Monday, May 16, 2016

570 கோடி - மூன்று ஊகங்கள்திருப்பூரில் மடக்கி வைக்கப்பட்டுள்ள 570 கோடி ரூபாய் குறித்து மூன்று விதமான கருத்துக்கள் உலா வருகிறது. 

இது எங்கள் பணம்தான் என்று ஸ்டேட் வங்கி சூடம் அடித்து சத்தியம் செய்கிறது. 
இவ்வளவு   பணத்தை இவ்வளவு அலட்சியமாகத்தான் எடுத்துச் செல்வார்களா?    உரிய ஆவணங்கள் இருந்தால் இன்னும் ஏன் அந்த கண்டெய்னர்கள் அங்கேயே இருக்கிறது? 

ஆவணங்கள் இல்லாமல் பணம் வெளியே போவது ஸ்டேட் வங்கிக்கு புதிதல்ல. ஒரு பழைய, பரபரப்பான சம்பவம் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே.  ஞாபகம் வராதவர்கள் இங்கே சென்று நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் 

அடுத்தது ஒரு  நேரடியான குற்றச்சாட்டு. இது ஜெயலலிதாவின் பணம்தான் என்று வைகோ நேரடியாகவே குற்றம் சுமத்துகிறார். அதற்கு அதிமுக ஆட்கள்  மௌனமாக இருக்கிறார்கள்.  சில உடன் பிறப்புக்கள் கள்ளச் சிரிப்போடு அந்த செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவதாக உலவுகிற செய்தி அந்த பணம் கனிமொழிக்கு சொந்தமானது என்று. கோவைப்பக்கத்தில் வாங்கிப் போட்ட சொத்துக்களை விற்று கொடுத்தனுப்பியது என்று. இச்செய்தியை அதிகமானவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது என்றும் அதை மூடி மறைக்க முயற்சி நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அருண் ஜெய்ட்லி ஏன் அறிக்கை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி வரலாம். 

பதில் சுலபமானது.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அனைவருமே ஊழல் சேற்றில் மூழ்கி நாற்றமெடுக்கும் மட்டைகள்தானே!
 

6 comments:

 1. வங்கி தந்துள்ள விளக்கம் சரியாக உள்ளதுபோல் தோன்றுகிறதே?

  ReplyDelete
 2. கவலை வேண்டாம். கம்யூனிஸ்ட் கட்சி அடக்கி வாசிப்பதால் தா.பாண்டியன் மூலம் இதில் இருந்து ஒரு கட்டு இதன் உரிமையாளர்களால் ஹைதராபாத்தில் இருந்து அனுப்பப்படும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அடையாளத்தைச் சொன்னால் கனிமொழியிடமிருந்து நீங்களும் காசு வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு முக நூல் ஸ்டேட்டஸ்க்கும் இருநூறு ரூபாய் கொடுத்தவர்கள், இந்த விஷயத்தை திசை திருப்பி எழுதினால் இரண்டாயிரம் ரூபாய் தருகிறார்களாமே? வாங்கிய உங்களுக்குத்தானே விபரம் தெரியும்....

   Delete
 3. People are saying vaiyapuri is having stakes in it not to mention you are their allies

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் லாஜிக்கா யோசியுங்கள் சார். கொட நாட்டு ராணியின் பணம் என்ற குற்ற்ச்சாட்டை முதலில் அழுத்தமாக சொன்னது வைகோதான். வைகோவிற்கு இதில் தொடர்பு இருந்தால் உடன் பிறப்புகள் இவ்வளவு நேரம் சும்மாவா இருந்திருப்பார்கள்? ஓலம் ஓவராக இருந்திருந்திருக்குமே!

   Delete