Wednesday, July 8, 2020

மோடியால் நின்ற திருமணம்



நேற்று  ஒரு செய்தி படித்தேன்.

உத்திரப் பிரதேசத்தில் ஒரு திருமணத்தின் போது மண மகளுக்கும் மண மகனுக்கும் இடையே ஒரு விவாதம். இந்தியாவின் பொருளாதாரம் மோடியால்தான் சீரழிந்து விட்டது என்று அரசு ஊழியரான அந்த மண மகள் சொல்ல தொழிலதிபரான மண மகன் அதை மறுத்திருக்கிறான். 

இந்த விபரம் கெட்ட ஆணோடு வாழ முடியாது என்று முடிவெடுத்து அந்த மண மகள் திருமணத்தை நிறுத்தி விட்டார் என்பதுதான் அச்செய்தி.

அச்செய்தியை பதிவு செய்யும் முன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ள இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

சம்பவம் நடந்தது உண்மைதான்.

ஆனால் இப்போதல்ல.

2017 ம் ஆண்டில் செல்லா நோட்டு பிரச்சினைக்குப் பின்பு.

ஊரும் பெயரும் சொல்லப்படாவிட்டாலும் திருமணம் நின்று போனதும் அதற்கு மண மகன் மோடி மீது வைத்திருந்த கண்மூடித்தனமான நம்பிக்கைதான் காரணம் என்பதும் உண்மை.

ஹையா, நமக்கு திருமணமாகி விட்டது என்று மோடி மோகிகள் மகிழ்ச்சி அடையலாம்.

ஆனாலும் திருந்துங்கள்.

இன்னும் கூட மோடியை நம்புகிற மூடருடன், ஏமாளியுடன், மறை கழண்டவருடன் குப்பை கொட்ட முடியாது

என்று 

இப்போது கூட முடிவெடுக்கலாம்.

இனியாவது மோடியை நம்பும் மூடத்தனத்தை கைவிட்டு திருந்துங்கள்,
உங்கள் வாழ்க்கைக்காக . . . .

No comments:

Post a Comment