Wednesday, July 15, 2020

அமிதாப் ஏன் அங்கே போனார்?

அமிதாப் பச்சனும் அவர் மகன் அபிஷேக் பச்சனும் பின்னர் ஐஸ்வர்யா ராயும் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட போது பலரும் பகடி பேசினார்கள். மணி அடித்ததும், மதுவந்தி போல அறிவியல் விளக்கம் கூறியதுமே அதற்குக் காரணம். ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள போது அதை பகடி செய்வது சரியல்ல என்பதால் அதை எழுதுவதை நான் தவிர்த்து விட்டேன்.

ஆனால் இப்போது எங்கள் நெல்லைக் கோட்டப் பொதுச் செயலாளர் தோழர் முத்துகுமாரசாமி பகிர்ந்து கொண்ட ஒரு சுவாரஸ்யமான செய்தி அமிதாப் பற்றி எழுதத் தூண்டி விட்டது.

அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் மகனோடு சேர்ந்து விட்டார்.

அது ஏன் நானாவதி மருத்துவமனை?

அமிதாப்பிற்கு மும்பையில் நான்கு பங்களாக்கள் உள்ளது. ஜுஹூவில் பங்களாவில் பதினெட்டு அறைகள் உண்டு. ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவும் (Intensive Care Unit) இருபத்தி நான்கு மணி நேரமும் இரண்டு மருத்துவர்களோடு செயல்படுகிறது. 

கொரோனா தொற்றின் அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம் என்கிற போது, அறிகுறிகள் இல்லாத அமிதாப்பும் அபிஷேக்கும் வீட்டிலேயே ஐ.சி.யு வார்டே உள்ள போது ஏன் நானாவதி மருத்துவமனைக்கு போய் சேர்கிறார்கள். 

அதிலும் அங்கே சேர்ந்த பிறகு அந்த மருத்துவமனையின் கனிவான சேவை குறித்தும் உபசரிப்பும் குறித்து அமிதாப் ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்து கொண்டே இருக்கிறார். 

நானாவதி மருத்துவமனை பற்றி கொரோனா காலத்தில் என்ன செய்திகள் உலவியது?

கொரோனா நோயாளிகளுக்கு அதீத கட்டணம் வசூலிக்கிறார்கள். பத்து பேரை சோதனை செய்தால் ஏழு பேருக்கு தொற்று இருப்பதாகச் சொல்லி மருத்துவமனையில் சேர வைத்து விடுகிறார்கள். தேவைக்கும் அதிகமான நாட்கள் தங்க வைத்து மீட்டருக்கும் மேலே வசூலித்து விடுகிறார்கள்.

இதுதான் நானாவதி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பற்றிய அறிக்கைகள். 

நானாவதி மருத்துவமனையின் பெயர் கொரோனா காலத்தில் கெட்டுப் போயிருந்த காலத்தில் அமிதாப் ஏன் அங்கே செல்ல வேண்டும். ஏன் பாராட்டு மழை பொழிந்து கொண்டே இருக்க வேண்டும்?

"சோழியன் குடுமி  சும்மா ஆடாது" என்பது இங்கேதான் நிஜமாகிறது.

நானாவதி மருத்துவமனை Radiant என்ற குழுமத்தால் நடத்தப்படுவது. 

அமிதாப் பச்சன் Radiant குழுமத்தின் முதலீட்டாளர், பங்குதாரர் மட்டுமல்ல, இயக்குனர் குழுமத்திலும் ஒருவர்.



கெட்டுப்போன மருத்துவமனையோட பெயரை மீட்டெடுக்க நல்லாவே நடிக்கிறீங்க சார், இதுக்கு கண்டிப்பா மோடி அடுத்த வருசம் தேசிய விருது கொடுத்துடுவாரு!


3 comments:

  1. அடப்பாவிகளா ? இவங்களுக்கு பணஆசை தீரவே செய்யாதா ?

    ReplyDelete
  2. அச்சச்சோ, அமிதாப்போட பென்ஷன் பணத்தை முழுசா பிடிங்கிடுவாங்களே?

    ReplyDelete