Sunday, July 26, 2020

மாரிதாஸ் அப்போ அம்போவா?

காலை முதல் முக நூலில் சூடாக உலாவிக் கொண்டிருக்கும் செய்தி இதுதான். 

இதைப் படித்த போது என் மனதில் தோன்றியதுதான் பதிவின் தலைப்பு.

எவ்வளவு கஷ்டப்பட்டு டுபாக்கூர் வீடியோ போட்டுக்கிட்டு இருக்கற ஆளு மாரிதாஸ். அவரை இப்படி அம்போன்னு கழட்டி விடறீங்களேப்பா!

பிஜேபி களமிறக்கப் போகும் அடுத்த மாரிதாஸ். இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் லைன் :

நாட்டு மாடு, இயற்கை விவசாயம், தமிழர் பாரம்பரியம், தேசியம், ஆன்மீகம்.
-----------------------------------------
நாட்டுக்காக தன் ஐபிஎஸ் பதவியையே ராஜிநாமா செய்து அரசியலில் குதிக்கும் ஓர் இளைஞர். ஒரு மசாலா சினிமாவுக்கான அற்புதமான ஒன் லைன். 26ம் தேதி காலை 11.30 மணியிலிருந்து தமிழக அரசியலுக்கான ஒன் லைனாக மாறப் போகிறது.


26ம் தேதி காலை நியூஸ் 18 தொலைக்காட்சியில் அண்ணாமலை என்கிறவரின் நேர்காணல் ஒன்று வருகிறது. நேர்காணலின் தலைப்பு ‘மோடியை ஏன் பிடிக்கும்?’. ‘ஏய்.. மொதல்ல நீ யாருடா வெண்ணை?’ என கேட்பவர்களுக்கு அதை விளக்குவதற்காகவே அடுத்த 8 மாதங்கள் ஒதுக்கப்படும். அதற்கு பிறகு ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படும். அதை கடைசியாக சொல்கிறேன்.

அண்ணாமலை என்பவர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் பிறந்தவர். 2011ம் வருடத்தில் ஐபிஎஸ் பதவிக்கு வந்தவர். கூடவே பொறியியல் படிப்பும் படித்தவர். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் வேலை பார்த்தார். பல சினிமாத்தன அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். அவருக்கு அங்கு சூட்டப்பட்ட பட்டப்பெயரே உடுப்பியின் சிங்கம் என்பதுதான். வழக்கம்போல் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பேசி இளைஞர்களே எதிர்காலம் என்றும் படித்தால் முன்னேறலாம் என்றும் (எங்கேயே கேட்டா மாதிரி இருக்கா) முழங்கிக் கொண்டிருந்தவர். சூப்பரிண்டெண்ட்டாக இருந்து கடகடவென டிஸிபி ஆகும் உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டவர். அக்டோபர் 2018ல் டிசிபி ஆனவர், மே 2019ல் வேலையை ராஜிநாமா செய்துவிட்டார். ஏன்? மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாம். வாட் எ ட்விஸ்ட்? எதாவது ஃப்ளாஷ் பேக் இருக்குமே? இருக்கிறது.

வேலையை ராஜினாமா செய்ததும் தன் நண்பர்களுக்கு காரணத்தை விளக்கி கடிதம் எழுதியிருக்கிறார். வரலாறு முக்கியம் அல்லவா? அதாவது 2018ம் ஆண்டில் அவர் கைலாச மலைக்கு ஒரு ‘ஆன்மிக’ பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர் ஞானம் அடைந்திருக்கிறார். என்ன ஞானம்? அவருடைய நண்பரான மதுக்கர் ஷெட்டி என்பவர் இறந்திருக்கிறார். ஏனென்றால் மதுகர் ஷெட்டி நிறைய நல்ல விஷயங்கள் செய்ய முயன்றாராம். ஆனால் அவரின் வேலையால் முடியவில்லையாம். அவருடைய எண்ணங்கள் பலிக்காமலே இறந்து போய்விட்டாராம். அதை தாளமுடியாமல், அவரின் கனவுகளையும் நிறைவேற்ற பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார் அண்ணாமலை.

போலீஸ் பதவிக்கும் ஒரு back story இருக்க வேண்டுமே?

ஆம். மும்பை தாக்குதல்தான் ஐபிஎஸ் ஆக வைத்ததாம்.

வாவ்!

ராஜிநாமாவுக்கு பிறகு பாருங்கள், நம் பத்திரிகைகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஈலோகத்திலேயே வேலையை ராஜிநாமா பண்ணும் போலீஸ்கார் அண்ணாமலை மட்டுமே என்பதால் அவரை சுற்றி சுற்றி மொய்த்து நேர்காணல் நடத்துகின்றன. செய்திகள் போடுகின்றன. ‘சிங்கம்’ அண்ணாமலை என்றெல்லாம் தலைப்பு சூட்டி அழகு பார்க்கின்றன. பிறகு ஒரு முக்கியமான தகவலை அண்ணாமலை சொல்கிறார். நாம் யாருமே எதிர்பார்க்காத விஷயம். அரசியலில் குதிக்கப் போவதாக அறிவிக்கிறார். சரி, எந்த பக்கத்து கிணற்றில் குதிக்கப் போகிறார் என கேட்டால், தமிழ்நாட்டுப் பக்கம் என்றும் சொல்லியிருக்கிறார். ‘அதென்ன சார்... நீங்க கர்நாடகாலதான ஃபேமஸ்.. அங்கேயே குதிக்க வேண்டியதுதானே’ என கேட்கலாம். உத்தரவுக்கு ஏற்பதானே குதிக்க முடியும்... இஷ்டத்துக்கு குதித்தால் மண்டை சிதறிவிடுமே!

