மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் முன் ஒரு வேலையாக வேலூரின் பிரதான
சாலையான ஆபிஸர்ஸ் லைனுக்கு செல்ல வேண்டியிருந்தது.
சில காவலர்கள் மும்முரமாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றிக்
கொண்டிருந்தார்கள். பேனர் கலாச்சாரம் இனி கூடாது என்று ஜெயலலிதா சொன்னதை உடனடியாக
அமலாக்க துவங்கி விட்டார்களே என்று மனமகிழ்ச்சி கொண்டேன்.
ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நொடி மட்டுமே நீடித்தது.
வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த பா.கார்த்திகேயன்
தேர்ந்தெடுக்கப்ப்பட்டதற்கு நன்றியும் வாழ்த்தும் கூறிய பேனர்களை மட்டுமே அகற்றிக்
கொண்டிருந்தார்கள்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் வாழ்த்தும் நன்றியும்
கூறுகின்ற பேனர்கள், அதே இடத்தில் கம்பீரமாகவே நீடித்தது.
ஆரம்பமே அமர்க்களம்.
காவல்துறை கட்சிக்காரர்களை விட விசுவாசத்தை நன்றாகவே
வெளிப்படுத்துகின்றனர். பேனர் கலாச்சாரம் கூடாது என்பது அதிமுகவுக்கு அல்ல,
எதிர்க்கட்சிகளுக்குத்தான் என்பதை எவ்வளவு சரியாக புரிந்து வைத்துக்
கொண்டிருக்கிறார்கள் ! ! !
இப்பவே இப்படி. இனிமே எப்படியோ?
ஒரேமாதிரியான நிலையை கடைபிடித்தலே அனைவருக்கும் நல்லது. சார்புத்தன்மையைத் தவிர்ப்பது நலம். இனி பார்ப்போம்.
ReplyDeleteஆரம்பமே அமர்க்களம் தான். ஆரம்பத்திற்கே பலர் பாராட்டு மழை பொழிகிறார்கள்!
ReplyDelete