அனேகமாக பெரும்பாலான அரங்குகளை விட்டு வெளியேறி இருக்கும் வேளையில் நேற்று 24 சென்றேன். படத்தை வெகுவாக புகழ்ந்து என் மகன் முக நூலில் எழுதியிருந்தது
அப்படம் பார்க்கச் சென்றதற்கான முக்கியமான காரணம். லாஜிக், சைன்ஸ் எல்லாத்தையும்
மறந்துட்டு பாரு. டெக்னிக்கலா வாய்ப்பு உண்டா என்றெல்லாம் பார்க்காதே என்று
எச்சரித்து விட்டு, கரெக்டா போயிடு. முதல் சீனை பார்க்கவில்லையென்றால் ஒன்னும்
புரியாது என்றும் சொல்லி அனுப்பி வைத்தான்.
படத்த்தின் கதையைப் பற்றி பலரும் அக்குவேர் ஆணிவேராக எழுதி விட்டதால் அதைப்
பற்றி எழுதப் போவதில்லை.
லாஜிக் என்பதை மறந்து விட்டால் சுவாரஸ்யமான ஒரு படம். சூர்யா வில்லன்
கதாபாத்திரத்தினை விட தந்தை மற்றும் மகன் பாத்திரம் பரவாயில்லை என்று தோன்றியது.
ஆனால் மீண்டும் மீண்டும் வாட்ச் மெகானிக் என்று சொன்னதில் சமந்தாவிற்கு கடுப்பு
வந்ததாகத் தெரியவில்லை, எனக்கு வந்தது.
கால இயந்திரத்தை வைத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக காட்சிகளை
அமைத்திருக்கலாம். பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து அப்பா கண்டுபிடித்த கால
இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருபத்தி நான்கு மணி நேரம் மட்டுமே இருக்குமாம்.
அதை பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதற்கான படி நள்ளிரவிற்குள் மகன் மாற்றி
விடுவாராம். இது ஓவர் உடான்ஸ்.
சில காட்சிகள் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள
வேண்டும். வாட்ச் வேறு கையில் கட்டப்பட்டதை அறிந்து மகன் சூர்யா தேடி வருகையில்
வில்லன் அப்பாவாக காட்சி தருவது, தன்னை சமந்தா கண்டு பிடித்த உடன் மாடிப்படியில்
கீழே விழுந்து, நிலைமையை மாற்றுவது, தான் மாற்றியமைத்த கால இயந்திரம் கொண்டு வந்துள்ளது வில்லன் என்று கண்டுபிடித்த காட்சி ஆகியவற்றை சொல்லலாம். மழையை ஃப்ரீஸ் செய்யும் காட்சியும் ரசிக்க வைக்கிறது.
சமந்தா வழக்கமான பொம்மை என்றால் சரண்யா வழக்கம் போல் நெகிழ்வூட்டும் அம்மா. ஒரு பாடலைக் கூட ரசிக்க முடியவில்லை என்று சொன்னால் ரஹ்மான் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் எதுவும் சொல்லவில்லை.
கால இயந்திரத்தை இதற்கு முன் வந்த லோ பட்ஜெட் படமான "இன்று, நேற்று, நாளை" இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருந்தனர் என்பது கால இயந்திரம் இல்லாமலே நினைவுக்கு வருகிறது.
லாஜிக்கை மறந்து விட்டு பார்த்து விட்டு வரலாம்.
இப்பொழுது வரும் படங்களில் எதில் இருக்கிறது லாஜிக்? அப்பட்டியலில் இதனையும் சேர்ப்போமே.
ReplyDeleteஉண்மைதான் நண்பரே
ReplyDeleteலாஜிக்கை மறந்து விட்டுப் பார்க்கலாம்
//ஒரு பாடலைக் கூட ரசிக்க முடியவில்லை என்று சொன்னால் ரஹ்மான் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் எதுவும் சொல்லவில்லை.//
ReplyDelete:)
இளையராஜா என்றால் நல்லா விரும்பியபடி போட்டு தாக்கலாம்.
இல்லை நண்பரே. இளையராஜாவாக இருந்திருந்தால் பாராட்டி எழுத வாய்ப்பு கிடைத்திருக்கும்
Delete