Saturday, May 14, 2016

லக்கானி சார், கொஞ்சம் டவுட்டு





முகநூல், வாட்ஸப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இன்று மாலை ஆறு மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்தால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்லியுள்ளீர்களாம்.

நல்லது அப்படியே ஆகட்டும்.

ஆனால் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தால் அதற்கு அனுமதி உண்டாமே! அது என்ன தேர்தல் பிரச்சாரம் இல்லாமல் ஆச்சி மசாலா விளம்பரமா? பத்திரிக்கைகள் காசு வாங்கிக் கொண்டு விளம்பரம் செய்யலாம். ஆனால் காசு செலவில்லாமல் தொண்டர்கள் தங்களுக்கு தெரிந்த உத்தியை பயன்படுத்தினால் அதற்கு கைதா? எந்த ஊர் நியாயம் சார் இது?

சரி, டி.வி ல இந்த கட்சிகளோட விளம்பரத் தொல்லை தாங்க முடியாம ஏதாவது நல்ல பாட்டு பார்ப்போம் என்று யு.ட்யூப் பக்கம் போனா அங்கயும்  திமுக விளம்பரம் தொல்லை செய்யுது. அதற்கு இன்று மாலை ஆறு மணிக்கு மேல் தடை உண்டா?

இன்னாருக்கு வோட்டு போடுங்க, இந்த சின்னத்துல பொத்தானை அழுத்துங்க என்று சொன்னால் அது பிரச்சாரம். அப்படி இல்லாமல் இவரு அப்படி, அவரு இப்படி என்று வெறுமனே கருத்து மட்டும் சொன்னால் அது பிரச்சாரம் என்ற வகையில் வராதல்லவா?

கொஞ்சம் இதையெல்லாம் க்ளியர் பண்ணுங்க சாரே.

6 comments:

  1. நல்ல டவுட்டுதான்..

    ReplyDelete
    Replies
    1. We can file a complaint if in your computer automatically advt disturb...in cyber law

      Let us see somebody ring the bell

      Sesh

      Delete
  2. [[முகநூல், வாட்ஸப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இன்று மாலை ஆறு மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்தால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்லியுள்ளீர்களாம்.]]
    மட IAS ஒழிந்தால் தான் நாடு உருப்படும்! அப்ப மாலை 5.59 வரை செய்துள்ள பல நூறு வலைத்தளங்களில் உள்ள தேர்தல் பிரச்சார பதிவுகளை அழித்து விடுவார்களா? முட்டாள்கள்! இது என்ன செய்தித் தாளா! துக்ளக் தோத்தான்!

    ReplyDelete
  3. சட்டதிட்டங்கள், அதனை நடைமுறைப்படுத்துவது பொதுவாக பழமையானது. இன்னமும் நாம் தகவல் புரட்சி யுகத்திற்கு ஏற்றவாறு சட்டத்தினை மாற்றவில்லை. மாற்றினாலும் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது? (ஒளிபரப்பு அனைத்தும் வெளிநாடுகளில் உள்ளது). மற்றபடி பணம் பத்தும் செய்யும்.

    ReplyDelete
  4. செடியில் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பார்த்தால் ஒரு உற்சாகம் வரும். அழகான பூவை உற்று நோக்கியா பதிவும் படமும் அருமை. இப்போதெல்லாம் வீடுகளில் மஞ்சள் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. குவளை என்று நினைக்கிறேன்.வாஸ்துப்படி நல்லதாம்

    ReplyDelete
    Replies
    1. சார் என்ன இது? வேறு ஏதோ பதிவருக்கு போட வேண்டிய பின்னூட்டம் மாறி விட்டது என்று நினைக்கிறேன்

      Delete