்பு சரியாச்சுனு தெரியல.) 

இது போன்ற தேச துரோக செயலுக்காக இந்த முட்டாளுக்கு நாம் அளித்து கொண்டிருக்கும் தண்டணைகள்
ஏராளம் ஏராளம் ஏராளம்..

தைராய்டு பிரச்சினை இருப்பதால் 
குரல் வளம் குறைந்திருப்பதாலும் எதார்த்தமான மக்கள் மொழியில் பேசுவதாலும்,

நாம் இவரை கோமாளி, 
குடிகாரர் என்றும் அழைக்கிறோம்....

நீங்களே ஒரு முடிவெடுங்கள்.....

மனிநேயரை தேர்ந்தேடுப்போம் ! மனிதநேயத்தை காத்திடுவோம் !

மனமிருந்தால் பகிரவும்....

18 comments:

  1. நூற்றுக்கு நூறு உண்மை! அவர் ராஜாபாதர் தெருவில் குடியிருந்தபோது எப்படி இருந்தாரோ, அப்படியே தான் இன்றும் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சில மாற்றங்கள் மனைவி குடும்பத்தால்---இது எல்லா குடும்பத்திலேயும் நடப்பது தான்!

    விஜயகாந்த் இப்படித் தானம் செய்த பணத்தை ஊடகங்களுக்கு [கையூட்டாக] கொடுத்து இருந்தால்...இன்று அவர் ஜெயலிலதா கருணாவை விட நல்ல மனிதராக காட்சி அளிப்பார்.

    ReplyDelete
  2. “நாம் இவரை கோமாளி, குடிகாரர் என்றும் அழைக்கிறோம்....”

    ஒரு ஆதாரமும் இல்லாமல் நாம் இவரை இவ்வாறு அழைக்கவில்லை! இணையத்தில் காணக்கிடைக்கும் பல்வேறு ஆதாரங்களிலும் இது தெளிவாக விளங்குகிறது. இவரின் மனித நேயம் குறித்த உங்களின் பார்வை மட்டுமே இவை எல்லாவற்றையும் மீறி முதல்வராகும் தகுதி இவருக்கு வரக் காரணமாய் இருக்காது. ஒரு முதல்வர் வேட்பாளருக்கான ஒரு தகுதியும் இவருக்கு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. பின்னே அன்புமணி போல ஜாதி வெறியை கிளப்பி, கொலைகளை தூண்டி சேரிகளை எரிக்க வேண்டுமா?

      Delete
  3. ஒரேவரியில் சொல்லி விடலாம் கருப்பு எம்ஜிஆர் என்று.அதைத்தானே அய்யா அவர் முன்னமேயே சொன்னார்.ஆமாம் எம்ஜிஆரிடமிருந்து நீங்கள் பாடம் கற்கவே இல்லையா?

    அவர் சிறந்த நிர்வாகி ,தெளிந்த நல்லறிவாளி, நயத்தக்க நாகரீகம் உள்ளவர் இப்படியெல்லாம் சொல்வதற்கு முடியாது என்றான பின்னர் ”மனிநேயரை தேர்ந்தேடுப்போம் ! மனிதநேயத்தை காத்திடுவோம் !”.என்னங்க இதைத்தானே 1977 முதல் 1987 வரை கேட்டு வந்தோம்.கத்தி போய் வாலு வந்த கதையாக ”மாற்றம் மாற்றம்” என்று கடைசியில் இது தான் மாற்றமா?

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கையாளர் ஞானி எழுதியதைத்தான் நினைவு படுத்த விரும்புகிறேன். கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு முதன் முதலாக தமிழகத்தில் உருவாகி உள்ளது. அதற்கு ஆதரவு தாருங்கள்

      Delete
  4. Sir,
    1.He always/daily provide free lunch for his fans who visit Chennai to see him during peak days in career.
    2.One of my co-staff says "He supplied cartridge cots with bed to all primary health center across Tamil Nadu before he joining politics".

    ReplyDelete
  5. 1.He always/daily provide free lunch for his fans who visit Chennai to see him during peak days in career.
    2.One of my co-staff says "He supplied cartridge cots with bed to all primary health center across Tamil Nadu before he joining politics".

