Monday, July 27, 2020

தீயவர்க்கு துணை நிற்றல் தகுமோ?




மிகவும் கோபமும் எரிச்சலும் ஊட்டிய செய்தி அது.

அடுக்கு மாடி குடியிருப்பொன்றில்  இன்னொருவர் வீட்டின் வாகன நிறுத்தும் இடத்தை கொஞ்ச நாள் பயன்படுத்துகிறேன் என்று கேட்டு அதனை அப்படியே ஆக்கிரமித்துக் கொள்கிறான் ஒருவன். அந்த இடத்தை மீண்டும் கேட்கிறார்கள். தர மறுக்கிறான். வாடகையாவது கொடு என்று கேட்கிறார்கள். அதையும் மறுக்கிறான்.

அதன் பின்பு அந்த உரிமையாளருக்கு, அவர்கள் ஒரு பெண்மணி, தொடர்ச்சியாக பிரச்சினைகள் வருகிறது. அந்த வீட்டு வாசலில் யாரோ அன்றாடம் சிறுநீர் கழித்து விட்டு போகிறார்கள். யார் என்பதை கண்காணிக்க சிசி டிவி காமெரா பொறுத்துகிறார்கள். அந்த அநாகரீகச் செயலை செய்தவன் வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்தவன் என்று தெரிய வருகிறது. வேறு சில ஆபாச வேலைகளையும் அவன் செய்தான் என்பது சிசி டிவி மூலம் தெரிய வருகிறது.

அந்த பெண்மணியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். அந்த அநாகரீகச் செயலையும் யூட்யூபில் பதிவேற்றுகிறார்கள்.  அதன் பின்பு அவர்களுக்கு  பிரச்சினை வலுக்கிறது. அந்த அநாகரீகப் பேர்வழிக்கு ஆதரவாக அவன் சார்ந்த அமைப்பின் தலைமைப் பீடத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கை திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறார்கள்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இதர குடியிருப்போரும் அழுத்தம் தருகிறார்கள். புகாரை வாபஸ் பெறச் சொல்பவர்கள் அதற்கான காரணமாக சொல்வது இரண்டு விஷயங்களை.

கொரோனா காலத்தில் அந்த அநாகரீகப் பேர்வழியின் சேவை சமூகத்திற்கு மிகவும் தேவை. அதனால் திரும்பப் பெறு. ஆம். அந்த அயோக்கியன் ஒரு மருத்துவர்.

அடுத்த காரணம், அவன் ஒரு அமைப்பின் அகில இந்தியத் தலைவர். ஆகவே அந்த அமைப்பின் நற்பெயர் பாதிக்கப்படக் கூடாது. ஆம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ரௌடி மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி யின் அகில இந்தியத் தலைவராம் அந்த அயோக்கியன் டாக்டர் சுப்பையா. காவிக் கயவன் என்ற வார்த்தைக்கு கச்சிதமாக பொருந்துகிறான் அல்லவா!

கடைசியில் வேறு வழியின்றி புகார் திரும்பப் பெறப்பட்டு விட்டது. கோழை சாவர்க்கர் பாரம்பரியப்படி மன்னிப்பு கேட்டு விட்டானாம்.

இதிலே எனக்கு எரிச்சலூட்டிய விஷயம் அந்த அயோக்கியனுக்கு ஆதரவாக புகாரை திரும்பப் பெற வைக்க நிர்ப்பந்தம் அளித்த அந்த குடியிருப்புவாசிகள்தான்.  ஆர்.எஸ்,எஸ் அமைப்போ, ஏ.பி.வி.பி யோ எந்த அளவு வேண்டுமானால் கீழிறங்கும். ஏனென்றால் அதுதான் அவர்களின் குணாம்சம். அயோக்கியன் சுப்பையாவை அமைப்பிலிருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகளை அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. சிசிடிவி பதிவுகள் போலியானது என்று கூட ஏபிவிபி யின் பொதுச்செயலாளர் நிதி திரிபாதி என்பவன் சொல்லியுள்ளான். காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் சதி என்றும் பேசியுள்ளான். அப்படி அவன் பேசா விட்டால்தான் அதிசயம்.

குடியிருப்பு வாசிகளுக்கு என்ன வந்தது? ஆளும் கட்சி மிரட்டல்களுக்கு அடிபணிந்து விட்டார்களா? அவனை அந்த குடியிருப்பிலிருந்து அகற்றுவதற்குப் பதிலாக நாமெல்லாம் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வாழ வேண்டும் என்று அந்த அயோக்கியனோடு சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இது போன்ற அநாகரீக, ஆபாசச் செயல்களை தங்கள் வீட்டின் முன்னால், தங்கள் குடும்பப் பெண்கள் முன்னால் செய்தால் அப்போதும் இப்படித்தான் புகாரை திரும்பப் பெறச் சொல்லி வலியுறுத்துவார்களா?

நல்லவர்களை ஆதரிக்காவிட்டால் கூட பரவாயில்லை. தீயவர்களுக்கு துணை போகாமலாவது இருக்கலாம். ஆனால் யார் வீட்டு எழவோ, யாருக்கோ நேர்ந்த இழிவோ, நமக்கென்ன என்றிருந்தால் அந்த அலட்சியமே அவர்களையும் அதே பிரச்சினையை சந்திக்க வைக்கும், விரைவாக.


இதோ இந்த பதிவை எழுதி முடிக்கும் நேரம் இத்தகவலைப் பார்த்தேன். பகிரங்கமாக மிரட்டுகிற கல்யாணராமன் எனும் அராஜகப் பேர்வழி பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அவனது முந்தைய ட்வீட்டுகள் இதோ.


நாம் மௌனமாக இருந்தால் இன்று கொல்வேன் என்று சொல்கிற இவன் நாளை கொலையும் செய்வான். பிணம் விழும் வரை காத்திருக்கப் போகிறோமோ?


No comments:

Post a Comment