Saturday, July 18, 2020

வைமுவிற்கு ஜெமோவின் காதல் கடிதம்




ஜெமோவின் பல்டி குறித்த மனுஷ்ய புத்திரனின் பதிவு இங்கே

வைரமுத்துவின் இலக்கிய ஆளுமையை விளக்கும் ஜெயமோகனின் தன்னிலை விளக்க கடிதம் பார்த்தேன். இதை ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். வைரமுத்துவை மட்டையடி அடித்ததற்கு எதிர்வினையாக மரபின் மைந்தன் முத்தையா பின் நூலுக்கு ஜெயமோகன் வைரமுத்துவைவை விதந்தோதி எழுதிய முன்னுரையை நான் நேற்று எடுத்துக்காட்டியதும்நான் வைரமுத்துவை நிராகரிக்கவெல்லாம் இல்லை... அவர் ரொம்ப கண்ணியமானவர்... ஏற்கனவே வைரமுத்துவின் இடத்தை மதிப்பிட்டிருக்கிறேன்" என்றெல்லாம் பல்லைக் காட்டுகிறார்

வைரமுத்து ஒன்றும் ராஜன்குறை போன்ற சிறுபத்திரிகை ஆள் அல்ல, ஜெயமோகன் இஷ்டத்துக்கு அடிச்சுவிட்டுட்டு கவலைப்படாமல் போய்கொண்டே இருப்பதற்கு. சினிமா ஆள்.  தொழில் செய்கிற இடத்தில் சச்சரவு வைத்துக்கொண்டால் சினிமாவில்  தனது கடை நிலை ஊழியப்பணி போய்விடும் என்று அறியாதவரா ஜெயமோகன். ?

தொப்பித் திலகம் கட்டுரைக்காக ஜெயமோகன் நடிகர் சங்கத்திடம் எழுதிக்கொடுத்ததாகச் சொல்லப்படும் விளக்கக் கடிதத்தை ஜெயமோகன் வெளியிட வேண்டும். அப்போதுதான் இதில் எல்லாம் ஒரு தொடர்ச்சி இருப்பது தெரியும். இதில் .ஆர் முருகதாஸ்- ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ஜெயமோகனின் அறம் என்ன என்று கேட்டதும் கொஞ்சம் பதட்டமாகியிருப்பார்

இப்போது வைரமுத்துவிடம் மன்னிப்பு என்ற வார்த்தையை மட்டும்தான் ஜெயமோகன் கேட்கவில்லை. மற்றபடி  ஜெயமோகனின் அந்தக் கடிதம் வைரமுத்துவிற்கு அவர் வாழ்நாளில் கிடைத்த மிகச் சிறந்த காதல் கடிதம்.

வாழ்க்கையில் தனது எந்தக் கருத்தோடும் நேர்மையற்ற ஒரு மனிதனோடு வாதிடுவதைப்போன்ற துயரம் வேறில்லை.



பிகு : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் விரைவில் குணமாகி வீடு திரும்ப வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment