Sunday, May 29, 2016

அதிரப்பள்ளிக்கு “மட்டும்” போகாதீங்க



கேரளாவின் முக்கியமானதொரு சுற்றுலா மையம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அதாங்க புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி. பெரும்பாலானவர்கள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியோடு திரும்பி விடுகிறார்கள். அதிரப்பள்ளியிலிருந்து கொச்சின் செல்லும் சாலையில் சரியாக ஐந்தாவது கிலோ மீட்டரில் சாலக்குடி நீர் பிரிவு பூங்கா இருக்கிறது.

சாலக்குடி ஆற்றில் ஒரு தடுப்பணை உள்ளது. அதையொட்டி ஒரு பூங்கா, வேகமாய் சீறிப் பாயும் ஆற்றுக்கு நடுவே ஒரு தொங்கும் பாலம், இயற்கைக் காட்சிகளை கண்டு களிக்க ஒரு பார்வை கோபுரம், இதை விட முக்கியமாக, சுத்தமாக பராமரிக்கப்படும் கழிப்பறைகள் என அட்டகாசமாக அமைந்துள்ளது.

மழைச்சாரல் வந்து போய், வந்து போய் சிலுசிலுவென்று குளிர் காற்று அடித்துக் கொண்டிருக்க, அந்த மாலைப் பொழுது அன்று அங்கே மிகவும் ரம்மியமாய் கழிந்தது.

வண்ணத்துப் பூச்சிகளின் சரணலாயமாகவும் இந்த பூங்கா அமைந்து உள்ளது. அப்படங்களை முன்னமே இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்

அதனால்தான் சொல்கிறேன்.

அதிரப்பள்ளியோடு மட்டும் திரும்பி வந்து விடாதீர்கள். சாலக்குடிக்கு அவசியம் செல்லுங்கள், ரசியுங்கள். 








































2 comments:

  1. படங்கள் ஒவ்வொன்றும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. அருமையான சுற்றுலா தலம் போல இருக்கிறதே! இயற்கை அழகு படங்களில் ரசிக்க வைக்கிறது!

    ReplyDelete