மூடத்தனத்திற்கு
அளவில்லாமல் போய் விட்டது.
சுதந்திரமாய்
பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்து ஒரு பையில் அடைத்து வைப்பதும்
பிறகு அவற்றை சுதந்திரமாய் பறக்க விடுவது போல சீன் போடுவதும் . . .
சீ,
சீ அறிவு கெட்ட தனமாக இருக்கிறது . . .
உங்கள்
போட்டோ போஸ் வெறிக்காக பிடித்து அடைக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகளில் செத்துப் போனது
எவ்வளவு என்று சொல்ல முடியுமா?
உங்களின்
கல்வித்தகுதி குறித்த கேள்விக்கே இன்னும் பதில் இல்லை. தகவல் அறியும் சட்டத்தையே நீர்த்துப்
போக வைத்து விட்டீர்கள். இதற்கா பதில் கிடைக்கும்!
ஆமாம்,
வண்ணத்துப் பூச்சிகளுக்காக இந்த ராதா ராஜன் அம்மையார் போன்ற மிருக வதை எதிர்ப்பாளர்கள்
குரல் கொடுக்க மாட்டார்களா? ஓ ஜல்லிக்கட்டை எதிர்த்தால்தான் அவர்களுக்கு காசு கிடைக்குமா?
சரி,
இதெல்லாம் போகட்டும், வண்ணத்து பூச்சிகளுக்கு சுதந்திரம் அளித்ததாக பீற்றிக் கொள்ளும்
நீங்கள் திறந்த வெளிச் சிறைவாசிகளாக மாற்றப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு எப்போது சுதந்திரம்
அளிக்கப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment