Monday, July 13, 2020

கேரள அரசியல் - டவுட்டு சாரே . . .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி அவர்களின் முக நூல் பதிவு, முழு சங்கிகளையும் சங்கிகளாக மாறிப் போன கேரள காங்கிரஸையும் தோலுரிக்கிறது. 

சங்கிகளாக மாறிப் போன கேரள காங்கிரஸ் என்பதற்கான ஒரு ஆதாரத்தை அடுத்த பதிவில் அளிக்கிறேன். 




1.தங்க கடத்தலில் CPM கட்சிக்கோ முதல்வர் பினராயி விஜயனுக்கோ தொடர்பிருந்தால் அந்த பெண்ணை அடைக்கலம் அளித்து பாதுகாத்திருக்கலாம் அல்லது விகாஷ் துபே மாதிரி என்கவுண்டர் பண்ணியிருக்கலாமே.. ஏன் ஓட விட்டிருக்கணும்.?

2. எந்தவொரு அமைப்பின் விசாரணைக்கும் தயார் என பகிரங்கமாக முதல்வர் அறிவித்த பின்னரும், மோடியின் NIA விசாரணை துவங்கியதற்கு பிறகும் பாஜக அதற்கு ஒத்துழைக்காமல் கொடி பிடிப்பது ஏன்.. அந்த கொடிகளுக்கு மத்தியில் காங்கிரஸ் தனது கொடிகளையும் சேர்த்து ஆட்டுவது ஏன்.?

3. சர்வதேச விமான நிலையங்களும், Diplomatic Passport மற்றும் Diplomatic Parcels எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது.. கேரளாவில் மட்டும் அவை மாநில அரசிடம் வழங்கப்பட்டு விட்டதா..? மாநில அரசின் பிரதிநிதிகள் கேட்டால் தலையை ஆட்டும் மத்திய அரசா இது..?

4. சர்வதேச விமான நிலையங்கள் பராமரிப்பை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மோடி எடுத்த போது, கேரளாவில் LDF மாநில அரசு அதை பராமரிக்க முன்வந்த போது "செல்லாது.. செல்லாது.. தனியார் தான் சிறப்பு" என மோடி & கோ மாநில அரசை புறக்கணித்தற்கான பின்னணி ஒருவேளை இதுதானோ..?

5. குற்றம்சாட்டப்பட்ட பெண்மணி ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணியாற்றியவர் என்பது ஊரறிந்த ரகசியம். தூதரக பணிகள் மத்திய அரசு தொடர்பானவை.. எப்போதும் CPM மத்திய ஆட்சியில் இருந்ததில்லை.. காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கே அந்த பாக்கியம் வாய்த்துள்ளதுள்ளது.. அவரை யார் நியமித்தது என இப்போதேனும் சென்னித்தாலாக்களும், உம்மன்சாண்டிகளும், சுரேந்திரன்களும் விளக்குவார்களா..?

6. 30 கிலோ தங்க கடத்தலில் எவ்வித தொடர்புமேயில்லாத LDF அரசை நோக்கி குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் இவர்கள் ஏன் ரூ.10,000 கோடி PM cares நிதி பற்றியும், போபர்ஸ், சோலார் ஊழல் உள்ளிட்ட மெகா ரகசியங்கள் குறித்தும் வெளிப்படையாக வாய் திறப்பதில்லை.. அவ்வளவு நல்லவிய்ங்களா இவங்க..?

7. மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பின்பக்கம் காத்து புடுங்கப்படுவதை தடுக்காமல், இங்கே வந்து திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்யும் புனித கூட்டணியின் நோக்கம் தான் என்ன..? கார்ப்பரேட் - கடத்தல் - முதலாளித்துவ பாசம் தவிர்த்து வேறேதும் கூட உள்ளதோ..?

8. ஓர் யானையை கல்வீசி துரத்தி விடலாம் என நினைக்கும் மூடத்தனத்திற்கும், கோவிட் 19 பிரச்னையில் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வெற்றி நடை போடும் ஓர் அரசை இப்படியான அற்ப காரணங்கள் மூலம் தனிமைப் படுத்தி விடலாம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டோ சேட்டா..?


கையூரில், புன்னப்புரவயலாரில்,
கூத்துப்பரம்பில், மலபாரில்,
விமோசன சமரத்தில்
என பலமுறை
முயற்சித்தவர்களின்
எரிந்து போன சாம்பலிலிருந்து
முளைத்த ஃபீனிக்ஸ் பறவைகள்
கேரள கம்யூனிஸ்டுகள்
என்பதை இப்போதேனும்
அறிக பிள்ளாய்..

ஆர்.பத்ரி

No comments:

Post a Comment