எல்.ஐ.சி
யில் எட்டாயிரம் பேருக்கு வேலை
இது
ஒரு நற்செய்தி.
எல்.ஐ.சி
நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு எட்டாயிரம் பேரை புதிதாக பணி நியமனம் செய்யப் போகிறார்கள்
என்பதை விட வேறு நற்செய்தி இருக்க முடியுமா என்ன?
நீண்ட
காலமாக பணி நியமனம் இல்லாதிருந்த எல்.ஐ.சி யில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
தொடர் முயற்சிகளின் விளைவாக, நிறுவனத்தில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டியதன் தேவையை
நிர்வாகம் ஒப்புக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
உதவியாளர்
பணிக்கான கல்வித் தகுதி - பட்டதாரியாக இருந்திடல்
வேண்டும்.
வயது
வரம்பு: 01.09.2019 அன்று
குறைந்த
பட்சம் 18.
அதிகபட்சம் 30
அதிகபட்ச வயதில் சலுகை
இதர பிற்படுத்தப்பட்டோர் 3
எஸ்.ஸி/எஸ்.டி 5
மாற்றுத்
திறனாளிகளுக்கு கூடுதல் பத்து ஆண்டுகள்.
முன்னாள்
ராணுவத்தினர் : பாதுகாப்புப் படைக்காலம் மற்றும் கூடுதல் மூன்றாண்டுகள், அதிகபட்ச வயது
45.
முன்னாள்
ராணுவத்தினர் (எஸ்.சி/எஸ்.டி அதிகபட்ச வயது 50)
முன்னாள்
ராணுவத்தினர் (ஓ.பி.சி அதிகபட்ச வயது 48 )
கோட்ட
வாரியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆன்லைன்
மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
www.licindia.in இணைய தளத்திற்கு சென்று அதில்
careers பகுதிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
எந்தெந்த
கோட்டத்தில் எவ்வளவு காலியிடங்கள் என்பதும் அங்கே தெரியும்.
தமிழகம்
மற்றும் கேரளா உள்ளடங்கிய தென் மண்டலத்தில் மொத்தம் நானூறு காலியிடங்கள். கோட்ட வாரியான
விபரங்கள் கடைசியில் உள்ளது.
விண்ணப்பிப்பதற்கான
கடைசி நாள் 01.10.2019
Preliminary, Main என்று இரண்டு கட்ட தேர்வு உண்டு.
முதல்
சுற்று தேர்வு நாள் 21,22
அக்டோபர், 2019.
எந்த
கோட்டத்திற்கு விண்ணப்பிக்கிறார்களோ, அந்த கோட்டத்துக்கு உட்பட்ட தேர்வு மையங்களில்தான்
தேர்வு எழுத வேண்டும். உதாரணமாக எங்கள் வேலூர் கோட்டத்திற்கு விண்ணப்பித்தால் வேலூர்
மற்றும் புதுச்சேரியில்தான் தேர்வு எழுத வேண்டும்.
எல்.ஐ.சி
போன்ற மகத்தான நிறுவனத்தில் இணைவதற்கான நல்ல வாய்ப்பு இது. உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள்,
உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு தகவல் அளித்து விண்ணப்பிக்கச் சொல்லவும்.
மேலும்
ஒரு முக்கியச் செய்தி.
தமிழகத்தில்
எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் அனைத்து கோட்டங்களிலும்
தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த
விபரங்கள் கீழே உள்ளது. அதிலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு வகுப்புக்களில்
கலந்து கொண்டு பயனடையவும்.
தென்
மண்டலத்தில் காலியிடங்கள் (கோட்ட வாரியாக)
சென்னை
|
20
|
வேலூர்
|
18
|
சேலம்
|
45
|
கோவை
|
39
|
மதுரை
|
58
|
நெல்லை
|
21
|
தஞ்சை
|
34
|
திருவனந்தபுரம்
|
20
|
திருச்சூர்
|
33
|
எர்ணாகுளம்
|
10
|
கோட்டயம்
|
43
|
கோழிக்கோடு
|
59
|
|
|
எல்.ஐ.சி
யில் இணைவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Very useful information.
ReplyDeleteThank you