எத்தனை தனியார் நிறுவனங்கள் வந்தாலும் எல்ஐசியின் சாதனையை நெருங்க முடியாது
தென்மண்டல மேலாளர் பெருமிதம்
சென்னை,செப்.3- எத்தனை தனியார் காப்பீட்டு நிறு வனங்கள் வந்தாலும் எல்ஐசியின் சாத னையை நெருங்க முடியாது என்று எல்ஐசி தென்மண்டல மேலாளர் கே.கதிரேசன் பெருமிதத்துடன் கூறினார். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) தொடங்கப்பட்டு இந்த வாரம் 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் செவ்வாயன்று (செப்.3) செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
எல்ஐசி தொடங்கப்பட்டு கடந்த 63 ஆண்டு களில் பல மைல்கற்களைக் கடந்துள்ளது. நாள்தோறும் இந்த நிறுவனம் வாடிக்கை யாளர்கள் ஆதரவோடு மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது. நாடு முழுவதும் இன்று எல்ஐசிக்கு 4851 அலுவலகங்களும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் 12லட்சம் முகவர்களும் உள்ளனர். சுமார் 29 கோடி பாலிசிகள் உள்ளன. உலகில் நான்காவது மிகப்பெரிய நாட்டின் மக்கள் தொகைக்கு இது சமம்.
கிளைம்களுக்கு தீர்வு காண்பதில் முதலிடம்
குழந்தைகள் முதல் ஓய்வூதியதாரர்கள் வரை 32 காப்பீட்டுத்திட்டங்களை எல்ஐசி செயல்படுத்தி வருகிறது. வாடிக்கை யாளர்களுக்கு சிறந்த திட்டங்களையும் சிறப்பான சேவையையும் ஆற்றி வருகிறது. 2018-19 ஆம் நிதியாண்டில் எல்ஐசி ரூ. 1லட்சத்து 63ஆயிரம் லட்சம் கோடிக்கு கிளைம்களுக்கு தீர்வு கண்டுள்ளது. இறந்தவர்களின் கிளைம்களில் 98.2 விழுக்காடும் முதிர்வு கால கிளைம்களில் 92.9 விழுக்காடும் தீர்வு கண்டுள்ளது. இது எந்தவொரு காப்பீட்டு நிறுவனமும் செய் திராத சாதனையாகும்.
ஆன்லைன் திட்டங்கள்
இன்று நாட்டில் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இருந்தாலும் இந்த துறையில் எல்ஐசி சந்தை மதிப்பு 74 விழுக்காடு ஆகும். எல்ஐசி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது. ‘மை எல்ஐசி’ என்ற செயலி மூலமாகவும் ஆன்லைன் வாயிலாகவும் எல்ஐசி திட்டங்களில் மக்கள் சேரலாம் பணம் செலுத்தலாம். இந்த வசதி யை தற்போது 1.1 கோடி வாடிக்கை யாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதைத்தவிர லட்சத்திற்கும் மேற்பட்டோர் எல்ஐசி டிஜிட்டல் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள்.
வங்கித்துறையில்...
பொருளாதார மந்த நிலை நிலவும் போதிலும் எல்ஐசி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மிகவும் நலிவடைந்த ஐடிபிஐ வங்கியை எல்ஐசி பல்லாயிரம் கோடி ரூபாய் செலுத்தி வாங்கியுள்ளபோதிலும் எல்ஐசி தனது அனுபவத்தால் அந்த வங்கியை லாப கரமான நிலைக்கு நிச்சயம் கொண்டு வரும். எல்ஐசி அனைத்து நிதி சேவைகளிலும் ஈடுபட்டாலும் வங்கி சேவையில் ஈடுபட வில்லை. தற்போது ஐடிபிஐ வங்கியைக் கையகப்படுத்தியதன் வாயிலாக அந்த துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளது.
தென்மண்டல சாதனை
தென்மண்டலத்தில் எல்ஐசி 2 கோடியே 8 லட்சம் பாலிசிதாரர்களை கொண்டுள் ளது. நடப்பாண்டில் இதுவரை 7லட்சத்து 6ஆயிரத்து 965 கிளைம்களுக்கு தீர்வு கண்டு ரூ.4151.78 கோடி வழங்கி யுள்ளது. இதில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 960 முதிர்வடைந்த பாலிசிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 817 கோடியே 37லட்சம் வழங்கி யுள்ளது.23ஆயிரத்து 5 வாடிக்கை யாளர்களுக்கு அவர்களது இறப்புக்குப் பின் நியமன தாரர்களுக்கு ரூ.334.41 கோடி வழங்கப்பட்டுள்ளது. தென் மண்டல எல்ஐசி நடப்பாண்டு ஓய்வூதியம் மற்றும் குழு காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதால் கிடைத்த ரூ.20ஆயிரம் கோடி உபரி நிதியைத் தலைமை அலுவலகத்திற்கு வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள 8 மண்டலங்களில் தமிழ்நாடு, கேரளாவை உள்ளடக்கிய தென்மண்டலம் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ள மண்டலமாகும்.
புதிய திட்டங்கள்
கடந்த பல ஆண்டுகளாக எல்ஐசி வாடிக்கையாளர்களாக உள்ளவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பது அவர் களைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களாக தக்கவைப்பது உள்ளிட்ட வாடிக்கையாளர் உறவு விரிவாக்கத் திட்டத்தையும் எல்ஐசி தொடங்கியுள்ளது. பாலிசி தொகையை கட்டுவதற்கு தொலைபேசி மூலம் நினைவூட்டுகிறது. நடப்பாண்டு எல்ஐசி அறிமுகம் செய்துள்ள ‘ஜீவன் அமர்’ என்ற புதிய பாலிசி திட்டம் மிகவும் விலை மலி வானது, அதிக பயன்களைத் தரக்கூடியது. ஆன்லைன் மூலமாக டெக் டெர்ம் என்ற புதிய பாலிசியை எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சக்கரபாணி (மார்க்கெட்டிங் பிரிவு தலைவர்) சூசை மாணிக்கம் (மூத்த மேலாளர்,சென்னை -1) பிராந்திய மேலாளர் (நிறுவன மக்கள் தொடர்பு) சத்தியவதி உள்ளிட்டோர் உட னிருந்தனர்.
63 ஆண்டுகளை நிறைவு செய்த எல்ஐசியின் சாதனைகளை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கிய தென்மண்டல மேலாளர் கே.கதிரேசன் உள்ளிட்ட அதிகாரிகள், சிறப்பு போஸ்டரை வெளியிட்டனர்.
நன்றி - தீக்கதிர் 04.09.2019
அம்பானி அதனிக்கு கொடுக்க நாளாகாது....
ReplyDeleteநாட்டை நாறடிக்காமல் விடமாட்டோம் என்போர்க்கு யார் தான் சொல்வது?