    ReplyDelete
  6. நாக்கை மடித்து முறைப்பதும் கைய தூக்கி காட்டுவதும் இதுக்கும் தைராய்டு பிரச்சினைதான் காரணாமா? நல்ல ரீல். குடித்துவிட்டு மேடையில் பேசுபவனை குடிக்கரனுதான் சொல்லணும்

    ReplyDelete
    Replies
    1. குடிப்பது தவறு என்பதை நான் ஏற்கிறேன். இப்போது அவர் அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டதாக சொல்கிறார். அந்த ஒழுக்கக் கேட்டிற்காக அவர் நிராகரிக்கப்பட வேண்டும் என்றால் கலைஞர், ஜெயலல்லிதா ஆகியோரை என்ன செய்வதாக உத்தேசம்? திமுக அமைச்சர் பெருமகனாரின் குடிப்பழக்கம் பற்றி சில தினங்கள் முன்பு எழுதியுள்ளேன். அதைப் படித்து விட்டு அதற்கும் நேர்மையாக பின்னூட்டம் இடவும்

      Delete
    2. என் கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை , மற்றவர்களிடம் இதை எதிபாக்குறிங்க..நாக்கை மடித்து முறைப்பதும் கைய தூக்கி காட்டுவதும் இதுக்கும் தைராய்டு பிரச்சினைதான் காரணாமா? எவன் குடித்தாலும் தப்பு தப்புதான்.

      Delete
    3. எனக்கு தெரிந்த தகவலை நான் சொல்கிறேன். அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஒழுக்கக்கேடு பற்றி நீங்களும் கூட எதுவும் பதில் சொல்லவில்லை

      Delete
  7. விஜயகாந்த் தனது செந்த பணத்திலுருந்து வழங்கிய உதவிகள் பல நான் தெரிந்திராதவை. நீங்க வழங்கிய தகவல்களினால் தெரிந்து கொண்டேன். சர்வாதிகாரத்துக்கு சலாம் போடும் பத்திகையாளர்களை பார்த்து கேட்டாரே!
    அத்தம்மாவிடம் இதே கேள்வியை கேட்பீர்களா என்று விஜயகாந்த்திடம் எனக்கு பிடித்தது.

    ReplyDelete
  8. மனிநேயரை தேர்ந்தேடுப்போம் ! மனிதநேயத்தை காத்திடுவோம்

    ReplyDelete
    Replies
    1. விஜயகாந்த் சில அரசியல் தலைவர்கள் மாதிரி மாலை ஐந்து மணிக்கு மீட்டிங்கை முடித்துவிடனும்; பிறகு,வீட்டிற்கு சென்று மாலையில் [வேண்டுமென்றால்] குடிக்கலாம்! நல்ல மனிதர் என்று மக்களிடம் பெயர் எடுக்கலாம்.

      குடிப்பது அவர்கள் உரிமை; ஆனால், குடித்து விட்டு மீட்டிங் பேசக்கூடாது. மற்ற தலைவர்கள் மாதிரி எல்லா விஷயங்களையும் கமுக்கமா நாலு சுவற்றுக்குள் செய்யனும்! இந்த விஷயத்தில் விஜயகாந்த் வளரனும்!

      Delete
  9. We agree Sir, this time we vote for him only.

    ReplyDelete
  10. அவர் செய்த பல நல்ல செயல்கள், இப்போதைய அவர் செய்கைகளினாலும் ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளாலும் மறைக்கப்பட்டுவிட்டன. இப்போதைய நிலையில் அவர் முதலமைச்சர் பதவிக்கு ஏற்றவரா என்பது கேள்வி? ஆனால் மாற்றம் என்று யோசிக்கையில் வேறு வழியிருப்பதாக தோன்றவில்லை.

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு இவர் பற்றி போதிய தெளிவை ஊடகம் செய்யவில்லை என்பதே நிஜம்!அரசியலில் நடிக்கத்தெரியாத ரமணா படம் போல இவர் நிலை பார்ப்போம் மக்கள் கருத்தை !

    ReplyDelete
    Replies
    1. //இவர் பற்றி போதிய தெளிவை ஊடகம் செய்யவில்லை //
      இவர் பற்றி போதிய தெளிவை ஊடகம் செய்ய வேண்டாமே! இவர் பற்றி தவறான கருத்தை மக்களிடம் உருவாக்கியதே இந்த ஊடகங்கள் தான்.வில்லனை உத்தமனாகவும், நல்லவனை கெட்டவனாகவும் உருவாக்குபவை தமிழக ஊடகங்கள்.

      Delete