மோடியின்
”ஹௌடி மோடி” கூத்திற்கு வந்த கூட்டம் போல வேறு எந்த இந்தியத் தலைவருக்கும் எந்த வெளி
நாட்டிலும் வந்தது இல்லை என்று சங்கிகள் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வேளையில் பலர்
பழைய ஆவணங்களை தேடி எடுத்து மோடிக்கு வந்ததை விட மிக அதிகமான கூட்டம் நேருவிற்கு அமெரிக்கா,
சோவியத் யூனியன் என்று இரண்டு நாடுகளில் மட்டுமல்ல ஜப்பானிலும் வந்தது என்று புகைப்படங்களோடு நிரூபித்து
விட்டார்கள்.
நேருவை
வரவேற்க அமெரிக்க ஜனாதிபதி கென்னடி விமான நிலையத்திற்கே
சென்றுள்ளார். என்னத்தான் மோடி ட்ரம்பிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் அப்படிப்பட்ட
மரியாதை எதையும் ட்ரம்ப் மோடிக்கு அளிக்கவில்லை என்பதை சங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்
மோடிக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள், என்.ஆர்.ஐ கள்,
அமெரிக்கா சென்றாலும் சங்கிகளாக வாழ்பவர்கள். பிரியாணி, க்வார்ட்டர்க்கு வரும் கூட்டம்
போன்றவர்கள். ஆனால் நேருவிற்கு வந்தவர்களோ
அமெரிக்கர்கள், ரஷ்யர்கள். தானா சேர்ந்த கூட்டம்.
இத்தகவலினால்
சங்கிகள் மனமுடைந்து போக வேண்டாம்.
மோடியும்
சாதனை படைத்துள்ளார்.
மோடியைப்
போல வேறு எந்த வெளிநாட்டுத் தலைவருக்கும் மோடியைப் போல எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
இந்த அளவில் மக்கள் திரண்டது கிடையாதாம். அது தானா சேர்ந்த கூட்டம்.
வேண்டுமானால் இந்த காணொளியைப் பாருங்கள்
அந்த
வகையில் மோடிதான் டாப்.
No comments:
Post a Comment