Wednesday, July 1, 2020

இன்றை விட நாளை மேலும் . . .



இன்று எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

நிறுவனம் தோன்றி சங்கம் வருவது இயல்பு.

சங்கம் தோன்றி, அதன் இயக்கம் காரணமாக நிறுவனம் வருவது என்பது சாதனை.

அந்த சாதனை படைத்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

1951 ஆம் உண்டு உருவான சங்கத்தின் தொடர் இயக்கங்களே, 1956 ல் எல்.ஐ.சி எனும் நிறுவனத்தின் துவக்கத்திற்கான காரணமாக அமைந்தது.

அதனால்தான் கொடிய வல்லூறுகளிடமிருந்து எல்.ஐ.சி யை காக்கும் கரங்களாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திகழ்கிறது.

இன்சூரன்ஸ் அரங்கைத் தாண்டி, உழைக்கும் மக்கள் இயக்கங்களைத் தாண்டி, பேரிடர் நேரும் நேரமெல்லாம் உதவிக்கரம் அளிக்கும் இயக்கம் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பதற்கான சமீபத்திய சான்றாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்காக ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் அள்ளித் தந்தவர்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தோழர்கள் என்பதே. 

இன்றை விட நாளும் மேலும் வலிமையாக இருப்போம் என்ற நம்பிக்கையோடு எங்கள் வெற்றிப் பயணம் உற்சாகமாக தொடர்கிறது. 

அனைவருக்கும் ஏ.ஐ.ஐ.இ.ஏ அமைப்பு தின வாழ்த்துக்கள்


1 comment: