நேற்று போளூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் பி.செல்வனுக்காக வாக்கு சேகரிக்க சென்றிருந்தோம்.
ஒரு பகுதியில் வீடு வீடாக பிரசுரங்களை அளித்து விட்டு அடுத்த பகுதிக்குச் செல்ல திரும்பிக் கொண்டிருந்தோம்.
நாங்கள்
வந்து கொண்டிருந்த வீதியில் அப்போது திமுக வேட்பாளர் ஓட்டு கேட்டு வந்து
கொண்டிருந்தார். அவரை வரவேற்க உ.பிக்கள் ஒரு ஐயாயிரம் வாலா சரவெடியை
விரித்துக் கொண்டிருந்தார்கள்.
வேட்பாளரைப்
பார்ப்பதற்காக ஆர்வத்தோடு ஒரு பெண்மணி தனது வீட்டிலிருந்து வெளியே
வந்தார். "அண்ணே, உடம்பு முடியாத வயசான ஆளுங்க இருக்காங்க. கொஞ்சம்
தள்ளிப் போய் வெடி வையுங்க" என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்.
முதலில்
அவர் சொன்னதை பொருட்படுத்தவில்லை. டாஸ்மாக் உபயத்தில் உற்சாகமாக இருந்த
ஒரு மத்திய வயது உ.பி "போம்மா, அப்பால" என்று ஒரு கெட்ட வார்த்தையோடு
திட்ட, அந்த பெண்மணி கோபத்தோடு வீட்டுக் கதவை சாத்திக் கொண்டு உள்ளே போய்
விட்டார்.
அவர் கதவை வேகத்தோடு அறைந்து மூடியது உணர்த்தியது இதைத்தான்.
"அந்த குடும்பத்து வோட்டு, திமுகவுக்கு அவுட்"
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உடன்பிறப்புக்களின் அராஜகத்திற்கு அளவே கிடையாது போல.
வீதிகளிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி
No comments:
Post a Comment