தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டும் வல்லமை படைத்த ஐம்பத்தி ஆறு இன்ச் மார்புள்ள மாட்சிமை தாங்கிய புஜபராக்கிரமசாலி மோடியின் ஆட்சியில் தீவிரவாதக் குற்றச்சாட்டு உள்ள இன்னொருவர் விடுதலை ஆகி விட்டார்.
போதிய சாட்சியம் கிடையாதாம்.
ஆமாம். அது எப்படி இருக்கும்?
காவிக் கூட்ட பெண் சாமியார் குற்றவாளியாக இருக்கும் போது எப்படி சாட்சிகள் போதுமானதாக இருக்கும்? சாட்சிகளை அழிப்பதும் சிதைப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பின் பிரதான பணியாக இருக்கையில் எப்படி சாட்சியங்கள் இருக்கும்?
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மாயாபென் கோட்னானி விடுதலை.
குஜராத் மாநில கொலைகாரன் அமித் ஷா விடுதலை. அந்தாளுக்காக வாதாடிய வக்கீல் இப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதி.
இந்த வழக்கில இன்னும் சில பேர் மீது மட்டும் எதுக்கு குற்றப்பத்திரிக்கை?
அந்த ஆர்மி ஆபிசரும் உத்தமன்னு சொல்லி விடுதலை செய்ய வேண்டியதுதானே?
காவித் தீவிரவாதம் இந்தியாவில் இருக்கிறது என்று நிரூபித்த ஹேமந்த் கர்கரேவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று அப்போதே குற்ற்ச்சாட்டு எழுந்தது. மும்பை தீவிரவாத தாக்குதலை பயன்படுத்தி அவரை கொலை செய்து விட்டார்கள் என்று ஒரு போலீஸ் அதிகாரி புத்தகமே எழுதினார். இப்போது அந்த சாமியார் விடுதலையை பார்க்கும் போது அந்த சந்தேகம் நிரூபணமாகிறது.
பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
மோடியரசு ஆட்சி செய்தால் காவிக்கூட்ட கொலைகாரர்கள் எல்லாரும் உத்தமர்கள்.
போங்கடா, நீங்களும் உங்களும் சட்டமும்.
பின் குறிப்பு : நான் ரொம்ப கடுப்பில இருக்கேன். காவிக் கூட்ட அடியாள் யாராவது இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாம ஏதாவது பினாத்தினா? அப்புறம் ரொம்ப அசிங்கப்பட வேண்டியிருக்கும். எச்சரிக்கை
தீவிரவாதம் ஒழிக!
ReplyDeleteதீவிரவாதிகள் ஒழிக!
பாரத் மாதா கீ ஜெய்!
ஜெய் ஹிந்த்!
குறிப்பு: தீவிரவாதம், தீவிரவாதி என்பவற்றின் தொடக்கத்தில் "இஸ்லாமிய" என்பதை மறவாமல் சேர்த்துக்கொள்க!
ஆஹா, நாம் தேசபக்தர் ஆகிவிட்டோம்!