Thursday, May 26, 2016

சரியா வந்திருக்கா?



 கமலா பாஷின் எழுதிய கவிதையை ஒரு தோழர் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். முகநூலிலும் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனை தமிழாக்கம் செய்தேன். 

சரியாக வந்துள்ளதா என்று சொல்லுங்களேன்.

ஆங்கிலம், தமிழ் இரண்டுமே கீழே

படிப்பா? ஏன் படித்திட வேண்டும் நீ?
கல்வி கற்க எனக்கு மகன்கள் ஏராளமாய் இருக்க
பெண்ணே நீ ஏன் படித்திட வேண்டும்?
மகளைக் கேட்டார் தந்தை ஒருவர்.

என் கனவுகள் சிறகடித்துப் பறக்க நான் படித்திட வேண்டும்,
அறிவை அளிக்கும் புதிய ஒளியைப் பெற நான் கற்றிட வேண்டும்.
நான் போராட வேண்டிய களங்களுக்காக கல்வி எனக்கு வேண்டும்.
நான் பெண் என்பதாலேயே கண்டிப்பாய் எனக்கு கல்வி வேண்டும்.

ஆணின் வன்முறையை எதிர்க்க எனக்கு கல்வி வேண்டும்.
என் மௌனத்தை முடிவுக்குக் கொண்டு வர எனக்கு கல்வி வேண்டும்.
ஆணாதிக்க சிந்தனைக்கு சவால் விடுக்க எனக்கு கல்வி வேண்டும்.
செல்லரித்துப் போன மரபுகளை தகர்த்தெறிய எனக்கு கல்வி வேண்டும்.
நான் பெண் என்பதாலேயே கண்டிப்பாய் எனக்கு கல்வி வேண்டும்.

எனது நம்பிக்கைகளை வடிவமைக்க வேண்டும் எனக்கு கல்வி.
நியாயமான சட்டங்களை படைக்க அவசியம் வேண்டும் கல்வி எனக்கு.
நூற்றாண்டுகளாய் குவிந்திருக்கும் குப்பைகளை துடைத்தெரிய
அவசியமாய் நான் கற்றிட வேண்டும்.
எதை நான் எதிர்க்க வேண்டுமோ, அதற்காக கல்வி வேண்டும்.
நான் பெண் என்பதாலேயே கண்டிப்பாய் எனக்கு கல்வி வேண்டும்.

தவறிலிருந்து எது சரியென்று அறிய, எனக்கு கல்வி வேண்டும்.
வலிமையான குரலை கண்டறிய, கல்வி எனக்கு வேண்டும்.
பெண்ணியப் பாடல்களை பாடிட,, எனக்கு கல்வி வேண்டும்.
பெண்களுக்கும் சொந்தமான உலகை உருவாக்க நான் கற்றிட வேண்டும்.
நான் பெண் என்பதாலேயே கண்டிப்பாய் எனக்கு கல்வி வேண்டும்.


1 comment:

  1. மூலத்திற்கேற்ற அருமையான மொழிபெயர்ப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete