தேர்தல் வாக்குப் பதிவு முடியட்டும் என்றுதான் இத்தனை நாள் காத்திருந்தேன்.
தாங்கள் அமைக்க நினைத்த கூட்டணி அமையாமல் போனதால்,
இடதுசாரிக் கட்சிகளும் விடுதலை சிறுத்தைகளும் கூட்டணிக்கு வர மறுத்ததால்,
இவர்கள் வைத்திருந்த பால் கிண்ணத்தில் தேமுதிக பழம் விழாமல் போனதால்,
உடன் பிறப்புக்கள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி –
தமாகா அணியை அதிமுகவின் பி டீம் என்று வசை பாடிக் கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு
அணி அமைவதற்காக 1500
கோடி ரூபாய் வைகோ விற்கு கைமாறியதாய் கதை
விட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் அது உண்மையாகி விடும் என்ற
கொடுங்கோலன் ஹிட்லரின் மந்திரி கோயபல்ஸ் கடைபிடித்த அதே கீழ்த்தர பிரச்சார உத்தியை
கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் கடை பிடித்தார்கள்.
அவர்கள் கைவசம் இருக்கிற ஊடகங்கள், காசு கொடுத்து விலைக்கு வாங்கிய
ஊடகங்கள், திமுகவின் ஊடக நிறுவனங்கள் (தொலைக்காட்சி, பத்திரிக்கை மற்றும் புத்தக
பதிப்பகங்கள்) மூலம் ஆதாயம் அடைந்து
கொண்டிருப்பவர்கள் மூலம் இந்த அசிங்கமான பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வந்தார்கள்.
மாதமாக தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியை அதிமுகவின் பி டீம்
என்று இவர்கள் எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்?
இந்த அணி மூலம் திமுக வுக்கு சாதகமாக விழக்கூடிய வாக்குகள் பிரிந்து போய்
விடும். அது அதிமுக விற்கு சாதகமாகி விடும் என்பது இவர்களின் குற்றச்சாட்டு.
கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகி கொக்கின் கண்களை மூடும் போது
கொக்கை பிடித்து விடலாம் என்று மேதாவி சொன்னானாம். அதற்கு இணையானது இவர்களின் இந்த
வாதம்.
அப்படி ஒரு தனி அணியாக நின்று மிகவும் கஷ்டப்படுவதற்குப் பதிலாக அதிமுகவோடு
கூட்டணி வைத்துக் கொள்வது சுலபமான ஆப்ஷன்
அல்லவா? ஜெயலலிதாவுக்கும் கூட இதுதானே உகந்ததாக இருக்கும்?
மக்கள் நலக் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் உதயமானது அல்ல. தேர்தலுக்கு
பல மாதங்கள் முன்பே பல்வேறு மக்கள் பிரச்சினைகள் அடிப்படையில் கூட்டியக்கம் கண்ட
அமைப்பு. மக்கள் நல கூட்டு இயக்கம் நடத்திய பெரும்பாலான போராட்டங்கள்
ஜெயலலிதாவுக்கு எதிரானதுதான்.
பல்வேறு பிரச்சினைகளில் திமுக அடக்கி வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில்
ஜெயலலிதாவுக்கு எதிராக உரத்த குரலில் மக்களைத் திரட்டி போராட்டம் கண்டது மக்கள்
நலக் கூட்டியக்கம்.
ஜெயலலிதாவின் சுபாவமும் ஆணவமும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனக்கு எதிராக
மக்கள் மன்றத்திலும் சட்ட மன்றத்திலும் குரல் கொடுத்து வருபவர்கள் மீது அந்த
அம்மையாரின் ஆத்திரம் எப்படி இருக்கும் என்பதும் அனைவரும் யூகிக்கக்கூடியதுதான். அப்படிப்பட்ட ஜெயலலிதா ஒரு பி டீமை உருவாக்கி அதற்காக 1500 கோடி ரூபாய் கொடுத்தார் என்பது கலைஞராலும் கற்பனை செய்ய முடியாத கதை. கலர் கலரா சட்டை போடச் சொல்லி ஸ்டாலினுக்கு ஆலோசனை கொடுத்த அதே கன்சல்டேடிவ் ஏஜென்சி ஒரு வேளை இப்படி ஒரு ஐடியா கொடுத்து இருக்கலாம். காசுக்காக எதையும் செய்வார்களே!
திமுக, அதிமுக தவிர வேறு மாற்று அரசியல் சக்திகள் வலிமை பெறக்கூடாது என்பதைத் தவிர உடன்பிறப்புக்களின் இந்த இழிவான செயலுக்கு வேறு நோக்கம் எதுவுமில்லை.
கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளவர்களுக்கு, எதற்கும் யாரோடும் சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பவர்களுக்கு, நாடகமாடுவதையே அரசியலாகக் கொண்டவர்களுக்கு மற்றவர்களைப் பார்த்தாலும் தங்களைப் போலத்தான் தெரியும்.
ஜெயலலிதாவுக்கு எதிராக ஐந்தாண்டுகளில் எந்த போராட்டமும் நடத்தாதவர்கள், எந்த ஒரு மக்கள் பிரச்சினைகளைப் பற்றியும் கவலைப்படாதவர்கள், மோடியோடு கைகுலுக்க அவ்வப்போது கண்ஜாடை கொடுத்துக் கொண்டு இருப்பவர்கள் எல்லாமே திமுக மட்டுமே.
அவர்கள் எழுதுவது எனக்கு தரக்குறைவாகத் தெரிகிறது. ஆனால் அவர்களின் தரமே அதுதான் என்பது யதார்த்தம். அதிலும் வாங்கிய கூலிக்கு மேலேயே கூவினார்கள். தேர்தல் வரைதான் அவர்களுக்கு கவனிப்பு இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.தேர்தல் முடிந்து விட்டது. இனியாவது அவர்கள் தங்கள் பிழைப்பைப் பார்க்கட்டும். எலும்புத்துண்டுகள் எப்போதும் கிடைக்காது.
கட்டுமரத்தோட படம் ரொம்பப் பொருத்தம்
ReplyDeleteno doubt vaiko helped Jayalalitha only.. amount not sure
ReplyDeleteகோயபல்ஸ் பொய் உங்களிடமும் வேலை செய்துள்ளது
Delete//அப்படி ஒரு தனி அணியாக நின்று மிகவும் கஷ்டப்படுவதற்குப் பதிலாக அதிமுகவோடு கூட்டணி வைத்துக் கொள்வது சுலபமான ஆப்ஷன் அல்லவா? ஜெயலலிதாவுக்கும் கூட இதுதானே உகந்ததாக இருக்கும்?
Deleteஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் முயற்சியாக இருக்கலாம்.
கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகி கொக்கின் கண்களை மூடும் போது கொக்கை பிடித்து விடலாம்
Deleteதமிழகத்தில் இந்த முறை நடந்த தேர்தலுக்கும் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் பல ஒற்றுமைகள். காங்கிரஸ் - பா.ஜ.க. மாதிரி தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. ஆம் ஆத்மி இடத்தில் மூன்றாவது அணி. ஆம் ஆத்மியை எப்படி காங்கிரசும் பா.ஜ,.க.வும் அடுத்தவருடய் பிடீம் என்று சொன்னார்களோ அதே மாதிரி தமிழகத்தில் மூன்றவது அணியை பிடீம் என்று அழைக்கிறார்கள். மூன்றவது அணி தங்கள் பிரச்சாரத்தை ஏன் இப்படி சொதப்பினார்கள் என்ற ஒன்று மட்டும் புரியவில்லை
ReplyDeleteமூன்றாவது அணி அமைத்ததெல்லாம் சரிதான்! ஆனால் பிரசாரம், மற்றும் அவர்களிடையே ஒற்றுமை இன்மை போன்றவை கொஞ்சம் சந்தேகத்தை கிளப்பிவிட்டன. இந்த முறை அவர்கள் வெல்லாவிட்டாலும் இரு திராவிட கட்சிகளுக்கும் கொஞ்சம் பீதியையாவது கிளப்பிவிட்டார்கள் என்ற வகையில் பாராட்டலாம்.
ReplyDeleteஒற்றுமையின்மை என்ற பிரச்சினையே எழவில்லை. கையில் உள்ள நிதிக்கு ஏற்ப பிரச்சாரம் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும். நிதி திரட்ட பட்ட பாடே, இந்த 1500 கோடி வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தும்
Deleteதேர்தல் முடிவு வந்துவிட்டது. வைகோ மிகுந்த மகிழ்வோடு உள்ளார். கிடைத்த பணத்தை எங்கே எப்படி முதலீடு செய்வது என்று யோசித்து வருகிறாராம்.
ReplyDeleteDmk fought this election spending huge amount on advertisement,stalin's corporate programme and conducting imaginary exit polls with Nd tv,news7,dinamalar nakkeran etc but tn electorate are not fools to believe them and voted accordingly.
ReplyDelete