Saturday, May 7, 2016

யாருக்கு உண்டு அருகதை?




தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதானமாக மூன்று பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஊழல்,
மது விலக்கு,
சமூக நல்லிணக்கம்

ஊழல் பற்றி பேச திமுகவிற்கோ, அதிமுகவிற்கோ அருகதை உண்டா? ஊழல் செய்வதில் அறிவியல் பூர்வமான நடைமுறைகளை கையாண்டு உள்ளார்கள் என்று சர்க்காரியா கமிஷனால் பாராட்டப்பட்ட பெருமை கலைஞருக்கு  உண்டு. 1,76,000 கோடி ரூபாய்க்கு எத்தனை சைபர் என்று போட்டுப்பார்த்தால் ஒவ்வொரு முறையும் தவறாகத்தான் வருகிறது. ஆனால் அவ்வளவு தொகையை அடித்துள்ளார்கள்.

அதிமுகவை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிலும் ஊழல். சொத்து குவிப்பு வழக்கு இன்னும் முடியவில்லை. உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு அம்மையாரை இன்னும் ஒரு முறை கூட சிறைக்கு அனுப்பலாம். அவரது பதவி பறி போகலாம்.

லட்சக்கணக்கான கோடி ரூபாய் கிரானைட்டில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுக்குமே இதில் பொறுப்பு இருக்கிறது. பங்கும் இருக்கிறது. சாட்சியங்களை அழித்து விடக்கூடாது என்று ஒரு இரவு முழுவதும் சகாயத்தை சுடுகாட்டில் தங்கவைக்குமளவிற்கு நிலைமையை மோசமாக்கியுள்ளார்கள்.

இந்த இரண்டு கட்சிகளால் எப்படி ஊழல் இல்லாத ஆட்சியை அளிக்க முடியும்?

இடதுசாரிகளைப் பொறுத்தவரை மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு, புத்ததேவ், திரிபுராவில் நிரூபன் சக்ரவர்த்தி, தசரத் தேப், மாணிக் சர்க்கார், கேரளாவில் ஈ.எம்.எஸ், நயனார், அச்சுதானந்தன் என்று மொத்தம் எட்டு முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். இடதுசாரிகளை, மார்க்சிஸ்டுகளை பழிப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ள ஆட்களால் கூட இவர்கள் மீதோ, இவர்களின் அமைச்சர்கள் மீதோ சிறு ஊழல் குற்றச்சாட்டு கூட எழுப்ப முடியவில்லை. அந்த அளவிற்கு நேர்மையின் உருவமாக ஆட்சி நடத்தியவர்கள் இடதுசாரிகள். 

ஊழலற்ற ஆட்சி என்பதைப் பற்றிப் பேச இடதுசாரிகளைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது?

இரு கழகங்கள் பேச முடியுமா அல்லது சுகாதாரத்துறை ஊழல்களுக்காக விசாரணையில் இருக்கும் அன்புமணிதான் பேச முடியுமா?

மது விலக்கு என்று எடுத்துக் கொண்டால் இரு கட்சிகளுமே கூட்டுக் களவாணிகள்தான். 

டாஸ்மாக்கை அறிமுகம் செய்தது, இலக்கு நிர்ணயித்து அதை விஸ்தரித்தது எல்லாமே இந்த இரு கழகங்கள்தான். 

திமுக ஆட்சி நடந்தாலும் அதிமுககாரர்களின் மதுபான ஆலைகளிலிருந்து சரக்கு டாஸ்மாக்கிற்குப் போகும். அதிமுக ஆட்சியிலும் திமுககாரர்களுடைய ஆலைகளிலிருந்து சரக்கு வாங்குவார்கள். வெளியே சண்டை போடுவது போல தோற்றம் இருந்தாலும் மக்களை சுரண்டுவதில் ஒற்றுமையாகத்தான் உள்ளார்கள். இதில் இருவருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மதுபான தொழிற்சாலைகளை மூடச் சொல்வோம் என்று ஒரு திமுக தலைவர் கூறுகிறார். இந்த ஞானம் அவருக்கு இத்தனை நாள் ஏன் வரவில்லை? இப்போதுதான் போதி மரம் கிடைத்ததா?

