Monday, July 13, 2020

அதை ஜெமோ, சாரு, மாலன் சொல்லக் கூடாது . . .


இன்று சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமான பேசு பொருள் இந்து தமிழ் இதழில் நேற்று வைரமுத்துவிற்காக வந்த சிறப்புக் கட்டுரை.

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ஒரு நபருக்கு இவ்வளவு முக்கியத்துவம் மோசமான உதாரணம் என்று பல பெண் படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். 

அதை நானும் ஏற்கிறேன்.

ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின் போது ஒரு ஒளிப்பதிவு உதவியாளரின் ஒரு துளி வியர்வை மேலே பட்டதற்கு அவரை கன்னத்தில் அறைந்து பல முறை டெட்டால் போட்டு துடைத்துக் கொண்டார் என்ற செய்தியை படித்ததிலிருந்தே அவர் மீதான மரியாதை முற்றிலுமாக போய் விட்டது. 

பாலியல் குற்றச்சாட்டுக்கள் மட்டுமல்ல, மிகப் பெரிய வியாபாரி வைரமுத்து என்பது உலகம் அறிந்த உண்மை.

திருவள்ளுவருக்கு ஹரித்வாரில் நிகழ்ந்த அசிங்கமே, சங்கி தருண் விஜயோடு வைரமுத்து கூடி குலாவியதன் விளைவே.

இரண்டு விதமான எதிர்வினைகளை பார்க்க முடிகிறது. 

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் வைரமுத்துவை காய்கிறார்கள் என்று ஒரு பார்வை. ஞானபீட விருதுக்காக சங்கிகளோடு லாபியிங் செய்தவர் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள். 

அடுத்தது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பது. இது போன்ற பாலியல் அத்து மீறல் வழக்குகளை நிரூபிப்பது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. ரஞ்சன் கோகாய் மீதான குற்றச்சாட்டு என்ன ஆனது? 

அதுவே அவர்களை உத்தமர்களாக்கி விடாது.

வைரமுத்து நிச்சயம் அப்படி ஒன்றும் உத்தம புத்திரன் அல்ல.

ஆனால் இந்த கண்டனங்களில் மூவரின் கண்டனம்தான் எனக்கு சிரிப்பை வரவழைத்தது.

சதா சர்வ காலமும் உண்மைகளை மூடி மறைத்து விட்டு மோடிக்கு வால் பிடிக்கிற, துதி பாடுகிற வார்த்தை வியாபாரி மாலன் "இந்துவின் துதிபாடல் கண்டிக்கத்தக்கது"

என்று சொல்கிறார்.

தமிழ் இலக்கிய உலகில் முத்திரை கொடுக்கும் அத்தாரிட்டி நான் மட்டுமே என்ற ஆஜான் "நாயும் நாணும்" என்று எழுதி கட்டுரை எழுதிய எல்லோரையும் கோழி முட்டை என்று வசை பாடுகிறார். சமீபத்திய கட்டுரைகள் அனைத்திலும் சாதியை வலுக்கட்டாயமாக திணித்த அவர் ஜாதிய பின்புலம் பற்றியெல்லாம் பேசுகிறார். நான் வஜனம் எழுதும் படங்களுக்கு வைரமுத்து பாடல் எழுதக்கூடாது என்று சொல்லும் தைரியம் ஆஜானுக்கு உண்டா? ஓடிப் போன திருடன் விஜய் மல்லய்யாவை "தோற்றுப் போன தொழில் முனைவர்" என்று இவர் முட்டுக் கொடுத்ததை படித்தால் நாய் மட்டுமல்ல பேயும் நாணும். 

சின்னஞ்சிறு சிறுமிகளை பாலியல் இச்சைக்கு பலியாக்கிணேன் என்று பரவசத்தோடு எழுதுகிற தமிழின் காம எழுத்தாளர் சாருவெல்லாம் உபதேசிப்பது  கொடுமையடா?

கண்டனம் தெரிவிப்பதற்கும் தகுதி உண்டு. 

1 comment: