Friday, May 13, 2016

மண்டபத்து ஆளை மாற்றுங்கள் மோடி

வாய் திறந்தாலே அபத்தமும் உளரலும் வெற்றுக் கூச்சலும்தான் என்பதாக மோடி காட்சியளிக்கிறார்.

மக்களவைத் தேர்தலின் போதே அவர் தான் ஒரு ஞான சூனியம் என்பதை நிரூபித்திருந்தார். அப்போது எழுதிய சில பதிவுகள் உங்கள் நினைவிற்காக.


ஆனாலும் என்ன செய்வது?

பதினைந்து லட்ச ரூபாய் கனவில் மக்கள் அவருக்கு வாக்களித்து ஏமாந்தார்கள்.

இந்தியாவில் இனி இவரை விட மோசமான பிரதமர் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற சாதனையும் படைத்திருக்கிறார்,

போட்டோஷாப் மூலம் ஏராளமான மோசடிகள் செய்துதான் இவரை வில்லாதி வில்லர், வல்லாதி வல்லவர், சூராதி சூரர் என்றெல்லாம் பில்ட் அப் செய்தார்கள். இன்று காசு வாங்கிக் கொண்டு தமிழகத்தில் கருத்துக் கணிப்பு நாடகம் நடத்துகிற அதே வெட்கம் கெட்ட ஊடகங்கள் அனறு மோடிக்கு முட்டுக் கொடுத்தார்கள். 

மோசடி மூலம் வந்ததால் அந்த பில்ட் அப்பைத் தக்க வைக்கவும் தொடர்ந்து போட்டோ ஷாப் மோசடிகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 

நாட்டை ஆளும் தலைவர் படித்தவராகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கண்டிப்பாக இல்லை. படித்த மேதைகள் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், அருண் ஜெய்ட்லி ஆகியோர் அப்படி ஒன்றும் கிழித்து விடவில்லை. ராணுவ தளபதியாக இருந்த வி.கே.சிங் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவம்.

அப்படி இருக்கையில் மோடி எதுவும் படித்திராவிட்டால் யாரும் ஏதும் சொல்லப்ப்போவதில்லை. ஆனால் போலிப் பெருமைக்கு ஆசைப்பட்டு மோசடிகள் செய்யப் போய், அதற்கான ஆவணங்களையும் அவசரம் அவசரமாக போலியாய் தயார் செய்ய, அசிங்கப்பட்டு நிற்கிறது காவிக் கூட்டம்.

இத்தனை அசிங்கப்படுகிறோமே, அடக்கியாவது வாசிக்கலாம் என்ற அறிவும் இல்லாமல் கேரளாவை சோமாலியாவோடு ஒப்பிட்டு அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்.

முட்டாளாக இருக்கலாம்.
அல்லது
முரடனாக இருக்கலாம்.

மோடியோ இரண்டு குணங்களும் இணைந்த அதிசயப் பிறவி. 

அதனால் அசிங்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும். 

ஒரே ஒரு ஆலோசனை மட்டும் மோடிக்கு தர விரும்புகிறேன்.

உங்களிடம் சொந்த சரக்கு கிடையாது என்பது தெளிவாக தெரிந்து விட்டது. யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை வைத்து உங்கள் பிழைப்பு ஓடுகிறது. பதினைந்து லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றியது போல அந்த மனிதனுக்கு என்ன வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினீர்களோ தெரியாது. தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்து உங்களை காமெடி பீஸாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆக சொந்தமாக நீங்களே படித்து பேச முயற்சி செய்யுங்கள்.

அல்லது 

உங்களின் கோஸ்ட் ரைட்டரையாவது மாற்றி விடுங்கள்.

2 comments:

  1. பேசுமுன்போ, எழுதுமுன்போ சற்றே சிந்திப்பது நல்லது. அவ்வாறில்லாமல் தம்மைத் தாமே சிக்கலில் ஈடுபடுத்திக்கொள்கின்றனர் பலர். சிலர் அவர்களுக்கு உறுதுணையாக.

    ReplyDelete
  2. நாம்தானே வோட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்.. என்ன செய்வது ?

    ReplyDelete