Friday, May 20, 2016

வரலாறு என்று கதைக்கும் வக்கிரம்




இன்று வாட்ஸப்பில் உலாவியது இது.

1957- Kamaraj CM
.
1962- Kamaraj CM
.
Then kamaraj died.
.
1967-(Anna) DmK win
.
1972- Dmk win
.
Anna Died
.
1977- MGR Won CM
.
1984- MGR won C.M
Mgr Died..
.
2011- Amma won
.
2016- Amma won

.Then amma

#sathyama naaa solala makkkaley....
#varalaru soluthu....



என்ன ஒரு வக்கிர சிந்தனை! என்னத்தான் ஜெயலலிதா ஒரு மோசமான மனிதராக இருந்தபோதும், ஜெயலலிதாவின் வெற்றியை இன்னும் ஜீரணிக்க முடியாமல் வெறுப்பில் இருந்த போதும்,   இப்படிப்பட்ட செய்திகளை, எண்ணத்தை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். அடுத்தவரின் மரணத்தை எதிர்ப்பார்ப்பது போன்ற கேவலமான செயல் எதுவும் கிடையாது. இதற்காக வரலாறை வேறு தப்பு தப்பாக திரிக்கிறார்கள்.  

காமராஜர் 1954 ல் முதல்வராகிறார். அதன் பின்பு 1957 லும் பிறகு 1962 லும் மீண்டும் முதலமைச்சராகிறார். 1963 ல் காமராஜர் திட்டத்தின் அடிப்படையில் பதவி விலகுகிற அவர், அவசர நிலை அறிவிக்கப்பட்ட பின்னணியில் 1975 ல் காலமாகிறார். முதல்வர் பதவியிலிருந்து விலகி பனிரெண்டு ஆண்டுகள் கழித்தே அவரது மரணம் நிகழ்கிறது.

அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை 1967 ல் முதல்வராகி 1969 ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார். இரண்டாவது முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பே அவருக்கு கிடைக்கவில்லை. 

அண்ணா இறந்த பின்பு 1969 ல் முதல்வராகிற கலைஞர் 1971 ல் சட்டமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை சந்தித்து 1971 லேயே மீண்டும் முதல்வராகி 1976 வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார். 1972 ல் தமிழக சட்ட சபைக்கு தேர்தலே நடக்கவில்லை.

எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ச்சியாக முதலமைச்சராக 1977, 1980, 1984 ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதுதான் நிஜமான வரலாறு. அப்படி இருக்கையில் வரலாற்றை திரித்து தங்களின் வக்கிர உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் இழி குணமுடையோர். கண்டிக்கப்பட வேண்டியவர்கள். 

6 comments:

  1. //// வரலாற்றை திரித்து தங்களின் வக்கிர உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் இழி குணமுடையோர். கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.////

    100 % Correct Sir.

    M. Syed
    Dubai

    ReplyDelete
  2. நானும் என்னுடைய குழுவில் கண்டித்தேன் அய்யா ... http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  3. உண்மையிலேயே இழி குணமுடையோர்தான்
    கண்டனத்திற்கு உரியவர்கள்

    ReplyDelete
  4. People never thought that jayalalitha will win this time. And dmk spent
    lot of money in the press, tv and other media highlighting the chennai floods.
    but despite all this still Jayalaitha won, and those people who could not digest that
    victory were behind this nonsense.

    ReplyDelete
  5. Reproducing the , izhi, news is also a izhi kunam, vakra puthi

    ReplyDelete
    Replies
    1. இது என்ன சார் அபத்தமான லாஜிக்? தப்பு செய்யறவங்களை விட்டு விட்டு அதை கண்டிக்கிறவங்களைப் போய். . . . . ஓ, அந்த வக்கிர புத்தி செய்தியை உருவாக்கிய ஆள் நீங்கதானா? இல்லை அதை பரப்பினவரா? உங்க வலைப்பக்கம் (உங்களதுதானே அது?) எல்லாரும் பாக்க முடியாதாமே? அங்க போய்ப் பாத்துட்டு வந்தேன். அது என்ன சார் நியாயம்? நீங்க எழுதறதை ரகசியமா வச்சுட்டு இங்க வந்து வாந்தி எடுக்கறீங்க.

      Delete