(இன்று நடைபெற்ற பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பொது மாநாட்டில் பேசியதிலிருந்து ஒரு பகுதி) 

தொடரும்

13 comments:

  1. "ஊழலற்ற ஆட்சி என்பதைப் பற்றிப் பேச இடதுசாரிகளைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது?"
    மொத்த இடங்களில் சுமார் பத்து சதவீத இடங்களில் மட்டுமே போட்டியிடும் இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தைப்பற்றிப் பேச இயலுமா?? அப்படியானால் இதற்குத் தீர்வு என்ன? விஜயகாந்த் ஆட்சியா?
    "சுகாதாரத்துறை ஊழல்களுக்காக விசாரணையில் இருக்கும் அன்புமணிதான் பேச முடியுமா?"
    அன்புமணி மீதுள்ள வழக்கில் உள்ள குற்றச்சாட்டு நிர்வாகக் குறைபாடு என்கின்ற வகையில் தான் உள்ளது. அவர் பணம் வாங்கினார் என்றோ அதற்கான சான்றுகள் உள்ளன என்றோ குற்றப்பத்திரிகையில் இல்லை. ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்ட இரு கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு அனுமதி நீட்டிப்பில் மருத்துவக் கவுன்சில் அபிப்பிராயத்தை மீறி சுகாதார அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது என்பது தான் குற்றச்சாட்டு. வழக்கு பதிவாவதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்டது தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அனுமதி நீடிக்கப்பட்டுவிட்டது. இந்த விசயம வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது. இது அரசியல் காரணங்களுக்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என்பதற்கு இது ஒன்றே போதும். நமது நீதிமன்றங்களின் கால தாமதத்தினை எதிரணியினர் நன்றாகப் பயன்படுத்தியுள்ளனர். இது தான் அன்புமணி தரப்பு வாதம். இது ஒப்புக்கொள்ளக்கூடியதாகத் தானே உள்ளது??
    என்னுடைய பார்வையில் மனிதன் என்பவன் குற்றம் செய்பவனே!!! பெரும்பான்மையினோர் மகான்கள் அல்ல. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஜனநாயகத்தில் மாற்றம் என்பது எளிதில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. இருப்பதில் நல்லதைத் தேர்வு செய்வதே நடைமுறை சாத்தியம். ஓட்டளிப்பதில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஓரிரு அணியினரே ஆட்சிக்கு வராமல் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களில் ஓரளவிற்கு நல்லவராகவும் தெளிவான பார்வை கொண்டவராகவும் இருப்பவரை தேர்வு செய்து அவருக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே என்னிடைய நிலைப்பாடு. அப்போது தான் நடுநிலையாளர்களும் நல்லவர்களும் அரசியலுக்கு வருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //அன்புமணி மீதுள்ள வழக்கில் உள்ள குற்றச்சாட்டு நிர்வாகக் குறைபாடு என்கின்ற வகையில் தான் உள்ளது. அவர் பணம் வாங்கினார் என்றோ அதற்கான சான்றுகள் உள்ளன என்றோ குற்றப்பத்திரிகையில் இல்லை. ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்ட இரு கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு அனுமதி நீட்டிப்பில் மருத்துவக் கவுன்சில் அபிப்பிராயத்தை மீறி சுகாதார அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது என்பது தான் குற்றச்சாட்டு. வழக்கு பதிவாவதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்டது தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அனுமதி நீடிக்கப்பட்டுவிட்டது. இந்த விசயம வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது. இது அரசியல் காரணங்களுக்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என்பதற்கு இது ஒன்றே போதும். நமது நீதிமன்றங்களின் கால தாமதத்தினை எதிரணியினர் நன்றாகப் பயன்படுத்தியுள்ளனர். இது தான் அன்புமணி தரப்பு வாதம். இது ஒப்புக்கொள்ளக்கூடியதாகத் தானே உள்ளது??// காமெடி பண்ணாதீங்க சார். மருத்துவ கவுன்சில் சேர்மனைக் கேட்டால் அவர் அடித்ததில் அண்புமணிக்கு போன பங்கு எவ்வளவு என்று தெரியும். எங்கள் ஊரில் கூட ஒரு அமைச்சர் இருந்தார் சொற்ப காலத்திற்கு. அந்த சொற்ப காலத்தில் அவர் ஈட்டியது பற்றியும் தெரியும்

      Delete
  2. தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதானமாக முன்வைக்கப்பட்ட மூன்று பிரச்சினைகளான ஊழல்,மது விலக்கு,சமூக நல்லிணக்கம் ஆகிவைகளை தீர்க்க செல்வி ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அதிமுக ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம்! உங்களுக்கு டெபொசிட் வருமா என்று முதலில் பாருங்கள்!



