Monday, July 20, 2020

கோவையில் பேரழிவை விழைவது யார்?

எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் முகநூல் பதிவை கொஞ்சம் முன் பின் மாற்றி பகிர்ந்து கொண்டுள்ளேன்.



கோவையில் ஒரு பக்கம் 70 சதவீத பவுண்டரிகள் வட இந்தியர்கள் வெளியேறியதால் நின்று போயுள்ளன. சிறுமுதலாளிகள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்து உள்ளனர்.

மத்திய அரசின் குளறுபடியான அரசாணைகளால் கோவை தொழிற்சாலைகளுக்கு வர வேண்டிய 10,000 கோடி ரூபாய் கடனில் 1,000 கோடி ரூபாய் கூட இன்னும் வங்கிகளால் உறுதி செய்யப்படவில்லை. நடுத்தர ஆலைகள் கூட முடங்கி உள்ளன.

பல் வேறு தொழிலாளர்கள், கடைகளின் வேலையாட்கள், உணவங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், எலெக்ட்ரீஷ்யன், கட்டிடத் தொழிலாளர்கள் போன்றவர்கள் படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல குடும்பங்கள் பால் வாங்கப் பணமில்லாமல் கடுங்காபிக்கு மாறிவிட்டன.

அதே நேரம் கோவை மாநகராட்சி 50 கோடி ரூபாய் செலவில் குளங்களை அழகு படுத்தும் வேலையை இரவு பகலாகச் செய்து வருகிறது. குளக்கரைகளில் இருந்து வெளியேற்றப் பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் இல்லாமல், செல் போன் டவர் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் எட்டாக்கையான இடங்களில் தவித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம்

கோவையில் ஆறு கோவில்கள் முன்பு, வேலை வளைப்பது, எரியும் டயரை வீசுவது என்று நாச வேலைகள் செய்து உள்ளார்கள். யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இரண்டு நாள் முன்பு பெரியார் சிலைக்குக் காவி சாயம் பூசப்பட்டது. அதற்குப் பத்து நாள் முன்பு இந்து ஒருவர் இரண்டு கோவில்கள் முன்னால் பன்றி இறைச்சியை வீசினார். அவர் மனநோயாளி என்று சொல்லப்பட்டது.

யாரோ பேரழிவை விரும்புகிறார்கள்.

முதல் பக்கத்து நிலைமையை திசை திருப்பத்தான் இரண்டாம் பக்க நிகழ்வுகளும் பேரழிவின் விழைவுமா?

இவ்வளவு கீழ்த்தரமானவர்கள் சங்கிகள் மட்டும்தானே!

1 comment: