Tuesday, May 31, 2016

தமிழ்மணத்தில் ஏன் இப்படி? அடிக்கடி




சில மாதங்கள் முன்பாகத்தான் கவனித்தேன்.

தமிழ்மணம் வெளியிடுகிற சூடான இடுகைகளில் ஒரு சின்ன வேறுபாடு இருப்பதை.

முகப்பு பக்கத்தில் வெளியிடும் சூடான இடுகைகள் பட்டியலுக்கும் உள்ளே சென்று பார்த்தால் கிடைக்கும் பட்டியலுக்கும். 

முகப்பு பக்கத்தில் இல்லாத பதிவு உள்ளே சென்று பார்த்தால் இருக்கிறது. 

அடிக்கடி இது போல நிகழ்கிறது. 

இங்கே ஒரு உதாரணத்தைப் பாருங்கள்





உள்ளே, முதல் பக்கத்தில் இருக்கிற "அதிரப்பள்ளிக்கு போகாதீங்க" என்ற பதிவு முகப்புப் பக்கத்தில் காணவில்லை பாருங்கள். 


முகப்புப் பக்கத்தில் ஒரு பதிவரின் ஒரு பதிவு மட்டுமே தெரியும்படி ஏதேனும் கொள்கை இருக்கிறதா என்ன? மற்றவர்களுக்கும் இது போன்ற அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.


 

6 comments:

  1. இப்போதும் தமிழ்மணம் பற்றி ஏதுவும் புரியுதில்லை !

    ReplyDelete
  2. உங்க பதிவின் தலைப்பிலே அல்லது முதல் 4-5 வரிகளிலோ ஒரு சில வார்த்தைகள் இருந்தால் அப்பதிவுகள் முகப்பில் தெரியாது, உள்ளே மட்டும் தெரியும். இதுபோல் எல்லாருக்கும் நடப்பதுண்டு. ஒரு சிலர் அவ்வார்த்தைகளை கவனமாகத் தவிர்த்து பதிவிடுவதுண்டு. என்ன வார்த்தைகள் அவை? இப்போ என்ன வார்த்தைகள் வடிகட்டப்படுதுனு தெரியலை. ஒரு காலத்தில் தமிழ்மணம் அல்லது பதிவர் என்கிற வார்த்தைகள்கூட வடிகட்டப் பட்டது

    ReplyDelete
  3. உண்மைதான் முகப்பு பக்கத்தில் ஒரு பதிவரின் ஒரு பதிவு மட்டுமே தெரியும். அதே போல வாசகர் பரிந்துரையிலும் ஒரு பதிவு மட்டுமே தெரியும். இன்னொரு பதிவருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அவ்வாறு கட்டமைக்கப் பட்டிருக்கிறது தமிழ்மணம்.வாசகர் பரிந்துரையில் இரண்டு நாட்களுக்குள் ஏழு வாக்குகள் பெற்றால் மட்டுமே இடம் பெரும் மூன்றாம் நாள் பெற்றால் முகப்பில் தெரியாது.ஆனால் உள்ளே சென்று பார்த்தால் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே

      Delete
  4. முரளி சரியாகச் சொல்லியுள்ளார். அவர் சொன்னதுபோல் ஒரே நேரத்தில் ஒரே பதிவருடைய இரண்டு பதிவுகள் முதல் பக்கத்தில் தெரியாது. அவை இரண்டில் எது அதில் அதிகமாக க்ளிக்கப் பட்டதோ அது மட்டும்தான் தெரியும். இது ஒரு நல்ல விசயம்தான்.சூடான இடுகையில் முதல் பக்கம் முழுவதும் ராமன் வேலூர்னு இருந்தா நல்லா இருக்காது இல்லையா?:))

    ReplyDelete