கேரளப்பயணத்தில் தேக்கடியில் ஒரு படகுப்பயணம். சில ஆண்டுகளுக்கு முன்னே
நடந்த விபத்து மனதில் ஒரு மூலையில் அச்சம் கொடுத்தாலும் “துணிந்த பின் மனமே துயரம்
கொள்ளாதே” என்று புறப்பட்டாகி விட்டது.
முல்லைப் பெரியார் ஏரியில் ஒரு நீண்ட உலா. அடர்ந்த கானகத்திற்கு இடையே
பரவசப்பயணம். எங்கெங்கும் பசுமை கண்களுக்குக் கிடைத்த பரிசு. குளிர்ச்சியான
தட்பவெப்பம் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம்.
காட்டிலிருந்து பல விலங்குகள் தண்ணீர் அருந்த வரும். உன்னிப்பாக
கவனியுங்கள் என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள்.
அதோ அங்கே காட்டெருமைக் கூட்டம்
அதோ அங்கே ரெண்டு யானை
இங்க பாருங்க, மான் கூட்டம்.
அங்க போறது புலி.
இப்படியெல்லாம் படகின் வழிகாட்டி சொல்ல,
ஆமாமாம் என்று படகில் உள்ளவர்கள் தலையாட்ட நானும் அப்படியே வழிமொழிய
நேர்ந்தது.
என் கண்ணிற்கு பட்ட ஜீவராசிகளின் படங்களை முதல் படத்திலும் கடைசி நான்கு
படங்களிலும் பார்க்கவும்.
என்ன செய்வது! என் கண்ணின் சக்தி அவ்வளவே
இருப்பினும் சில நாட்கள் மழைக்குப் பின்பு மீண்டும் வெயில் கொளுத்துகிற இவ்வேளையில் தேக்கடி
படங்களை பார்ப்பதே குளிர்ச்சி தரும் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று
நம்புகிறேன்.
நல்லா இருக்கு.
ReplyDeleteபடங்கள் கண்களுக்கு குளிர்ச்சியை வழங்குகின்றன
ReplyDelete