Tuesday, September 3, 2019

ஜெர்மனி போனாலும் திருந்த மாட்டானுங்க . . .



ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் இந்திய உணவுத் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

ஜெர்மனியில் செயல்படும் பல மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புக்கள் தங்கள் மாநிலத்தின் சிறப்பு உணவுகளை தயாரிக்க முன் வந்துள்ளன. 

அதிலே கேரள சமாஜம் என்ற அமைப்பு, கேரள மாநிலத்தின் சிறப்பு உணவுகள் அடைந்த ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. அதிலே "பரோட்டா மற்றும் மாட்டுக் கறி" யும் இருந்துள்ளது.

அதைப் பார்த்து ஜெர்மன் வாழ் சங்கிகள் கலாட்டா செய்துள்ளனர். ஜெர்மனி போலீஸ் அங்கே வந்து "இது ஜெர்மனி, இங்கே எல்லா உணவுகளும் சாப்பிடலாம். நீங்கள் கலாட்டா செய்ய இது ஒன்றும் இந்தியா அல்ல, உள்ளே தூக்கிப் போட்டு விடுவோம்" என்றதற்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

ஆனாலும் கூட ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் கேட்டுக் கொண்டதால் கேரள சமாஜம் தங்களின் பட்டியலில் இருந்து "பரோட்டா - மாட்டுக் கறி" யை நீக்கி விட்டது. அமைதியை விரும்பும் கேரள மக்கள் அவசியமற்ற பிரச்சினையை விரும்பவில்லை என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் எங்கள் சித்தாந்தம் என்றும் கூறி சங்கிகள் முகத்தில் அடித்து விட்டது. 

சங்கிங்கள் ஜெர்மனிக்குப் போனாலும் கலவர மோடில்தான் எப்போதும் இருப்பார்கள் என்பதை இச்சம்பவமும் நிரூபித்து விட்டது.


6 comments:

  1. கேரளாவின் பிரபல உணவு புட்டு, கடலைக்கறிதான். பரோட்டா - மாட்டுக்கறி அல்ல

    ReplyDelete
    Replies
    1. இப்படி அவசரம் அவசரமா ஏதாவது ஒரு அனாமதேயம் வரும் என்று எதிர்பார்த்தேன். //அதிலே "பரோட்டா மற்றும் மாட்டுக் கறி" யும் இருந்துள்ளது.// பின்னூட்டம் எழுதும் முன்பாக ஒழுங்கா படிக்கனும்.

      அது மட்டுமல்ல, புட்டு-கடலைக்கறி காலை உணவென்றால் நான் பார்த்த வரை "பரோட்டா - மாட்டுக்கறி" இரவு உணவு. பெரும்பாலான கேரள உணவு விடுதிகளில் இந்த காம்பினேஷன் கிடைக்கும்.

      பல முறை கேரளா சென்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன்

      Delete
  2. Parotta & Beef - Yummy food

    ReplyDelete
  3. அந்த விழாவில் பன்றிக்கறியும், வட கிழக்கு மாநில சார்பில் நாய்க்கறியும் வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் ?

    ReplyDelete
    Replies
    1. சங்கிங்க செத்துருப்பானுங்க!!!

      Delete