மதுவிலக்கு படிப்படியா அமலாகும் என்பது அதிமுகவின் தேர்தல் உறுதி மொழி. இந்த செய்தியைப் பாருங்கள். டாஸ்மாக் அதிகாரிகள் அளித்த பத்திரிக்கைச் செய்தி அனேகமாக எல்லா நாளிதழ்களிலும் வெளியானது,
படித்து விட்டு "படிப்படியா" உறுதிமொழி என்னாகும் என்று சொல்லுங்கள்.
வேலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனை
வேலூர்,மே 21-
தமிழகத்தில்
வாக்குப்பதிவையொட்டி தேர்தல் பிரச்சாரம் முடிந்த 14, 15, 16ந் தேதி ஆகிய 3
நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடந்த நேற்றும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த
நாட்களில் மதுபானக்கடைகள் மட்டுமின்றி அதனுடன் பார்கள் மற்றும் நட்சத்திர
அந்தஸ்து பெற்ற ஓட்டலில் உள்ள பார்கள், உரிமம் பெற்ற கேண்டீன்கள்
ஆகியவற்றையும் மூடுவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.அதன்படி
தமிழகம் முழுவதும் நேற்று, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
வேலூர்
மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் வேலூர், அரக்கோணம் என 2 மாவட்டங்களாக
பிரிக்கப்பட்டுள்ளன. வேலூரில் 176 டாஸ்மாக் கடைகளும், அரக்கோணத்தில் 100
டாஸ்மாக் கடைகளும் என மொத்தம் 276 கடைகள் உள்ளன. இவற்றில் சராசரியாக ஒரு
நாளைக்கு ரூ.2 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பண்டிகை காலங்களில் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை விற்பனை
செய்யப்படும்.இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 14ந் தேதி முதல்
16ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டதால் முதல்நாளான 13ந்தேதி இரவு 10 மணி வரை அனைத்து டாஸ்மாக்
கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. மதுபிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான
மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்து கொண்டனர்.அன்று ஒரே நாளில் மட்டும்
அரக்கோணத்தில் ரூ.3 கோடியே 15 லட்சத்திற்கும், வேலூரில் ரூ.4 கோடியே 50
லட்சத்திற்கும் என ரூ.7 கோடியே 65 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நேற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மதுபிரியர்கள் மதுபானங்களை அதிக
அளவில் வாங்கிக் கொண்டனர். அதன்படி ஒரே நாளில் அரக்கோணத்தில் ரூ.1 கோடியே
50 லட்சத்திற்கும், வேலூரில் ரூ.3 கோடியே 60 லட்சத்திற்கும் என மாவட்டம்
முழுவதும் ரூ.5 கோடியே 10 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. இந்தத்
தகவலை டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுவிலக்கு அமுலுக்கு கொண்டு வராவிட்டால் உங்களால் {மக்களால் என்று படிக்கவும்} என்ன செய்ய முடியும்? இதற்கு ஜால்ரா அடித்தது எழுத பண்டார பத்திரிகைகள் இருக்கே. இல்லை பொது நல வழக்கு சிலர் போடலாம்--அரசு உடனே குடியை நிறுத்தாமல் இருக்க, தனி மனித உரிமை..புடலங்கா என்று!
ReplyDeleteஅந்த கேசை எப்படி வாதடனும் என்று நம் அரசுக்கு சொல்லித் தரத் தேவையில்லை! கூட்டி கழிச்சு பார்த்தல் தமிழ் நாட்டில்...தமிழ்க்குடி இருக்கும் வரை குடி என்றும் இருக்கும்!
எதிர்கட்சிகள் தாங்கள் வெற்றி பெற்றால் உடனடி மதுவிலக்கு என்று மக்களின் சாராயபிரியர்களை பயமுறுத்திய பொழுது, கவலை கொள்ளாதீர், நாம் மறுபடியும் அதிகாரத்துக்கு வந்தால் ,அப்படி எல்லாம் நடைபெறாது பார்த்துக் கொள்வோம் என்று அவர்களுக்கு வழங்கபட்ட ஜெயலலிதாவின் தேர்தல் செய்தியே மதுவிலக்கு படிப்படியா அமலாகும் என்பது.
ReplyDeleteஏதோ இன்று நடந்திருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்
ReplyDeleteநீங்க ஏன் சார்.. அரசியல் கட்சிகளைக் குறை சொல்லுகிறீர்கள். குடிப்பவர்களுக்கு (எளியவர்களைத் தவிர.. அதாவது கடும் உடலுழைப்பு கொண்டவர்களைத் தவிர) சொந்த அறிவு எங்கே போயிற்று? குடிப்பவன் அவனையும் அவன் குடும்பத்தையும் அழித்துக்கொள்கிறான். சிகரெட் பிடிப்பவர்கள், மற்றவர்களையும் அழிக்கிறார்களே..
ReplyDeleteமதுவிலக்கு வேண்டும் என்று எழுதுபவர்கள் எல்லோரும், தான் மது அருந்தமாட்டேன் என்று உறுதி கூறி அதன்படி நடந்தால், கருத்து எழுதலாம். அரசியல் காரணங்களுக்காக, டாஸ்மாக்கை மூடு என்று சொல்வது எப்படிச் சரியாகும்?