அதாவது அவர் ஒரு தமிழன் என்பதால், தமிழ்நாடு பிழைக்க வேண்டுமென்பதால், தமிழர்களை உலுக்கி எழுப்ப வேண்டுமென்பதால் கர்நாடகாவில் இந்திய அரசுப்பதவியிலிருந்துவிட்டு இப்போது கிளம்பி வருகிறார்.

என்ன அரசியல் செய்யப் போகிறார்? அதெல்லாம் தெரியவில்லை. ஆனால் சாரின் ஒரு நேர்காணலை படித்துக் கொண்டிருந்தபோது பித்தளை பளீரென்று பல்லிளித்தது.

காவல்துறையில் என்ன சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என கேட்டதற்கு இன்னும் நிறைய நிதி ஒதுக்க வேண்டும் என்கிற அகிம்சையான கருத்துகளை உதிர்த்துவிட்டு முக்கியமான ஒரு கருத்தையும் குறிப்பிடுகிறார். ‘ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் சப் இன்ஸ்பெக்டரும் மெரிட்டின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்கிறார். மெரிட்! என்ன ஒரு தெய்வீகமான வார்த்தை?

அடுத்ததாக சிஏஏ இந்தியாவுக்கு அவசியம், ஜேஎன்யூவில் மாணவர்களை அரசியல்வாதிகள் படிக்க விடாமல் செய்கிறார்கள், நிறைய போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன (எதை போலிச் செய்தி என்கிறார் என்பது தெரியும்தானே) போன்ற முத்துகளை உதிர்க்கிறார். பிறகு திபுதிபுவென ஓடிப் போய் பனைமரத்துக்கடியில் பால்(!) குடிக்கத் தொடங்குகிறார். தனக்குப் பிடித்த ஆகச்சிறந்த தலைவர் மோடி என சொல்லி பால் வழிய புன்னகைக்கிறார்.

ஆகவே நியூஸ்18 முதல் எல்லா ஊடகங்களும் காலி செய்யப்படுவதற்கான வேலைத்திட்டம் இவர்தான். அடுத்த தேர்தலை நோக்கி தமிழகத்தில் கூவிக்கூவி விற்கப்படப் போகிறவரும் இவர்தான். புது புது முகங்களும் இளைஞர்களும் என பாஜக தொடர்ந்து அறிமுகபப்டுத்தி வேலை செய்து வளர்த்துவிட்டுக் கொண்டிருக்கும்போதும் நம் கட்சிகள் எல்லாமும் பழைய பாணி மாவையே அரைத்துக் கொண்டிருப்பதெல்லாம் என்ன ரகத்தில் சேர்ப்பது என்பதே தெரியவில்லை.

மோடிக்கு டீ விற்ற கதை போல, ‘தமிழக கிராமத்தில் பிறந்த ஒருவர், போராடி படித்து போலீஸ் ஆகி, நேர்மையுடன் பணியாற்றி ராஜிநாமா செய்து இயற்கை விவசாயத்துக்கு திரும்பி’ என எல்லா தேவையான attractive brands-டன் ஒரு ஆள் களமிறக்கப்படுகிறார். இந்த நபரை பற்றி நான் எழுதுவது இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கும். ஏனெனில் இதற்கு பிறகு எல்லாரும் பேசப் போகிறீர்கள். திரும்ப பாஜக narrativeதான் உங்களின் narrative ஆக இருக்கப் போகிறது. நம்மால் இருப்பதையும் கணிக்க முடியாது. புதிதாகவும் யோசிக்க முடியாது. இன்னும் அதிகமாக இந்த நபரை பற்றி பேசிப்பேசி நாம் வளர்த்துவிடுவோம். பாஜகவே நாம் என்ன பேச வேண்டுமென இந்த நொடி வரை முடிவு செய்கிறான். நாமும் அதையே செய்கிறோம். ஆகவே,

ஜெய் அண்ணாமலை, ஜெய் தமிழ், ஜெய் பாரதம்!

ஆங். . கடைசியில் சொல்கிறேன் என சொல்லி இருந்தேனே, ஒரு ட்விஸ்ட். அது என்ன தெரியுமா? பாண்டியன், மூன்று முடிச்சு, கொடி பறக்குது, தர்பார், போன்ற சூப்பர் cop படங்களில் நடித்த ஆன்மிக ரஜினிகாந்த், தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலையைத்தான் காட்டுவார்.

போலோ பாரத் மாதா கீ......

No comments:

Post a Comment