Tuesday, May 24, 2016

தா.பா தாவி விடுங்களேன்தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு எப்போதுமே ஒரு தர்ம சங்கடம் தா.பா.

இவரது  அளவு கடந்த அம்மா பாசம் அனைவரும் அறிந்ததே. தேர்தல் வரை ஏதோ கொஞ்சம் அடக்கி வைத்திருந்த அந்த பாசம் அம்மையார் வெற்றி பெற்றதும் பீறிட்டு கிளம்புகிறது.

ஏதோ பதவியேற்பு விழாவுக்கு போனோமா, முதல் வரிசையில் உட்கார்ந்து விட்டு வந்தோமா என்றில்லாமல் "புலிகள் நிறைந்த கானகத்தில் வெற்றி பெற்ற புள்ளி மான்" என்று எதுகை மோனை வசனம் வேறு. 

பேசாமல் நீங்கள் அங்கேயே சென்று அடைக்கலமாகி விடுங்களேன். உங்களால் கிடைக்கும் தலைகுனிவிலிருந்து நாங்கள் விடுதலை பெறுவோம். உங்களது நடவடிக்கைகளுக்கு விளக்கம் சொல்வதிலிருந்தும்  விடுவிக்கப்படுவோம்.

 

10 comments:

 1. That is a nice advice. In fact saffron and red compliment each other. both are cadre based,are against FDI,Top down instructions,violent behavior, advocating obsolete ideas, opposed to criticism and eliminate the opponent. If both can merge India "engeyo poidum ". Why don't you try comrade if I can call you that.

  ReplyDelete
  Replies
  1. All you said applies only to Saffron and Not for Red. More over now you are not against FDI. You have become their slaves.

   Delete
 2. நியாயமா சொன்னீர்கள். அவருக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன! ஆனால் நேரடியாக அதிமுக அல்லக்கையாக அவர் இருப்பதுவிட, கம்யூனிஸ்ட்டாக இருந்து தனக்கு சேவை செய்வதையே ஜெயலலிதா விருப்புகிறார். அப்போது தான் தொழிளாளர்களினதும் புரட்சி தலைவி என்ற தோற்றம் அவருக்கு இருக்கும்.

  ReplyDelete
 3. தா பா நன்கறியப்பட்ட ஒரு பச்சோந்தி.அவர் சிகப்பு துண்டை தோளிலும், பச்சைத் துண்டை மனதிலும் அணிந்திருக்கிறவர்.ஆனால் அவர் இந்த தேர்தலில் பெருத்த பின்னடைவை இடதுசாரிகளுக்கு ஏற்படுத்தினார் என்பதை ஏற்கமுடியாது.அதற்கு உங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தான் பெருமளவு பொறுப்பு.நன்றாக அமைந்த மக்கள் நலக் கூட்டணியை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்த ‘பெருமை’ அவருக்கே உரித்தானது.வெற்றி பெற்றிருக்க வேண்டிய பல தொகுதிகளை தானும் திங்காமல் கம்யூனிஸ்டுகளும் தின்ன முடியாமல் தேங்காயைப் போல உருட்டி (உம்:கோவில்பட்டி)கெடுத்தவர் வைகோ தான்.திமுகவில் ஒரு கொளரவ தோற்றத்திற்கு அழைக்கப்பட்ட நபரை, ம ந கூட்டணியின் கதாநாயக பாத்திரத்திற்கு ஆசை காட்டி அழைத்து வந்து ஒட்டு மொத்த மக்களின் பார்வையில் ம ந கூட்டணியின் நன்மதிப்பை சிதைத்தவரும் அவர் தான்.(இந்த காரியத்திற்கு பாஜக கூட சம்மதிக்கவில்லை).இவரா முதல்வர் என்கிற கேள்வியும், வைகோவின் நாடகபாணி உரைகளும் ஒரு கேலிப்பொருளாக உங்கள் கூட்டணியை மக்கள் முன் நிறுத்தியது.இது போல எத்தனையோ சொல்லலாம்.தா பாவை விமர்சிக்கிற அளவிற்கு வந்து விட்ட உங்களால் வைகோவை பற்றி பேச விடாமல் தடுப்பது எது? வைகோவை குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று ஆராதித்த முத்தரசன் போன்ற பலரும் ஒரு ”மோடி மஸ்தான்” போல வைகோவை நம்பியதை விமர்சியுங்கள்.தேர்தல் முடிந்த பின் தானும் மனதிலிருந்து பேசுங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தா.பா பற்றிய விமர்சனம் வைத்தது கூட சரியில்லை என்றே கருதுகிறேன். ரொம்பவுமே ஓவரா போகிறார் என்பதால் வைத்தது.

   வைகோ பற்றிய பல குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானது. உடன்பிறப்புக்களின் அவதூறு, கற்பனை. அவர் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார் என்பது மட்டுமே அவர் மீதான விமர்சனம்

   Delete
 4. நாம் ஒரு கட்சியில் இருந்தால், கொள்கையை மீறி வேறு கருத்து வைக்கும் தலைவர்களையும், பிறகட்சித் தலைவர்களுக்கு ஜால்ரா போடுபவர்களையும், justify பண்ணி ஆதரிக்கும் தர்மசங்கடமான நிலைமைக்கு, தலைவர்கள் தொண்டர்களைத் தள்ளக்கூடாது. தா.பா நல்ல பேச்சாளர். ஆனால் கொஞ்சம் அதிமுக சார்பு (மார்க்ஸ்..கம்யூனிஸ்டில் பலர் கருணானிதி சார்பு மாதிரி)

  கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவையோ திமுகவையோ விட்டு விலகச் சரியான காரணம் இல்லை. வைகோவின் personal agendaஆவுக்குப் பல கட்சிகள் பலியாகிவிட்டன.

  ReplyDelete
 5. சிறுதாவூர் பற்றி பேசும் போதே சீறினார்... அவருக்கு...........பற்று அதிகம் என்று தோன்றுகிறது...உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 6. ha ha pooni kannai moodikondal ulagam asthmiththu viduma enna ? ஒருவன் கம்யூனிஸ்ட் என்றால், அவன் வெறும் உடலுழைப்பாளி மட்டுமல்லன், அவன் படிப்பறிவு பெற்றவன், தீர்க்கமாகச் சிந்திக்கத் தெரிந்தவன். அறிவியலை அறிந்தவன். உளறிக்கொட்டாமலிருக்க பயிற்சி பெற்றவன். மற்றவர்களின் உளறல்களைக் காப்பியடிக்காமல் இருப்பவன். தொடர்ந்து தன்னை முன்னேற்றிக்கொள்பவன்.

  ReplyDelete
 7. ///தொடர்ந்து தன்னை முன்னேற்றிக்கொள்பவன்///
  எப்படி மேல இருக்கற படத்தல மாதிரியா...? ஆக மொத்தம் நல்லவன் இல்லைன்னு சொல்ற மாதிரி இருக்கு...

  ReplyDelete
 8. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏன் இன்னும் இந்த அவமானத்தை கட்சியில் இருந்து நீக்காமல் வைத்துள்ளனர் என்று புரியவில்லை....

  ReplyDelete