தமிழகத்தின் வாக்காளர்கள் சரியான முடிவெடுக்க வேண்டிய சரியான தருணம்
இதுதான்.
ஆறாவது முறை முதல்வராக வேண்டும் என்ற வேட்கையுடன் ஓட்டு வேட்டையாடிக்
கொண்டிருக்கிறார்கள் கலைஞரும் ஜெயலலிதாவும்.
இதற்கு முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்யாதவற்றை இந்த முறை மட்டும் செய்ய
முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
கடந்தகால ஆட்சிகளின் போது அதிகாரத்தை ஊழல் செய்து கோடி கோடியாக
குவித்தவர்கள் இப்போது மட்டும் நேர்மையாக இருப்பார்கள் என்று யாரால் நம்பிக்கை
கொள்ள முடியும்?
கலைஞரும் வேண்டாம். ஜெயலலிதாவும் வேண்டாம்.
தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி மலரட்டும்.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா அணியை ஆதரிப்பீர்.
உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான நல்லதொரு வாய்ப்பு இப்போதுதான்
மலர்ந்துள்ளது.
இப்போது அந்த வாய்ப்பை நழுவ விட்டால்
பெரிய கட்சிகள் என்ற மாயையில் மயங்கினாலோ,
வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக இருப்பது என்றோ,
ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவது என்று ஆட்டு மந்தையாக மாறினாலோ
திமுக, அதிமுக என்ற இரண்டு தீய சக்திகளில் எதற்கு வாக்களித்தாலும் அது
நமக்கான சவக்குழியை நாமே வெட்டுவதற்கு சமமாகும்.
நிராகரிப்போம் தீய சக்திகளை, மாற்றத்தை உருவாக்குவோம்
ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவது என்பது ஆட்டு மந்தைகளின் குணயியல்பின் வெளிப்பாடு என்பதே உண்மை.
ReplyDeleteதமாகா அணி என்பது அம்மாவிற்காக தவமிருந்து அவரால் நிராகரிக்கபட்டதால் மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவுடன் ஒட்டி கொண்டவர்களாகும்.
திருமா தவிர இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் எந்தவிததிலும் மக்களின் நல வாழ்விற்கு உழைக்க போவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சி ஜெவின் கால்கள் கிடைக்காதா என்று ஏங்கி (எதாவது பிச்சை கிடைக்கும்) கிடக்கும் கட்சி. தமாகவின் தகுதி பற்றி எழுதவே வேண்டாம். வைகோ -சுயநல மன்னன். எங்கும் காசு வாங்கி இழி பிழைப்பு நடத்துபவர். இவரும் ஜெவின் இன்னொரு அடிமை. விஜயகாந்த் எந்த கொள்கையும் இல்லா அவலம். இந்த கூட்டணி வருவதற்கு, யார் வேண்டுமானலும் வரலாம்.
ReplyDeleteபோய்யா போ. இங்கே வெட்டித்தனமாக கதை விடுவதற்குப் பதிலாக திமுக சம்பாதித்து வைத்திருக்கிற ஊழல் பணத்தில் போய் தண்ணியடித்து விட்டு ஸ்டாலினுக்கு ஜால்ரா அடி. இன்னும் கொஞ்சம் எலும்புத்துண்டு கிடைக்கும்
Delete