    கனவு காண வேண்டாம்!

    ReplyDelete
    Replies
    1. காவிரிமைந்தனா! ஜெயலலிதாவாவுக்கு பொற்காலம் தான் இப்போது நடைபெறுகிறது.இப்படி தொடர்ந்து அவரை அனுபவிக்க வைத்து தாங்கள் இருட்டில் வாழ மக்கள் அனுமதிக்கிறார்களா பார்ப்போம்!

      Delete
    2. //தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதானமாக முன்வைக்கப்பட்ட மூன்று பிரச்சினைகளான ஊழல்,மது விலக்கு,சமூக நல்லிணக்கம் ஆகிவைகளை தீர்க்க செல்வி ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அதிமுக ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம்! // இதை எழுதும் போதே உங்களுக்கே பகபகவென்று சிரிப்பு வந்திருக்குமே. நல்லா காமெடி பண்றீங்க. ஆமாம் Today and Me என்ற பினாமி தெரியும். நீங்களேதானா அது அல்லது நீங்கள் புதிய Fake id பினாமியா

      Delete
    3. Mr Yesterday and You உங்கள் ப்ரொபைலே காணவில்லையே. பினாமி என்பது நிரூபணமாகி விட்டதே

      Delete
  3. There is no good communist leaders in Tamilnadu. They take boldly side with ADMK and DMK and justified their misdeeds for obvious reason. Suitcase. Communist are good labour leaders and bad politicians as far as Tamilnadu concerned.

    ReplyDelete
    Replies
    1. சூட்கேஸ் வாங்கினால் எங்களை ஏன் சார் உண்டியல் குலுக்கிகள் என்று அழைக்கப்போகிறார்ர்கள்? தேர்தல் செலவுக்கு நாங்கள் படும் பாடு உங்களுக்கு தெரியுமா? முடிந்தால் அனுப்பி வையுங்களேன்

      Delete
  4. There is no good communist leaders in Tamilnadu. They take boldly side with ADMK and DMK and justified their misdeeds for obvious reason. Suitcase. Communist are good labour leaders and bad politicians as far as Tamilnadu concerned.

