Wednesday, July 22, 2020

இதையும் இழிவென்று சொல்வீரோ?


ஓவியர் தோழர் ஸ்ரீரசா அவர்களின் முக நூல் பக்கத்தில் படித்தது இந்த கேள்வி பதில். 

கேள்வி: சைவர்கள் வைணவக் கோயிலுக்கு உதவுவதுபோல சைவ ஸ்தல பணிகளுக்கு வைணவர்கள் ஏன் உதவுவது இல்லை? நீங்கள் சிவன் கோயில் திருப் பணிகளுக்கு உதவி செய்வீர்களா?

ஜீயர் பதில்: நான் சிவன் கோயிலுக்கு உதவி செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன்தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தால் சங்கரனுக்கும் (சிவ பெருமானுக்கு) நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான் தபஸ் பண்ணி அந்த பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும் அதேபோல, சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியில் தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றாருன்னும் சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தவஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். 

ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர் பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர், அவரை வழிபடற நாங்களும் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாக கொண்டு வழிபட்டு, மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தர மாட்டேன்”


(‘கல்கி’ - 11.4.1982)


இவ்வளவையும் சொல்லியிருப்பவர் வைணவக் குருவான ஜீயர் - பேட்டி கண்டு வெளியிட்டதோ ‘கல்கி’ இதழ்!

இது ஏதோ முப்பத்தி எட்டு வருடத்திற்கு முந்தைய கருத்து என்று கருத வேண்டாம். 

எங்கள் நிறுவனத்தில் பணி புரிகிற ஒருவர் இதே கருத்தை இன்னும் அழுத்தமாக "நாராயணனை துதித்த வாயால் வேறு யாரையும் கடவுள் என்று சொல்ல மாட்டேன்" என்று சொல்லியிருந்தார். அதற்கு சான்றாக ஏதோ பாசுரம் எல்லாம் வேறு போட்டிருந்தார். "உங்களுக்கு நாராயணனைத் தவிர வேறு யாரும் கடவுள் கிடையாது. எங்களுக்கு நாராயணனும் கடவுள் கிடையாது. அவ்வளவுதான் வித்தியாசம். அப்படி இருக்கையில் ஏன் நாத்திகர்களை  எப்போதும் திட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை.

நான் பக்தர்களை மட்டுமே (சங்கிகளை அல்ல) ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறேன்.

சிவன் கோயிலுக்கு போனா புத்தி கெட்டுப் போகும் என்று ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் சொன்னது சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது அவர் சிவனையும் மற்ற கடவுள்களையும் இழிவு படுத்தி விட்டார் என்று குற்றம் சொல்வீர்களா?

பிகு: ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தைக் கட்டியவர்தான் அந்த ஜீயர். அவரது படத்தை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை.

சின்ன ஜீயர் என்று ஒருவரது படம் கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ரௌடி மாணவர் அணியான ஏ.பி.வி.பி மூலமாக பக்தியை வளர்க்கும் பணியில் ஈடுபடுகிறார் என்று தகவல் வந்தது. 

ரைட்டு, இது ரிஸ்கு என்று  தசாவதாரம் திரைப்படக் காட்சியை முகப்பில் வைத்து விட்டேன்.


2 comments:

  1. அரிய தேடல்
    அருமையான பதிவு

    ReplyDelete
  2. மதம் ஒரு அபிள்

    ReplyDelete