    ReplyDelete
  5. //”ஊழலற்ற ஆட்சி என்பதைப் பற்றிப் பேச இடதுசாரிகளைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது?"// நல்லது.சந்தன் பாசுவின் பெங்கால் லாம்ப்ஸ் பற்றியெல்லாம் இப்பொது மறந்து விடுவோம்,நானோ கார் தொழிலகம் அமைக்க மக்கள் அந்தளவிற்கு போராடிய போது ”எது” மக்களை விரட்டி துரத்த உங்கள் அரசுக்கு உந்துதலாக இருந்தது என்கிற ஊகமெல்லாம் வேண்டாம், மற்ற முதலாளித்துவ கட்சிகள் எல்லாம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து கட்சி நிதி தொடர்பான விவகாரங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோருகின்றதை ‘புரிந்து’ கொள்ள முடிவதைப்போல மேன்மை தங்கிய இடது சாரிகளும் கேட்பது ஏன் என்கிற அய்யத்தையும் ஓரம் கட்டி விடுவோம்.இப்போதுள்ள விஷயத்தை மட்டும் கருத்தில் கொள்வோம்.
    நீங்களே கவனமாக இடதுசாரிகளுக்கு மட்டும் தான் சான்றிதழ் வழங்குகிறீர்கள்.ஆனால் உங்களது முதல்வர் வேட்பாளர்,அந்த கட்சி,அதன் கொள்கைகளைப் பற்றி உங்களாலும் சான்று கூற முடியாது என்பது திண்ணம்.அவர்கள் எந்த மாற்று கொள்கையும் முன் வைக்காமலேயே இருந்தாலும் ”நான் நேர்மையாக இருப்பேன்” என்று கேப்டன்(?!) சொல்கிற வார்த்தையை மட்டும் நம்பி எப்படி அவரை முதல்வராக உட்கார வைப்பது? குடும்ப ஆட்சி,மதவெறி கட்சிக்கு ஆதரவளித்தவர்கள்,உலகமயமாக்கலுக்கு ஆதரவாக நடந்து கொண்டவர்கள்,சாதி வெறியர்களை கண்டிப்பதில் தயக்கம் காட்டுகிறவர்கள், கட்சியில் பலரும் கல்வி வியாபாரம் செய்கிறவர்கள் என்றெல்லாம் திமுகவையும் அதிமுகவையும் குறை சொல்லி விட்டு உங்கள் முதல்வர் வேட்பாளர் பற்றி அவர் கட்சி எந்த விதத்தில் இதிலிருந்து மாறுபட்டது என்பதை பற்றி விளக்கமுடியுமா? இதெல்லாம் போகட்டும்.ஊழலுக்கும் உங்கள் முதல்வர் வேட்பாளருக்கும் அவர் கட்சிக்கும் தொடர்பில்லை என்று சொல்லிவிட முடியுமா? அவர் எங்கே ஆட்சியில் இருந்தார் என்பது தானே உங்களது ஒரே ஆறுதல்? இடதுசாரி அமைப்புகளில் வேட்பாளர் தேர்வு எப்படி நடக்கிறது என்பது தெரிந்த செய்தி. பாலபாரதியை கட்சி பணிகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்சி விரும்பினால் பாலபாரதி கோபமுற்று கட்சியை விட்டு வெளியேறி விடுவதில்லை.ஆனால் திமுகவில் போட்டியிடுபவர்களின் பணபலம் சோதித்தறியப்படுவது விமர்சிக்கப்படுகிறது.அதுவே உங்கள் முதல்வர் வேட்பாளர் கட்சியிலோ சீட் தருவதற்கு முன் பணம் 40 லட்சம் 50 லட்சம் என வாங்கப்படுகின்றது. இப்படி 50 லட்சம் முன் பணம் கட்டி ஏரியா டீலர்ஷிப் போல சீட் வாங்கும் மக்கள் பிரதிநிதிகள் எந்த விதமாக பணியாற்றப் போகிறார்கள்? ஊழலுக்கான கரு இங்கிருந்து தான் உருவாகிறது என்கிற சமூக விஞ்ஞானம் கம்யூனிஸ்டுகளுக்கு ஏன் உறைக்க வில்லை.எவர் முதுகிலாவது ஏறி ஒரு 4 சீட் ஜெயித்து, சின்னத்தையும், தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டால் போதும் என்றால் மக்கள் அங்கீகாரத்தை இழப்போம் என்ற உணர்வு ஏன் உங்களைப் போன்றவர்களுக்கு கூட வருவதில்லை?

    ReplyDelete
    Replies
    1. மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் மட்டும் தனியாக இருபது தொகுதிகளில் தமிழகத்தில் போட்டியிட்டோம். ஆதரவளித்தீர்களா?

      Delete
    2. ’’நல்ல சாப்பாட்டு கடை வைத்தேன் ஓடவில்லை அதான் சாக்னா கடை வைக்க வேண்டியதாகி விட்டது’’ இப்படி ஒரு வியாபாரி சொல்லலாம், பாட்டாளி வர்க்க அரசியல் பேசும் இடதுசாரிகள் சொல்லக்கூடாது.

      2014 மக்களவை தேர்தலில் போயஸ் கார்டன் தாழ்வாரத்தில் 10 சீட் லட்சியம் 4 சீட் நிச்சயம் என்று தவவலிமையுடன் கால் கடுக்க நின்ற போதும் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக நிலுவையில் இருந்தது.தீர்ப்பு வருவதற்குள் தேர்தல் முடிந்து விடும் என கணக்கு போட்டு நின்றும் கூட பலனின்றி காவிரித்தாயினால் நெட்டி வெளித்தள்ளிய பின்னர் வேறுவழியின்றி ‘தனித்து’ நின்றால் இந்த தமிழகத்தின் வாக்காளப் பெருமக்கள் உங்களை உச்சி முகர்ந்து வாரியணைத்து வெற்றி பெற செய்வார்களா? முதலில் ஒவ்வொரு வார்டையும் அதன் மக்களையும் சென்றடையாமல் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று விட முடியுமா? மக்களவை தேர்தலில் தோல்விக்கு பின் மக்கள் நலக் கூட்டணி அமைத்தவரை ஓரளவு சரியாகத்தான் போனது.அது‘கேப்டன்+ம ந கூட்டணியான போது தான் சரிவை நோக்கி போகிறது.

      Delete
  6. நீங்கள் தொழிற்சங்கம் நடத்துகிறீர்களா? அரசியல் கட்சி நடத்துகிறீர்களா?

    ReplyDelete